Quantcast
Channel: பதாகை
Viewing all 1152 articles
Browse latest View live

வாஸந்திகா –பானுமதி சிறுகதை

$
0
0

என் அலைபேசி ஒலித்த போது அதிகாலை நான்கு மணி. ஒருவிதத்தில் எதிர் பார்த்தும் கொண்டிருந்தேன்.ஆனாலும், சிறு கலவரம் மனதில். மிக இயல்பாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு மெல்லிய குரலில் ‘சொல்லுங்க’ என்றேன்.”மிஸ்டர். பாலசந்திரனின் நிலை கவலைக்கிடம்;நினைவு தப்புகிறது. நீங்கள் உடனே வரமுடியுமா?” என்றாள் மருத்துவமனையின் தொடர்பாளர்.

எனக்குப் போவதற்கு விருப்பமில்லை.’கீதா இருக்கா இல்லையா அவ பாத்துப்பா’

“அவர் உங்களை மனைவி என்று குறிப்பிட்டிருக்கிறார்;கீதா மேம் தயங்குகிறார்கள்”.

‘சரியாச் சொல்லும்மா;உயிர் போய்ட்தா?’

“கிட்டத்தட்ட”

என் உயிர் போய் முப்பது வருடங்கள் ஆகிவிட்டது என்று சொல்ல நினைத்தேன்,ஆனால் சொல்லவில்லை. ‘வரேன்‘என்று இணைப்பைத் துண்டித்தேன்.தூக்கத்தைக் கலைத்துவிட்டாள்.என்ன செய்யலாம்? பால்கனி கதவைத் திறந்து கொண்டு தெருவைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.பனிக்குளிர்ச்சி நாடிகளில் ஊடுருவியது.மூட்டம் படர்ந்த வானில் ஒன்றும் தெரியவில்லை.பால் வண்டி ஒன்று முகப்பு விளக்குகளை எரிய விட்டுக்கொண்டு வந்து கொண்டிருந்தது.ஒளியென வந்து மூட்டத்தில் தள்ளிய அவன்,என்றுமே ஒரு மாத்திரை குறைவான என் வாழ்க்கை,நானே ஆடுபவளாய், நானே பகடை உருட்டியாய்,என்றுமே பழசு வாய்க்கப் பெற்றவளாய்…இல்லை இதை விரக்தியில் சொல்லவில்லை.முப்பது வருடங்களில் என் வாய் விட்டு மனம் விட்டு ஐந்தாறு முறை மட்டுமே தான் சிரித்திருப்பேன்.அவன் செத்துவிட்டான் என்பதை அவர்கள் நாசுக்காகச் சொல்லிவிட்டார்கள். என்னை எதற்காக மனைவி என்று குறிப்பிட்டான்? தீ வளர்த்து மணந்தவள் மனைவி என்றால், அவனோடேயே வாழ்பவள் யார்?அவளை மனைவி என்று சொல்ல என்ன தடை?ஓ,அவள் புருசன் இன்னமும் அவர்களோடுதான் இருக்கிறான் என்பதுதானா?

போக வேண்டுமா என்ன?மூன்று முடிச்சில் எத்தனை ஆண்டுகள் சிறைப்படவேண்டும்? அவன் என்னோடு இருந்ததே மொத்தமாக ஒரேதரமாக மூன்றே நாட்கள் தானே.நான் நல்ல நிறம்;அவன் மா நிறம்-ஆனால், அழகன்,உயரம் அதற்கேற்ற பருமன், களையான முகவெட்டு,குழி விழும் கன்னங்கள்,எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் கம்பீரம். நான் அவன் மார்பளவிற்குத்தான் இருந்தேன்.என்னிடம் கவர்ச்சி என்பது என் அளவான மார்பகங்களும்,சிறிய பல்வரிசைகளும்தான். இருபத்தியோரு வயதில் எனக்கு வந்த அதிர்ஷ்டம் என உறவு சொல்லியது;தனிமையில் நான் அதைக் குறித்து பெருமிதம் கொண்டேன்.நிச்சயம் ஆகி நடக்க இருந்த இரு மாதங்களுக்குள் அவனுடனான வாழ்க்கைக் கனவுகள்; தனியாகச் சிரித்தும், சிவந்தும்,பித்தியாகி நான் எனக்குள்ளே கொண்டாடிக் கொண்டேன்- இனி எனக்கே எனக்கென ஒருவன்.எதுவும் என்னுடையது, பிறர் உபயோகித்தது இனி எனக்கில்லை.போதும் அந்தக் கடந்த காலம்.அக்காவுடைய ட்ரஸ்,அவள் பேனா,அவள் புத்தகங்கள்,அவள் செருப்பு,அவள் ரிப்பன், வளையல் என எல்லாப் பழசும் எனக்கு.தீபாவளியின் போதுகூட இரண்டு வருடத்திற்கு ஒருமுறைதான் புது ட்ரெஸ்-இரு வேளை சாப்பாடே பெரும்பாடு;இதில் புதிது என்பதற்கெல்லாம் இடமேது?இவ்வளவு ஏன்? என் திரண்ட குளியின் போதுகூட எனக்குப் புத்தாடை இல்லை,பால் பழம் கொடுக்கவில்லை,புட்டு சுற்றவில்லை.அம்மாவிற்கு மனத்தாங்கல் ஏதோ நானே விரும்பி உக்காந்து விட்டதாக.காலைச் சாப்பாடு கூட பழையதுதான்-மத்தியானம் மட்டும் சூடான சாதம், ஜீரா ரசம்;ராத்திரிக்கு மிஞ்சின சாதத்தை இரண்டாகப் பிரித்து மறுநாள் காலைக்குப் பழயதை சேமித்துவிட்டு, மீதியில் தாராளமாகத் தண்ணீர் ஊற்றி மோரில் கலந்து டம்ளரில் அம்மா கொடுப்பாள்.மொத்தம் அம்மா,அப்பாவையும் சேர்த்து நாங்கள் ஒன்பது பேர்.அப்பாவிற்கு மளிகைக்கடையில் கணக்குப்பிள்ளை வேலை;அரிசி, பருப்பு, எண்ணை ஓரளவிற்குக் கடனில் கிடைக்கும்-மாதம் பிறந்ததும் கடன் போக மீதிதான் சம்பளம்.

எனக்கு ஏழு வயது.எனக்கு பிஸ்கெட் திங்க ஆசையா இருந்தது.பக்கத்தாத்து ரமணி தின்னுன்ட்ருந்தான்-நான் வெக்கங்கெட்டு கை நீட்டினேன்;அவன் கொடுத்துருப்பானோ என்னவோ-ஆனா,அதைப் பாத்துண்டிருந்த அக்கா அம்மாட்ட போட்டுக் கொடுத்துட்டா;அம்மா கைல சூடு வச்சுட்டா;அப்றமா அழுதா;பிஸ்கெட்டும் இல்ல அதை அம்மா புரிஞ்சுக்கவுமில்ல.சூடுதான் மிச்சம்.

