உனது பிரதியாய் – ஏ. நஸ்புள்ளாஹ் கவிதை
ஏ. நஸ்புள்ளாஹ் ♪ ஔியுள்ள இடத்தில் முளைக்கத் துவங்குகிறது ஆன்மா ஒரு விநாடியேனும் ஔியற்ற இடத்தில் அது வாழ விரும்பவில்லை இறுகி விலங்கிடப் பட்ட இதயத்தின் மேல் ஔி பட்டுப்பட்டு விலகும் போதெல்லாம் ஆதியில்...
View Articleமந்திரம் கவிதைகள்
மந்திரம் 21ஆம் நூற்றாண்டின் சந்தர்ப்பவாதி நான் ஒரு நாடோடி என்னிடம் ஒரு மடிக்கணினி உண்டு. இரண்டு தொடுதிரை கைபேசிகள் ஒன்று அலுவலுக்கு. மற்றது அந்தரங்கத்திற்கு. 8மணி நேரம் தண்டுவடம் மடித்து பணம்...
View Articleஹூஸ்டன் சிவா கவிதைகள்
ஹூஸ்டன் சிவா புகைப்படம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் கடக்கும் கணம் துள்ளும் சிறுமி எத்துப் பற்கள் மின்னும் கண்கள் பறக்கும் கூந்தல் மிதக்கும் மழைத்துளிகள் காலம் இமைக்கவில்லை...
View Articleநினைவுநாள் –வே. நி. சூரியா கவிதை
வே. நி. சூரியா 1 செடிகள் யாவும் கூச்சலிட்டிருந்தபோது நீ வந்தாய் பிரமையோ நிஜமோயென அனுமானிக்க முடியாதபடிக்கு உன்னை என்ன செய்வதென்றே தெரியவில்லை இந்த இரவு காமத்தையும் வரையப்பட்ட காமம் மீண்டும் இரவையும்...
View Articleமுகமூடிகளின் நகரம் –காஸ்மிக் தூசி கவிதை
காஸ்மிக் தூசி எங்கிருந்தோ ஒருநாள் ஊருக்குள் வந்துவிட்டான் பாண்டாக்கரடியின் முகமூடியுடன், ஒரு புதியவீரன். அவன் ஒரு சாகசக்காரன் மும்முறை செத்துப்பிழைத்தவன் என எவரோ சொல்ல ஊதாநிற புகையைப்போல ஊருக்குள்...
View Articleதாகூரின் ‘பிறை நிலா’- என்னும் பிள்ளைக்கவி – 2: வண்ணமயமான எண்ணச்சிதறல்கள்...
மீனாட்சி பாலகணேஷ் குழந்தை பின்னும் இரட்டைவலை! (ரவீந்திரநாத் தாகூர் கவிதைகள்– பிறைநிலா (Crescent Moon) எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து) ஒரு சின்னஞ்சிறு பிஞ்சுப்பாப்பாவின் செயல்களுக்கு அழகான பொருளைக்...
View Articleபூராம் கவிதைகள்
பூராம் 1. காலை வெள்ளி முளைத்த நான்காவது நாழிகையில் பூமி நான்கு பக்கமும் சூழப்படும் நீரால்! மக்கள் நீாின் மகிழ்ச்சியில் மீனைப்போல வாழ்வாா்கள். 2. ஒற்றைக் கொம்புடன் யானை விழியோடு உன் வாசல் படிகட்டில்...
View Articleபின்னால் வரும் நதி –ராஜேஷ் ஜீவா கவிதைகள்
ராஜேஷ் ஜீவா பின்னால் வரும் நதி குட்டி நிலாக்களைப் போலவோ கோழிக்குஞ்சுகளைப் போலவோ தன் குட்டிக் கால்களுக்குப் பின்னால் ஏன் வருவதில்லை நதியுமென்று அவள் வியப்புடன் கேட்கிறாள் எல்லாமும் எல்லாரும் தன்...
View Articleஅலமாரி –ஸ்ரீதர் நாராயணன் கவிதை
– ஸ்ரீதர் நாராயணன் – பிய்ந்துபோன கோட்டு பித்தான்கள் மூக்குடைந்த ரவிக்கை கொக்கிகள் ஜோடியிழந்த சட்டைக்கை கப்ளிங்குகள் என கண்ணாடிபுட்டி நிறைய இருக்கிறது தொலைக்கவும் முடியாத பொருத்தவும் முடியாத பழைய...
View Articleமஞ்சள் இரவு –வே. நி. சூர்யா கவிதை
வே. நி. சூரியா என்ன பறவையென்று தெரியவில்லை இருள் மேனி அந்தி வண்ண விழிகள் மாலையிலிருந்து அப்படியே உட்கார்ந்திருக்கிறது வானத்தை மறந்துவிட்டதா இல்லை தானொரு பறவையென்பதையே மறந்துவிட்டதா நள்ளென்ற யாமத்தில்...
