– ஸ்ரீதர் நாராயணன் –
கொண்டு வருகிறேன் பலாஸை
இந்த மைதானத்திற்கு நடுவே.
உங்கள் பாசாங்குகளை
முற்றொழிக்க.
எந்தையின் சுடரை
அவர் பெண்மைத் தலையிலிருந்து
பிடுங்கி எடுத்து,
கொண்டு வருகிறேன்
இந்த உடலற்ற நெருப்பை.
எரி-கண்கள் கொண்ட பெண்ணவள்
இந்த நகரை
போலித்தனங்களிலிருந்து
பொலிவுற செய்யட்டும்.
கனன்று கொண்டிருக்கும் இத் தலை
கொடுக்கட்டும் எல்லா கதகதப்பும்
வேறெதுவும் மறைக்கப்பட வேண்டியதில்லை
கொண்டு வருகிறேன்,
பலாஸ் அதினாவை
இந்த மைதானத்திற்கு.
I bring the Pallas
to the middle of this Stadium,
to extinct the pretense
The fire of our father,
sprung out of his
effeminate scalp,
I bring you-
fire without a frame
She, the fiery-eyed lady
shall light this city
out of its sham
This smoldering head
bestows all the warmth,
there is no call for shields.
I bring,
Pallas of Athena
to this Stadium!
Filed under: எழுத்து, ஸ்ரீதர் நாராயணன் Tagged: இருமொழிக் கவிதைகள், கவிதை, ஸ்ரீதர் நாராயணன்
