துளியென உருப்பெற்று
வெள்ளமென பெருக்கெடுத்து
சுழற்றி உட்கொள்ள பாய்ந்தோடுகிறது
உயிர் ஏகிய சாவின் நிழல்
எம்மிப் பறந்தபின் தவித்தாடுகிறது
பறவையை ஏந்திய மரத்தின் கிளை
மண்ணின் அணைப்பை விழைந்து
காற்றில் மிதந்து தணியும் ஓரிலையில்
முன்னோக்கி செல்லும் அகாலப்பெருவெளி
தணியாத இரவொன்றின் விசனம்
விழித்து முறைக்கும்
வனத்தின் விழி கொண்டு
நிழல் தாண்டிய பயணத்தில்
எக்கணமும் நிகழக்கூடும்
மண்ணோடு கரையும் பேறு
பாசக்கயிற்றின் அழுத்தம் பழகி
சிரிக்க முடிந்தால் போதும்
இங்கு வாழ்ந்ததன் பொருள் கிட்டும்
Filed under: எழுத்து, கவிதை, நித்ய சைதன்யா