View Articleகுழந்தை –பூராம் கவிதை
பூராம் குழந்தை கொடுத்த முத்தத்தில் ஓடிப் போன காமத்தைக் காலம் மூன்று திசை நான்கு எல்லையில்லா மனவெளியில் தேடிக் கொண்டிருக்கிறேன்
View Articleசாம்பனின் பாடல் –தன்ராஜ் மணி சிறுகதை
தன்ராஜ் மணி மண்ணுருக மணல் கொதிக்க நீரவிய , செடி கருக சித்திரை வெயில் சுட்டெரித்த மதிய வேளையில் அப்போர் நிகழ்ந்தது பனையின் அடிமரம் போல் கருத்த மேனியும் கற்பாளம் போல் மார்பும் அளவெடுத்து அடித்து வைத்த...
View Articleதனிமையை வரைபவன் –ஏ.நஸ்புள்ளாஹ் கவிதை
ஏ. நஸ்புள்ளாஹ் ♪ நேற்றும் தனிமையை வரைய வேண்டியிருந்தது தனிமையை ஓர் இரவாக வரைந்தேன் இரவிற்குள் சில நட்சத்திரங்கள் வந்தமர்ந்தன இன்னும் சில பறவைகளும் வந்து சேர்ந்தன நிலா ராஜகுமாரி மேகத்திற்குள் மறைந்து...
View Articleநிலம் –ராதாகிருஷ்ணன் சிறுகதை
ராதாகிருஷ்ணன் முதல் பார்வையிலேயே என்னை வெளியாள் எனக் கண்டுகொண்டு விட்டது. கண நேரத்தில் சுறுசுறுப்பாகி எழுந்து பாயும் தோரணையில் நின்று கத்த ஆரம்பித்துவிட்டது, பல முறை இவைகளிடம் சிக்கி கடிபட்டு தெறித்து...
View Articleசாத்தன் மரம் –மந்திரம் கவிதை
மந்திரம் அந்தியில் பூக்கின்றன ஏலக்காய் வாசம் பொதிந்த வெள்ளைப் பூக்கள். கொத்துக் கொத்தாய் பச்சை இலைகளுக்குள் பொங்கித் தெரிகின்றன. மோகம் தலைக்கேறும் அடர் வாசம் அப்பெருமரத்தில் குர்கானின் பனிக்காலம் வரை...
View Articleமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை
பானுமதி. ந “மாசு, எலே, மாசு, எங்கிட்டடா தொலஞ்ச? இன்னெக்கு உன்ன பலி போடாம உங்கறதில்ல”. இரு கைகளாலும் வறட்வறட்டென்று தலையைச் சொறிந்து கொண்டே ராணி குடிசையிலிருந்து கத்திக் கொண்டு தெருவில் இறங்கினாள்....
View Articleமழை இரவு –கமல தேவி சிறுகதை
கமல தேவி கார்த்திகை வெளிகாத்துக்கு சிவகாமி அம்மாளின் வெள்ளை நூல்புடவை எத்தனை தூரத்துக்கு தாங்கும். உடலைக் குறுக்கினார். உள்கட்டில் ஜமுனா கண்மூடியிருக்கமாட்டாள் என்று அவர் மனசுக்குள் ஓடியது. சுவத்தில...
View Articleசைடு வாங்குதல் –செல்வசங்கரன் கவிதை
செல்வசங்கரன் சிரிப்பே வரவில்லை இப்படித்தானே சிரிக்கவேண்டுமென சிரித்துப் பார்க்க இதுவெல்லாம் சிரிப்பில் அடங்குமா இடதும் வலதும் உதடுகள் சைடு வாங்கிக் கொண்டதால் தூரத்திலிருந்து பார்ப்பவர்கள்...
View Articleமயானத்திலிருந்து திரும்பியபிறகு –காஸ்மிக் தூசி கவிதை
காஸ்மிக் தூசி மயானத்திலிருந்து வீடு திரும்பியபிறகு அடுத்து என்ன செய்வது என்பது அவ்வளவு எளிதில் தீர்மானிக்க முடிவதல்ல இறந்தவர் குடும்பத்தில் ஒருவர் எனில் ஒரு கோப்பை மதுவோ தேநீரோ அருந்தி துயரத்தை...
View Articleசுவர்க்கம் நிச்சயம் –ஹூஸ்டன் சிவா கவிதை
ஹூஸ்டன் சிவா புகை படிந்த உயர் விழுமியங்கள் சைகை காட்டி அழைக்கின்றன தெள்ளத் தெளிவான கீழ்மை கட்டி அணைத்து இறுக்குகிறது ஆகாய கங்கையில் நட்சத்திரங்கள் அலைமோத ஒரு கால் சாக்கடையில் மலம் சுழன்றோட மறு கால்...
View Article