ஆலங்குச்சி கொண்டு
வண்டல் மண்ணைக் கிளறி
வலப்பக்கம் குவித்து இடப்பக்கம் இறைக்கிறேன்.
அழிக்கம்பி கதவின் பின்னே
பிறைநுதலென எழுந்து
சிலையென முகம் காட்டி
கவிழ்கிறது தலை.
ஆர்வம், அசூயை, நாட்டம், நாணம்,
சீற்றம், ஆவலாதி, சூன்யம், கைக்கிளை
என அந்த கண்தேடலை
பல வழிகளில் கடந்து போகிறேன்.
நீ எவ்வழி சென்றாயோ?
Filed under: எழுத்து, கவிதை, ஸ்ரீதர் நாராயணன்
