ஐ.பி.கு. டேவிட்
இலை துறந்த துறவியாய்
வானோக்கி மெய்வாழ்வு வேண்டி
தவமிருந்து விரித்த கைகளாய்
நிற்கும் நான் மொட்டை மரமாம்!
ஓர் விதையில் முளைத்த பெருங்குடையாய்
நான் தந்த நிழல் எங்கே?
தென்றலின் தழுவலுக்கு இசைந்து
நான் பண்ணமைத்த இசை எங்கே?
நான் தாலாட்டிய பறவைகள் எங்கே?
என் தாளண்டை விளையாடிய மழலைகள் எங்கே?
அனைத்தையும் இழந்தேன்
நினைவுகளைத் தவிர
இன்பத்தின் நிழலான துன்பத்தின்
வடிவம் தரித்து,
மௌன ஞானியாய் நிற்கும்
நானா மொட்டை மரம்?
Filed under: எழுத்து, ஐ. பி. கு. டேவிட், கவிதை