எல்லாம் பழசுங்கறேனே-வெக்கக்கேடு- கல்யாணப் பொடவ கூட மூத்த அக்காவோடதுதான்-அவ தலைப் ப்ரசவத்ல செத்துப்போனா-அத்திம்பேர் இரண்டாம் கல்யாணம் பண்ணின்டார்-ஆனா, நல்ல மனுஷன்-அவ நகை, பொடவைகளைத் திருப்பித் தந்துட்டார்.அம்மாவும், அப்பாவும் அதுல முக்கா வாசி நகயப் போட்டு காவாசி பொடவையக் கொடுத்து ரண்டு அக்காக்களுடைய கல்யாணத்தை ஒப்பேத்திட்டா.மீந்தது எனக்கு.

ஓசிச் சினிமா காட்டுவா எங்க காலனில-அதுல பாத்திருக்கேன்-ஹீரோ ஹீரோயினுக்கு புதுப்பொடவ, நகயெல்லாம் வாங்கித் தருவான்;தல கொள்ளாம மல்லிப்பூ;எங்காத்ல கிள்ளித்தான் தருவா-அதுவும் மாச முத வெள்ளிக்கிழமைல.கனகாம்பரம், டிசம்பரெல்லாம் கொல்லல மண்டிக்கிடக்கும்-ஆமா, வாசன இல்லாம ஆருக்கு வேணும்?

கல்யாணம் எல்லாவற்றையும் புதிதாக்கும் என நம்பினேன்.அவன் ஊர்வலம் வருகையில் பார்த்துப்பார்த்துப் பூரித்தேன்.தாலி கட்டும் போது ராம சீதா கல்யாணம் என சிலிர்த்தேன்.புகைப்படங்களில் பல் தெரிய சிரித்தேன்;முதலிரவில் அவன் எனக்கெனத் தனிப் பரிசு கொண்டு வந்து தருவானென்று எதிர்பார்த்தேன்.

எனக்கென ஒரு ஆண், அவன் குறும்புகள், அவன் வலிமை, அவன் தன்னம்பிக்கை,கல்யாணம் முடிந்த மறுநாள் தேனிலவு என்று சொர்க்கத்தில் மிதந்தேன்.நான் ஊட்டியில் தேனிலவை அனுபவிக்க ஆசைப்பட்டேன்.ஆனால், அவன் ஏற்காடிற்குத்தான் கூட்டிப்போனான்.சேர்வராயன் மலைக் குன்று.கொண்டை ஊசி வளைவுகளில் அவனை இறுகப்பற்றிக்கொண்டேன்;அவன் சிரித்தான்- வேற வாயிலெடுத்தா சந்தோஷம்-இப்ப எடுத்துடாதே என்றான்;அதற்கு நாணிச் சிவந்தேன்.மரகத ஏரியில் படகுப் பயணம்.அது தானாக ஏற்பட்ட ஒன்றாம்;உள்ளே பெரிய நீரூற்று உள்ளதாம்.அவ்வளவு பெரிய ஏரியை நான் பார்த்ததில்லை;மேகம் ஏரியின் ஒரு கரையில் நின்று தன்னை நீரில் பார்த்துக்கொண்டது;சற்றே சாயும் கதிர்கள் பட்டுஅதன் மேலாடைகள் வெள்ளிச் சரிகையுடன் மின்னின.வானைத் தொட எண்ணி வளர்ந்த மரங்கள் சற்றே வளைந்து அதனுடன் போட்டியிட்டன.காற்று இதமான குளிருடன் இருக்கையில் ஜிவ்வென்று பறவைகள் பறந்து சுழன்று மீண்டும் மரங்களுக்குச் சென்றன.ஆட்கள் குறைவான சிறிய புல்வெளியின் ஓரம் சில தத்தித் தத்தி வந்து எதையோ கொத்திக் கொத்தித் தின்றன. நான் செல்லும் முதல் படகுப் பயணம்.ஏறக்கூட பயப்பட்டேன்-அலாக்காகத் தூக்கி ஏற்றினான்.’படகு கவுந்தா என்ன செய்வ? நா நீந்திப் போயிடுவேன் நீ அவ்ளோதான்’ என்றான்.எனக்கு சுருக்கென்றது.வெண்மையான மேகங்கள் போன இடம் தெரியவில்லை;வானம் இருண்டு ஒளியை மறைக்கப் பார்த்தது.ஒளிச் சிதறல்கள் மேக விளிம்புகளில் சித்திரங்கள் வரைந்தன.மான், புலி, வேடன் என்றும் பயமுறுத்தின.சூரியனின் யாக குண்டத்தில் தீ ஜ்வலிப்போடு எரிய மானும், வேடனும் மறைய புலி மட்டும் நின்றிருந்தது.என்னை முழுங்கப் போகும் புலியா அது? என் தலையை உசுப்பிக்கொண்டேன்.கை கொடுத்து படகில் ஏற்றுபவர்களைப் பார்த்திருக்கிறேன்-இவன் என்னைத் தூக்கி ஏற்றியவன்-இவனா என்னை நட்டாற்றில் தள்ளுவான்?முட்டாளே,உன் கலவரத்தை அவன் இரசித்துக்கொண்டு இருக்கிறான். நான் செல்லக்கோபத்தோடு அவன் மார்பில் குத்தினேன்.படகில் இருந்த மற்றவர்கள் சிரித்தார்கள்.அங்கே பார்த்த கற்களால் ஆன இராமர் கோயிலை நான் மறக்கவேயில்லை.இந்த அவுட்டிங் தவிர முப்போதும் என்னையே சுற்றினான்;கொங்கைகள் மேல் வைத்துக்கிடந்த மலர் மார்பனாகக் கிறங்கினான்.கிள்ளியூர் அருவியில் ஆட்களேயில்லை;நாணமற்று என்னோடுதான் குளிப்பேன் என்று ஒரே அடம்

‘உன் கழுத்துக்கு நெக்லஸ் போடப்போறேன் ஊருக்குப் போனதுமே;ஆனா, உன்பேரு என்னக் குழப்பறது.வாசந்தி சரி, அது என்ன வாசந்திகா’ என்றான்

“அது செஞ்சு லக்ஷ்மியோட பேர்.அவ லக்ஷ்மியோட வனத்ல வேல பாத்தா; விஷ்ணுவ மோகிச்சா,அவருக்கும் இஷ்டம்தான்.கோபத்ல லக்ஷ்மி அவள சபிச்சுட்றா,வனராணியா பூமில பொறன்னுட்டு.இங்கயும் அவ விஷ்ணுவயே கல்யாணம் செய்யணும்னு தவிக்றா;அவரும் நரசிம்மரா வந்து காத்துண்டிருந்தார்.அப்றம் லக்ஷ்மியே மன்னிச்சு கல்யாணமும் பண்ணி வைக்கறா;வசந்த காலத்ல, வனத்ல,வாசன வாசனயா மணம்பரப்பினவ அவ;அதுனால வாஸந்திகா; நான் கூட அப்படித்தான்;”

