புகைப்படத்தில் பார்த்த உனது விம்பம் நேரில் காணும் போது அது உன்னை போலவே அல்ல ஆறு வித்தியாசங்கள் கண்டு பிடித்த பரவசத்தில் நீ ஊர் நோக்கி பயணிக்கிறாய் அது ஒரு கோடை நாளின் வெளிச்சத்தில் மிகைத்த ஒப்பனையோடும் கட்டாயப்படுத்தப்பட்ட புன்னகையோடும் கருவி வழி வந்த போலி விம்பமது பெருந் துயரம் துரத்தும் அயர்ச்சியில் கொடூரங்களை நினைவுகளாக்கி மலையொத்த சாபங்களோடு அலைந்து திரிபவனின் நிஜ விம்பங்களை அறிந்திருக்க உனக்கு எந்த வாய்ப்புக்களுமில்லைதான்.
Filed under: எழுத்து, கவிதை, மஜீஸ் Tagged: கவிதை, மஜீஸ்
