சிறுமுடித் தலை
குஞ்சமென அசைய
பிட்ட்டர்ர பிட்ட்டர்ர பிட்ட்டர்ர்
என்ற தனி ராகத்தை இசைத்துக் கொண்டிருக்கும்
சாம்பல் வண்ண சுள்ளப் பறவை
செஸ்டர் மரக்கிளையிலிருந்தபடி
மிணுக்கும் சிறுமணிக் கண்கள் வழியே
திண்ணையிலிருந்து
அண்ணாந்து பார்ப்பவனை
புதுமையெனப் பார்க்கிறது.
…
* *Tufted Titmouse – வட அமெரிக்காவில் காணப்படும் தனிப்பறவை. சிறுகுடுமி கொண்ட சுள்ளப்பறவை, வசந்தகாலம் வந்ததும் வெளியில் வந்து கத்த ஆரம்பிக்கும்.
Filed under: எழுத்து, கவிதை, ஸ்ரீதர் நாராயணன்