இதைக் கேட்டு அவன் சொன்னான்’தெரிஞ்சோ தெரியாமயோ நல்ல பேரை பொருத்தமா வச்சிருக்கா’.எனக்குப் புரியாவிட்டாலும் சந்தோஷமாக இருந்தது.காலையா,மாலையா எனப் புரியாத உற்சாக உறவு. ஏற்காட்டில் அந்த லாட்ஜில் இரவின் கேளிக்கைகளில் ஆழ்ந்து உறங்கி எழுந்த பிறகுதான் அது காலை எட்டு மணியெனத் தெரிந்தது.அவன் படுக்கையில், குளியலறையில், வராண்டாவில், ரிஸப்ஷன் ஹாலில், ரெஸ்டாரென்ட்டில் எங்குமில்லை.பணியாளர் வந்தார்- ‘பத்து மணிக்கு காலி செய்யணுங்க; அவரு பணமெல்லாம் கட்டிட்டாரு.ஊருக்கு அவசரமாப் போணுமாம்-ஏதோ கெட்ட சேதி;உங்கள எழுப்பி இதைச் சொல்லப்படாதுன்னு கெளம்பிட்டாரு.நீங்க உங்க ஊருக்குப்போங்க.அவரு வந்து அழச்சுப்பாராம். இந்த டிக்கெட்ட கொடுக்கச் சொன்னாரு’.

எனக்குக் குழப்பமாக இருந்தது; டிக்கெட் கூட வாங்கிக் கொடுத்திருக்கான்-அப்படின்னா முன் திட்டமா?சேச்சே,அவன் நல்லவன்,எனக்கானதை செஞ்சுட்டுத்தானே போயிருக்கான். ஒருக்கால் அவன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையோ-அவர் கல்யாணத்லகூட சுரத்தா இல்லயே?

என் கடிதங்களுக்குப் பதிலில்லை.அப்பாவும்,அண்ணாவும் நேரில் போனார்கள்.அவன் கீதாவின் வீட்டில் அவர்கள் குடும்பத்துடன் இருப்பதாகச் சொன்னார்கள்.

அவனிடம் நேரில் போய் கெஞ்சினேன், கேள்வி கேட்டேன்,அழுதேன்-அவன் மசியவில்லை

‘உனக்கு கீதாவோட பழக்கம்னா என்ன ஏன் கல்யாணம் பண்ணின்ட?’

“அப்பாவோட புடுங்கல் தாங்காமத்தான். கேக்கணும்னா அவரக் கேளூ.ஆனா,ஒன்னு, நீ எங்களோட இங்க இருக்கறதுல ஒரு கெடுதியுமில்ல;ஒத்துப்போ;கல்யாணம் பண்ணின்டு கைவிட்டாங்கற பேரு எனக்கு வேணாம்; நீ என்ன சொல்ற கீதா?”

‘இதோ பாரு, வாசு(வாசுவாம், வாசு-இவ வச்ச பேரு மாரி கூப்ட்றா) பாலு நல்லவன்;ஊர விட்டுத் தள்ளு;எங்களோட இரு;உனக்கு கொற வைக்க மாட்டோம்’

‘நீ வாய மூடு;குடும்பத்தோட இருக்க;இவனையும் சேத்து வச்சுண்ட்ருக்க.தேவடியாகூட இப்படி செய்ய மாட்டா.நாங்க பேசறதுல குறுக்கிட்டின்னா செருப்பு பிஞ்சுடும்’

அவன் பளாரென்று கன்னத்தில் அடித்தான்;நான் சுருண்டு விழுந்தேன்”தொலைச்சுடுவேன் யாரப் பாத்து என்ன வார்த்த சொல்ற போடி, கோர்டுக்குப் போ விவாகரத்து கேளு,ஜீவனாம்சம் தந்து தொலைக்கிறேன்.”

நான் அடக்க மாட்டாமல் சிரித்தேன்.

குழந்தை பிறந்திருக்கிறது என்ற மிகை சந்தோஷம் நான் கடைசிக் குழந்தை, அதிலும் நாலாவது பெண் என்பதால் என் பெற்றோர்களுக்கு இல்லை.பழசிலேயே இருபத்தியோரு வயது வரை வாழ்ந்திருக்கிறேன்;கல்யாணம் கூட எனக்குப் புதிதாய்த் தெரிந்த பழசுதான்.வயிற்றில் வளரும் சிசுவாவது எனக்கே எனக்கென இருக்குமா?

ஸர்வீஸ் கமிஷன் தேர்வில் வெற்றி பெற்றேன்.என் மகள் பிறந்தாள்;அவன் வந்து பார்த்தான். மாதங்கியெனப் பேர் வைத்தான்.போய்விட்டான்.என் அம்மாவிற்கு இந்த மட்டும் மானத்தைக் காப்பாற்றினானே என்று ஆஸ்வாஸம்.நான் அவனுடன் சேர்ந்திருக்கவில்லை என அவளுக்கு மன வருத்தம்.

தன் அப்பாவைப் பற்றி என் மகள் கேட்க ஆரம்பிக்கையில் அவள் வயது ஆறு.எங்கள் திருமணஃபோட்டோவை பார்த்துக்கொண்டேயிருப்பாள்- திடீரென்று அவனது படத்திற்கு மட்டும் முத்தம் கொடுப்பாள்.அம்மாஅழுவாள்- நான் முகம் திருப்பிக் கொள்வேன்

“உனக்கு ஏம்மா இந்தப் பிடிவாதம்?அப்பாதான் கூட இருக்கச் சொன்னாராமே?ஏன் மாட்டேனுட்ட?பீச்சுக்கெல்லாம் எல்லா அப்பாவும் கூட்டிண்டு போய் தண்ணிலெல்லாம் வெளயாட விட்றா;நீ முத அல பக்கத்ல கூட போப்படாதுங்கற’

இந்தப்பெண்ணும் எனக்கு மட்டுமேயில்லை எனப் புரிய ஆரம்பித்தாலும்,அவளுக்குச் சிறு வயது, போகப் போகப் புரிந்து கொள்வாள் என நினைத்தேன்.அம்மாவிற்கு என் ஆண் நண்பர்கள் என்னைப்பார்க்க வீட்டிற்கு வருவது பிடிக்கவில்லை.சந்தேகப்பட்டாள், பேத்தியைத் தூண்டிவிட்டாள்.

பொறுக்க முடியாமல் ஒரு நாள் சொல்லிவிட்டேன் ‘என்னோட பொறந்தவா ஆறு பேரு’அம்மாவிற்குப் புரியவில்லை.”நா என்ன கேக்கறேன், நீ என்ன சொல்ற?”

