எவ்வளவு ஒற்றுமை, இந்த இரு அழகர்களுக்கும்
இவர்களில் ஒருவன் மற்றவனை விட வெளுப்பாய்,
கடுமையாய் இருக்கிறான், என்னைக் கையில்
ஏந்தியவனைவிட அதிக கம்பீரம்
என்று கூடச் சொல்லலாம்-
அவன் புன்னகையில்தான் எத்துணை கனிவு,
பார்வையில்தான் எத்துணை பரிவு.
அவன் நெற்றியின் பாப்பி மலர்கள்
என் நெற்றியைத் தொட்டனவோ,
அவற்றின் மயக்கும் வாசம்
என் ஆழ்மன வலிகளைப் போக்கிற்று.
ஆனால் இந்த நிவாரணம் தற்காலிகம்தான்.
எனது நிரந்தரத் தீர்வு, அந்த மற்றொரு சகோதரன்,
வெளுப்பாய், கடுமையாய் இருப்பவன்,
தன் பந்தத்தை கீழிறக்கும்போதுதான்.
உறக்கம் நல்லது, மரணம் அதனினும் மேன்மை.
பிறவாமை அனைத்தினும் சாலச் சிறந்தது.
௦௦௦
ஆங்கிலத்தில்- Sleep and Death, Vikram Seth (translated from the German of Heinrich Heine)
ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா
Filed under: எழுத்து, கவிதை, செந்தில் நாதன், மொழியாக்கம் Tagged: ஹின்ரீச் ஹீன்