‘என் ரணத்த நான் ஆணோட பேசி ஆத்துக்கறேன்;பெத்து ஆத்திக்கமாட்டேன்’

அம்மா இடிந்து போனாள்.மாதங்கி இல்லாத போதுதான் இது நடந்தது.அம்மா என்னுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டாள்.

பதினாறு வயதில் மாதங்கி அவன் வீட்டில் அவனைப் பார்க்கப் போனாள்.பாட்டியுடன் போனாள், தனியாகப் போனாள்.தெரிய வந்த போது’நீங்க ரண்டு பேரும் அங்கயே போயிடுங்க;அவன் இப்ப உங்களுக்கு முக்யம்’

“ஆமாம்மா, அப்பா எனக்கு வேணும்;அவர் மாரியே நான் இருக்கேன்,உயரம், கண்ணு, கலர்,கன்னக் குழி எல்லாமே;அவர்தான் எனக்குத் தார வாக்கணும்;ஒத்துண்டிருக்கார்.ஆனா,உன்னவிட்டுட்டு போமாட்டோம்.உன்ன கெஞ்சிக் கேக்கறேன்;உன் ஆஃபீஸ் மாமால்லாம் என்னயே அசிங்கமா திருட்டுத்தனமா பாக்கறா;எனக்குப் புடிக்கல.”

அப்பாவின் துரோகம் தெரியவில்லை இவளுக்கு;அம்மாவை சந்தேகிக்கிறாள்.கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டுத் துரத்தலாம்;அங்கேபோய் நிற்பாள்;அவன் ஜெயித்ததாகச் சிரிப்பான்.கீதா உச்சி குளிர்ந்து போவாள்;அம்மாதான் பாவம் தவிப்பாள்,என்னையும் விட முடியாது,இந்த வயதிற்கு அங்கேயும் தங்க மனம் இடம் கொடுக்காது.

“என்னடி, புதுக் கத சொல்ற?”

‘நா கதயெல்லாம் சொல்லல;நீ அப்பாவோட இருந்திருந்தா என் கன்னத்தை உன்ஃப்ரெண்ட் திருட்டுத்தனமா கிள்ளுவானா?இடுப்புலதான் கை போடுவானா?’

‘அப்பவே சொல்றதுக்கென்ன?அவாளை வரவிடாம செய்றதுக்கு அவனும்,உன் பாட்டியும் இதெல்லாம் சொல்லச் சொன்னாளா?’

மாதங்கி என்னை க்ரோதத்துடன் பார்த்தாள்.

இது உண்மையா, பொய்யா? கொஞ்சம் நிஜமோ?சாரங்கன் வழிசல் பேர்வழி,சந்துரு அப்படியில்லையே.

மாதங்கியின் இருவது வயதில் வந்த வரன்கள் சொல்லி வைத்தது போல் அப்பா எங்கே என்று கேட்டார்கள்.அவன் ஒரு முறை துபாயில் இருந்தான்- சிங்கப்பூரில், இலங்கையில், லண்டனில், டெக்ஸாஸில் எங்களுக்குத் தோன்றிய இடங்களிலெல்லாம் அவன் இருந்தான்.ஒரு வரன் அமைந்து அவன் வந்து தாரை வார்த்துக்கொடுத்தான்.

இன்று அவன் இறந்த செய்தி. எனக்கென்ன சந்தோஷம் அல்லது துக்கம் இதில். நான் கீதாவை தொலைபேசியில் அழைத்தேன். ‘மாதங்கி இப்போ தாய்லாந்துக்கு வெகேஷனுக்குப் போயிருக்கா;நீ பேசு, அவ வர வரைக்கும் முடிஞ்சா மார்ச்சுவரில பாடியை வை; நானா? நான் எதுக்கு?யாரோ செத்ததுக்கெல்லாம் நான் போறதில்ல’

நான் வாஸந்திகா; காட்டு வனம்;வசந்தத்தின் அரிய பூ,தனி மணம்,தளிரைத் தொட்டால் பொசுக்கும் தீப் பொறி,குன்றத்தின் காந்தள் மலர்,என்றும் புதியவள்,எனக்கெதற்குப் பழசு?

நான் சிரித்து முப்பது வருஷங்கள் ஆகிவிட்டன. இன்று பொங்கிப் பொங்கி சிரித்துக் கொண்டிருக்கிறேன்.


புத்தக கண்காட்சி 2020 –பதாகை பதிப்பக வெளியீடுகள்

$
0
0

ஒரு நாவல், இரண்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு கதம்ப படைப்பு மற்றும் ஒரு கட்டுரை தொகுப்பு என  பதாகை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு ஐந்து நூல்களை கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது.

கத்திக்காரன்- ஸ்ரீதர் நாராயணன் – சிறுகதைகள். 

ஸ்ரீதர் நெடுநாட்களாக இணைய உலகில் இயங்கி வருபவர். பதாகையின் தோற்றுனர்களில் ஒருவர். அமெரிக்காவில் வசிக்கிறார்.பூர்வீகம் மதுரை. ‘கத்திக்காரன்’ முழுக்க அமெரிக்க பின்புலத்தில் உருவான கதைகள். ‘வானவில்’ அமெரிக்க இந்திய  பதின்மரின் வாழ்வை பற்றி நுண்ணிய சித்திரத்தை அளிப்பது. பியாரி பாபு ஹோரஸ் அலெக்சாண்டர் பற்றிய நினைவுகளை சொல்லும் கதை. ஸ்ரீதரின் கதைகூறும் முறை பிசிறற்ற தெள்ளிய முறை என சொல்லலாம். இரா.முருகன் ஒரு நல்ல முன்னுரையை அளித்திருக்கிறார்.இந்த ஆண்டு ஸ்ரீதரின் தொகுப்பு நன்கு கவனிக்கப்படும் என்று நம்புகிறேன்.

ஒளி – சுசித்ரா – சிறுகதைகள்

சுசித்ரா, சுவிட்சர்லாந்தில் வசிப்பவர். உயிரியல் துறையில் ஆய்வு செய்து வருகிறார். இவரும் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். ஆங்கிலத்தில் வலுவான வாசிப்புடையவர். அண்மையில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த அவருடைய ‘ஒளி’ முன்னோடி எழுத்தாளர்கள் பலரால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. தொகுதியில் வெளிவந்துள்ள ‘தேள்’ ஒரு நல்ல டிஸ்டோபிய கதை. இரண்டு அறிவியல்புனைவுகளும் வாழ்க்கையின் அடிப்படை வினாக்கள் மீது கட்டி எழுப்பப்பட்டவை. ‘ஹைட்ரா’ எனக்கு பிடித்த கதை. இந்த ஆண்டு மிகவும் பேசப்படும் தொகுதிகளில் ஒன்றாக இது இருக்கும் என நம்புகிறேன். படைப்பூக்கம் கொண்ட எழுத்து. வருங்காலத்தில் முக்கிய எழுத்தாளராக அறியப்படுவார்.

வீடும் வெளியும் – அனுகிரஹா – கதம்ப படைப்பு

அனுகிரஹா  சொல்வனம்  மற்றும் பதாகை ஆசிரியர் குழுவில் இருப்பவர். சேலத்தை பூர்வீகமாக கொண்டவர். பெங்களூரில் வசிக்கிறார். அவருடைய ‘வீடும் வெளியும்’ நூலை படைப்பு கதம்பம் என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு இப்படியான வடிவம் முன்மாதிரி அற்றது என எண்ணுகிறேன். நான்கு தலைப்புகளில் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் அவரே வரைந்த ஓவியங்கள் என படைப்பின் எல்லா பரிணாமங்களும் கொண்ட நூல். அனுவின் கவிதைகள் மிக முக்கியமானவை. புதிய கோணங்களை திறப்பவை. அவை இவ்வாண்டு பேசப்படும் என்று நம்புகிறேன்.

இயர் ஜீரோ – காலத்துகள் – நாவல்

‘காலத்துகள்’ பதாகை வழி உருவாகி வந்த எழுத்தாளர். அவருடைய சிறுகதை தொகுப்பும் அடுத்து வர இருக்கிறது. ‘இயர் ஜீரோ’ செங்கல்பட்டில் தொண்ணூறுகளின் மத்தியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒரு மாணவனின் கதை. நினைவுகளின் ஊடாக ஒரு தெறிப்பை காலத்துகள் இந்நாவலில் நிகழ்த்துகிறார். ஒரு தலைமுறையே அவருடைய கதையோடு தங்கள் நினைவுகளை பொருத்திப் பார்க்க முடியும். ஆத்மார்த்தமாக தன்னை கண்டடையும் நோக்கில், தன நினைவுகளை கிளறி எழுத்தாக்கும்போது அதன் நேர்மையின் ஆற்றலால் அப்படைப்பு நம்மை வசீகரிக்கிறது. தமிழில் வந்துள்ள சிறந்த ‘coming off age’ வகையிலான நாவல்களில் ஒன்று காலத்துகளின் ‘இயர் ஜீரோவை’ சொல்லலாம்.

பாண்டியாட்டம் – நம்பி கிருஷ்ணன் – மேலை இலக்கிய கட்டுரைகள்

நம்பி கிருஷ்ணன், அமெரிக்காவில் வசிக்கிறார். சொல்வனத்தில் தொடர்ச்சியாக உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார். அரூ அறிவியல் புனைவு போட்டியில் அவருடைய கடவுளும் கேண்டியும் மூன்றாவது பரிசு பெற்றது. அவர் எழுதிய Ecco homo எனக்கு பிடித்த காந்தி கதைகளில் ஒன்று. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் செறிவான மொழியாக்கங்களை செய்திருக்கிறார். தமிழில் அவர் அளவுக்கு அயல் இலக்கிய வாசிப்பு உரியவர்கள் மிகக் குறைவு என்பது என் கணிப்பு. ‘பாண்டியாட்டம்’ உண்மையில் அப்படி பிரதிகளின் மீது அவர் தாவித்தாவி செல்லும் கட்டுரைகளின் தொகுப்புதான். பெருமைக்குரிய மிக முக்கியமான அறிமுகம் என நம்பியின் இந்த கட்டுரை நூலை கருதுகிறேன். ஓவியர் ஜீவானந்தத்தின் கோட்டுச் சித்திரங்களோடு நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது, கண்காட்சி முடிவதற்குள் வந்துவிடும்  என நம்புகிறேன்.

பதாகை இணைய தளம் தொடர்ந்து செயல்பட காரணமாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி. பதிப்பகமாக மலர்ந்திருக்கும் பதாகையையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய ஆண்டு பதாகை- யாவரும் கூட்டாக வெளியிட்ட

1. பாகேஸ்ரீ- எஸ்.சுரேஷ்- சிறுகதைகள்

2. வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி – – சிறுகதைகள்

3. வளரொளி- நேர்காணல்கள், மதிப்புரைகள்- சுனில் கிருஷ்ணன்

ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன.

இந்த நூல்கள் புத்தக கண்காட்சியில் யாவரும் அரங்கில் (189 & 190) கிடைக்கும். ஆன்லைனில் பெற http://www.be4books.com or Whatsapp no.9042461472யை தொடர்புக் கொள்ளலாம்.

குளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை

$
0
0

அந்த நள்ளிரவில் “தப் தப் தப்” என்று செருப்பு முகத்தில் அறையும் ஓசை தெரு முக்கு திரும்பும் போதே என் வண்டி சத்தத்தை தாண்டி கேட்டது.

செல்வத்தை அவன் மச்சான் நடு ரோட்டில் நிற்க வைத்து செருப்பால் அடித்துக் கொண்டிருந்தான். அவன் மச்சானை விலக்கி வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ரத்தம் வழிந்து கொண்டிருந்த உதட்டில் தண்ணீர் அடித்து துடைத்துவிட்டு செல்வத்தை அவன் வீட்டு முன் படிக்கட்டில் உட்கார வைத்தேன்.

எப்படி இருந்த பையனிவன்

முதலில் இவனை என் வீடியோ கடையில் வைத்துதான் பார்த்தேன், இருந்தால் பத்து, பன்னிரெண்டு வயதிருந்திருக்கும். அப்பொழுது நான் சிவில் எஞ்சினியரிங் டிப்ளமா முடித்துவிட்டு வேலை எதுவும் கிடைக்காததால் அரிசிபாளையம் மெயின் ரோட்டில் சின்னதாக ஒரு கடை பிடித்து வீடியோ காசேட் லைப்ரரி நடத்திக் கொண்டிருந்தேன்

இவனும் குருவியும் ஒரே போன்றிருந்த  ஹீரோ புக் சைக்கிளில் வந்து கடை முன்னால் இறங்கினார்கள். இன்னும் நினைவிருக்கிறது இரண்டும் சிகப்பு கலர்

குருவிதான் உள்ளே நுழையும்போதே கேட்டான், “அண்ணா, ஈ டி எக்ஸ்ட்ரா  டெரஸ்ரியல் இருக்கானா,” என்றான்.

இருக்கு,” என்றேன்

இருவரும் சந்தோஷமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அண்ணா குடுங்கன்னா”

எங்க குடியிருக்கிங்க,” என்றேன்

இங்கதானா, அவ்வை மார்க்கெட் முன்னாடி செய்யட் காதர் ஸ்டீரிட்”

அங்க எந்த வீடு” என்றேன்

எட்டாம் நெம்பர், சுந்தரம் மில்ஸ் வீடு, இவன் பத்தாம் நெம்பர் பருப்பு மண்டி வெச்சிருக்காங்களே வரதராஜன்” 

ராகவன் தம்பியா நீ?”

ஆமாண்ணா,” என்றான் குருவி

சரி, அவன் பேர்லயே எழுதிக்கிறேன். டென் ரூபீஸ், ரெண்டு நாள்ல திருப்பி கொண்டு வந்திரணும் இல்லாட்டி எக்ஸ்ட்ரா கொடுக்கணும்” என்றேன்

சரிணா , நீங்க எனக்கும் , செல்லுக்கும் தனியாவே அக்கவுண்ட் போடுங்க” என்றான் குருவி.

ஏண்டா” என்றேன்.

சாமுண்டி கடைல எங்கண்ணனுக்கும் சேத்து நாங்க காசு கொடுத்தோம். வேணும்னே காசு குடுக்க மாட்டான். அபுறம் என் பாக்கெட் மணி போவும், நீங்க என் பேர்லயும் செல்லு பேர்லயும் ஒரு அக்கவுண்ட் போடுங்க,” என்றான்.

நான் சிரித்துக்கொண்டே, “சரி பேரச் சொல்லு,” என சிட்டையில் பேரும், அட்ரசும் எழுதிக் கொண்டேன்.

இவ்வளவு பேச்சும் நடந்து கொண்டிருக்கையில் செல்லுகடையில் உள்ள காஸெட்டுகளை ஒவ்வொன்றாய் நின்று பார்த்து கொண்டிருந்தான்ஒரு வார்த்தையும் பேசவில்லை

காஸெட்டை கொடுத்தேன்

குருவி “டேய்,” என்றான்.

செல்லு திரும்பி பார்த்துவிட்டு, பாக்கெட்டில் கைவிட்டு ஐந்து ரூபாய் எடுத்து கொடுத்தான்.

குருவி தன் பாக்கெட்டில் இருந்து ஐந்து ரூபாய் எடுத்து இரண்டையும் என்னிடம் கொடுத்தான்.

இது நல்ல டிமாண்ட்ல இருக்க படம், பாத்துட்டு உடனே குடுத்துறனும்,” என்றேன்

சர்ணா, தாங்ஸ்ணா, வாடா” என்றுவிட்டு வெளியேறினான்.

நின்ற இடத்தை விட்டு நகராமல், “குருவி இங்க வா,” என்றான் செல்லு.

குருவி மீண்டும் கடைக்குள் வந்து செல்லின் அருகில் நின்றான். சிட்டையை உற்றுப் பார்த்தேன். சிட்டையில் இருக்கும் பேருக்கும் குருவிக்கும் ஒரு அட்சரம் கூட சம்மந்தமில்லை

டிஸ்ப்ளேவில் இருந்த க்ரேஸி பாய்ஸ் ஆப் த கேம்ஸ் விடியோ காஸெட் அட்டையை சுட்டினான், “இதுவும் எடுக்கலாமா?”  என்றான்

டேய், மொதல்ல இதப் பாப்பம் வாடா,” என்று இழுத்துக் கொண்டு போனான் குருவி.

அதன் பிறகு வாரத்திற்கு இரண்டு முறையாவது இருவரும் கடைக்கு வந்து விடுவார்கள்

ஆங்கில காமெடி மற்றும் சிறுவர் படங்கள் மேல் இருவருக்கும் பெரும் ஆர்வம். அவர்களுக்காகவே நான் பிரிண்ட்களை வரவழைக்கும் அளவுக்கு ரெகுலர் கஸ்டமர்கள் ஆனார்கள். குருவி விடாமல் பேசிக் கொண்டே இருப்பான், செல்லு பேசாமல் புன்னகையுடன் உடன் நிற்பான்ஆனால் சில வாரங்களிலேயே எனக்கு தெரிந்தது செல்லுதான் படங்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கிறான் என, அதில் ஒரு தொடர்ச்சியும் நேர்த்தியும் இருக்கும். ஒருவன் இருவருக்கும் சேர்த்து பேசுகிறான் இன்னொருவன் இருவருக்கும் சேர்த்து யோசிக்கிறான் என நினைத்து கொண்டேன்.

செல்லு மட்டுமல்ல அவன் பிற நண்பர்கள், அவன் வீடு, வீதியாட்கள் என எல்லோருமே குருவியை குருவி என்றுதான் அழைத்தார்கள் என்பது தெரிய எனக்கு சில மாதங்கள் ஆனது. யாருக்கும் பெயர்க் காரணம் தெரியாது , அவன் பெயரில் அவனை அழைத்து நான் யாரையும் பார்த்ததில்லை.

பள்ளிக்கூடம் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் என் கடையில் எப்பொழுதும் இருவரும் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் படம் எடுத்தால் சிட்டையில் எழுதுவதெல்லாம் முதல் வருடத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அவர்களுக்கு வேண்டிய படங்கள் கடையில் இல்லை என்றால் அவர்களே கடை போனில் என் சப்ளையர்களை அழைத்து  ஆர்டர் போட்டு வாங்கி விடுவார்கள். அவர்களுடைய பள்ளி நண்பர்கள் அத்தனை பேரும் வாடிக்கையாக வாங்கும் கடையானது என் கடை. மற்ற பெரிய கடைகள் எல்லாம் பெரியவர்களுக்காக படங்கள் எடுத்து வைக்க இவர்கள் இருவரால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காஸெட் எடுக்கும் கடையாக என் கடை மாறிப்போனது.  

வேறு ஏரியாக்களில் இருந்தெல்லாம் தேடி வந்து வாங்க ஆரம்பித்தனர். சேலத்தில் பேர் சொன்னாலே தெரியும் வீடியோ கடைகளில் என்னுடையதும் ஒன்றானதுகடைக்குள் கிரிக்கெட் உபகரணங்கள் வைப்பது, நண்பர்களோடு உட்கார்ந்து அரட்டை அடிப்பது என இருந்து அவர்கள் பனிரெண்டாவது வகுப்பு போகும் போது ரோட்டில் போகும் பெண்களை கடைக்கு வெளியில் நின்று கொண்டு ரூட் விடுவது என  பள்ளிக் கூடம் போகாத பிற நேரம் முழுதும் என் கடையே கதி என கிடந்தனர் இருவரும்

அவர்கள் பார்க்கும் படங்களும் சிறுவர் படங்களில் இருந்து லாரன்ஸ் ஆப் அரேபியா, ப்ரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் என போய், பேஸிக் இன்ஸ்டின்க்ட் வழியாக இரண்டு மணி நேர முழு நீள நீலப்படம் பார்ப்பது வரை முன்னேறியிருந்தது

என் சப்ளையர் ஒருவன் கேபிள் டி.வி என ஒன்று மெட்ராஸில் புதிதாக வந்திருப்பதாகவும், இனி படமெல்லாம் அதில்தான் ஓடும், வீடியோவெல்லாம் போய்விடும் என்றான். அவன் விபரம் தெரிந்தவன் என்பதால் அவனை முழுமையாக நம்புவது என முடிவெடுத்தேன். அவனிடமே அதற்கான மெட்டீரியலை வாங்கி, கடையை கார்ட்போர்ட் சுவர் வைத்து இரண்டாய் தடுத்து பின் பக்கம் கேபிள் டி.வி சாதனங்களை வைத்துவிட்டு, முன் பக்கம் வீடியா லைப்ரரியாக மாற்றினேன். வீடு வீடாக நடையாய் நடந்து, “தினம் ஒரு படம் போடுவோம்கா, இருவத்தஞ்சு ரூபாதான் மாசத்துக்கு, ரெண்டு மாசம் பாத்துட்டு காசு குடுங்கக்கா,” என கொஞ்சி கூத்தாடி கேபிள் வயர் இழுத்துக் கொண்டிருந்த நேரம். இவர்கள் கடையில் இருந்தால் கல்லாவை பூட்டாமல்தான் வெளியே போவேன்

கஸ்டமர் கொடுக்கும் காசை வாங்கி செல்லும், குருவியும்தான் கல்லாவில் போடுவார்கள். தெரியாமல் அவர்கள் கைக் காசை  போட்டிருப்பார்களே ஒழிய ஒரு நாளும் கல்லாவில் காசு குறைந்ததில்லைபல பேர் அவர்கள் இருவரும் நடத்தும் கடை அது என என்னிடமே சொல்லும் அளவுக்கு கடையையும் அவர்களையும் பிரிக்க முடியாதிருந்தது.

ஒரு நாள் கேபிள் கான்வாஸிங் போய் விட்டு கடைக்கு வர மிக தாமதமாகிவிட்டதுவெளியில் யரும் இல்லை, கேபிள் தடுப்புக்குள் இருவரின் பேச்சு குரல் மட்டும் கேட்டது

நீலப்படம் ஏதாவது பார்க்கிறார்கள் போலவென நினைத்து கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றேன். குருவி கையில் ஒரு புல்லட் பியர் பாட்டிலை வைத்துக் கொண்டிருந்தான். செல்லு நான் உள்ளே வருவது கூட தெரியாமல் பாட்டிலையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கோபத்தில் பாய்ந்து பாட்டிலை பிடிங்கினேன்.

ஏற்கனவே பாதி குடித்துவிட்டிருந்தனர்.

பாபுனா,” என்றான் செல்லு, பாட்டிலுக்கு கையை நீட்டியபடி.

ஏற்கனவே உங்க ரெண்டு பேர் வீட்லயும் நீங்க படிக்காம இங்கயே உக்காந்திட்டு இருக்கிங்கன்னு என்ன திட்றாங்க. இன்னும் இதயெல்லாம் வேற பண்ணிங்கன்னா நாந்தான் உங்களுக்கு ஊத்தி உட்றேனு சொல்லுவாங்க. இன்னையோட சரிடா, இனிமேலு கடப்பக்கமே வராதிங்க. தயவு செஞ்சு கெளம்புங்க மொதல்ல,” என்றேன்

ண்னா இன்னிக்கிதான் ட் ரை பண்லாம்னு வாங்னோம்,” என்றான் குருவி

டேய், போதும், கெளம்புங்க மொதல்ல” 

போறணா, குடிக்காதிங்கன்னு சொல்ணா, கடைக்கு வராதிங்கன்னெல்லாம் சொல்லாத,” என்றான் செல்லு.

பெரிய மனுசா, பன்னண்டாவது படிச்சு மொதல்ல பாஸ் பண்றா. கட இங்கயேதான் இருக்கும், போ,” என்றேன்.

ணா, பாதி பாட்டிலு அப்படியே இருக்கு,” என்றான் குருவி தன் வழக்கமான சிரிப்போடு.

டேய் அடிச்சே புடுவேன், போயிரு பேசாம,” என்றுவிட்டு விடு விடுவென கடைக்கு முன் வந்து சாக்கடையில் மீதி பாட்டிலை கொட்டினேன்.

உண்மையிலேயே கோபமாக இருக்கிறேன் என்பது புரிந்து பேசாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

அடுத்த நாளே வழக்கம் போல் வந்து நின்றனர்.

நான் பேச வாயெடுப்பதற்குள், “உனக்கு நாங்க இங்க குடிக்க கூடாது அவ்ளோதான, குடிக்க மாட்டோம். நீயும் அட்வைஸ் மழைல எங்கள முக்கி எடுக்காத,” என்றான் குருவி.

அதற்குள் ஒரு சிறுவன் வந்து “செல்லுணாஹனி ஐ ஷ்ரங்க் த கிட்ஸ் இருக்கானா” என்றான்.

செல்லு தலையை ஆட்டிவிட்டு கவுண்டர் தட்டியை தூக்கிவிட்டு உள்ளே வந்து கீழிருந்த காஸட்டை எடுத்து சிறுவனிடம் கொடுத்தான்.

காப்பி கம்மியாதான் இருக்கு, போன தடவ மாதிரி லேட் பண்ண, பைன் போடுவேன்,” என்றான் செல்லு.

சர்ணா, உடனே குடுத்துர்ரன்னா. உன் கடைல இல்லாத படமே இல்லனா,” என்றான் சிறுவன் உற்சாகமாக

அவன் கொடுத்த பணத்தை வாங்கினான். கல்லா முன்னால் நின்று கொண்டிருந்த என்னை பார்த்து விலகச் சொல்லி தலையை காண்பித்தான். விலகினேன். கல்லாவை திறந்து காசை போட்டுவிட்டு அருகில் இருந்த சேரில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டான்.

நான் ஒன்றும் பேசாமல் கேபிள் இழுக்கும் பையனை கூட்டிக் கொண்டு தெருவில் இறங்கினேன். அதன் பிறகு ஒரு நாள் கூட அவர்களிருவரும் என் கடையில் வைத்து குடித்ததில்லைப்ளஸ் டூ தேர்வு, நுழைவு தேர்வுக்கு ராசிபுரம் கோச்சிங் என போகும் வரை கடைக்கு வருவதை குறைக்கவும் இல்லை.

இருவருக்கும் ரிசல்ட் வந்தது. என்ஜினியரிங் கட் ஆப் மார்க் இருவருக்கும் நூற்றி இருபதுக்கும் கம்மி. ஒரு வாரம் கடை பக்கமே வரவில்லை. ராகவன் தான் படம் எடுத்து போகும் போது இருவரும் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாகவும் அதுவும் ஒரே காலேஜில் சேர வேண்டும் என அடம் பிடிப்பதாகவும் சொன்னான். தமிழ் நாட்டில் சேர முடியாது, பெங்களூரில் பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லிவிட்டு போனான்

இங்கயே இருந்தா உன் கடைல உக்காந்து பெஞ்ச தேச்சுகிட்டு உருப்படாமதான் போவானுங்க, அங்கயாவது போயி படிக்கறானுங்களானு பாக்கலாம்,” என்றான்.

எனக்கு சங்கடமாக இருந்தது.

ஒரு வாரத்தில் முகமெல்லாம் சிரிப்பாக இருவரும் கையில் ஒரு டெய்ரி மில்க் சாக்லேட் பாருடன் கடைக்குள் நுழைந்தனர். ஒருவன் கையை பிடித்து கொள்ள இன்னொருவன் ஒரு வில்லையை உடைத்து என் வாய்க்குள் திணித்தான்.

டும்கூர் சித்தகங்கால ரெண்டு பேருக்கும் சீட் போட்டாச்சு, அடுத்த வாரம் கெளம்பறோம்” என்றான் குருவி.

அப்படியென்னடா இன்ஜீனியரிங்கே வேணும்னு அடம் பிடிச்சிங்களாம்,” என்றேன்.

பி. டெக் முடிச்சிட்டு ஜி ஆர் ஈ எழுதி யூ எஸ் போயிருவோம் பாபுன்னா, அங்க போயி ஷாரன் ஸ்டோன் மாதிரி ஒரு பிகர கரெக்ட் பண்ணி செட்டில் ஆக வேண்டியதுதான். பக்கா ப்ளானிங்,” என்றான் குருவி வாயெல்லாம் பல்லாக, செல்லு என்னை பார்த்து கண்ணடித்தான்.

அதானே பாத்தேன். என்னடா உருப்பட்டுடிங்களோனு நெனச்சேன்,” என்றேன்.

போறதுக்குள்ள உன் கடைல என்னென்ன படம் இருக்குனு சொல்லிட்டு போறோணா இல்லாட்டி அல்லாடி போயிருவ,” என்றான் செல்லு பெரிதாக சிரித்தபடி.

நேரம் டா. வாங்க இன்னிக்கி என்னோட ட்ரீட் உங்களுக்கு”  

பாவா கடைக்கு கூட்டிச் சென்று அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தேன்

பிச்சு போட்ட கோழி, புறா ரோஸ்ட், கல்டா, முட்டை ரோஸ்ட் என ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.

எங்கோ எனக்குள் இருந்த குற்ற உணர்வு இவர்களுக்கு சீட் கிடைத்ததில் குறைந்து நிம்மதியாய் இருந்தது. அவர்கள் சாப்பிடுவதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதன் பிறகு அவர்களை அதிகம் நான் பார்க்கவில்லை. கேபிள் வேலைகளில் மூழ்கிவிட்டதால் கடையில் வேறு ஆள் போட்டு விட்டேன். கடையில் நான் இருப்பதில்லை என்பதால் ஊருக்கு வரும் போது அவர்கள் கடை பக்கம் வருவது குறைந்தது. ஊருக்கு வந்தால் சாமுண்டி செட்டியார் கடை வாசலில் நின்று நண்பர்களுடன் சிகரெட் குடிக்கிறார்கள் , கேப்டன் பங்க் பக்கத்தில் உள்ள பாரில் குடிக்கிறார்கள் என என் காதுக்கு செய்தி வந்து கொண்டிருந்தது. அவர்களை பார்ப்பதே எப்போதாவது என ஆகிவிட்டதால் பார்க்கும் போது அவர்களிடம் அதையெல்லாம் நான் கேட்பதில்லை.

ஓரு நாள் இருவரும் நான் கடை மூடும் நேரத்தில் இரண்டு சிகப்பு கலர் புத்தம் புது யமஹா பைக்கில் வந்திறங்கினர்.

எப்படா வந்திங்க, என்ன புது பைக்கா?” என்றேன்

பைக் எடுக்கறதுக்குனே வந்தோணா,” என்றான் குருவி.

ஊருக்கு எடுத்திட்டு போறிங்களா?” என்றேன்.

ஆமாண்ணா, முடியவே முடியாதுனாங்க அழுது அடம் பிடிச்சு வாங்கிட்டோம்ல,” என்றான் குருவி.

டேய் பாத்து ஓட்டுங்கடா,” என்றேன், வண்டியை சுற்றி வந்து பார்த்துக் கொண்டே.

ஓட்டி பாருணா,” வண்டியை விட்டு இறங்கி சாவியை கையில் கொடுத்தான் செல்லு.

ஒரு ரவுண்டு ஓட்டி விட்டு கொடுத்தேன்.

என்னுதையும் ஓட்டி பாரு,” என்று குருவி அவன் வண்டியை கொடுத்தான்.

அதையும் ஒரு ரவுண்டு ஓட்டி விட்டு கொடுத்தேன்.

நெம்பர் கூட ஒன்று போலவே இருந்தது இரு பைக்கிலும், ஒரே ஒரு எண் மட்டும் வித்தியாசம்.

லேட்டாச்சு. செந்திலுகிட்ட காட்டணும் இன்னும். கிளம்பறோம்னா, அடுத்த தடவ வரும் போது வரோம்,” என்றான் குருவி

இருவரும் ஒருவர் பின் ஒருவர் காற்றை கிழித்துக் கொண்டு வேகமாக போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்.

ஏதோ ஒரே நாளில் அரை டவுசரில் இருந்து பாண்ட்டுக்கு அவர்கள் மாறிவிட்டது போல இருந்தது எனக்கு

அதன் பிறகு குருவியை நான் மார்ச்சுவரியில் பிணமாகத்தான் பார்த்தேன் , மூன்று மாதம் கழித்து.

லீவுக்கு வந்தவர்கள் பாரில் சென்று குடித்துவிட்டு, நள்ளிரவு தாண்டி போதையில் அண்ணா பூங்கா பெரியார் மேம்பாலம் முதல் ஐந்து ரோடு வரை டூ வீலரில் ரேஸ் விட்டு விளையாடி இருக்கிறார்கள்அப்பொழுதெல்லாம் இரவு பதினோரு மணிக்கு மேல் அவ்வளவு பெரிய ரோடு வெறிச்சோடி போய் கிடக்கும்மூன்றாவது முறை ரேஸ் விடும்போது குருவி கட்டுப்பாடு இழந்து வண்டியை சாலைக்கு நடுவில் இருந்த டிவைடரில் ஏற்றிவிட்டான். வண்டியில் இருந்து தெறித்து, விளக்கு கம்பத்தின் மேல் தூக்கி எறியபட்டிருக்கிறான்.   தலை முதலில் கம்பத்தின் மேல் மோதி, பதினைந்தடி உயரத்தில் இருந்து தலைக் குப்புற ரோட்டில் விழுந்திருக்கிறான்

செல்லு உலுக்கி எழுப்பப் பார்த்திருக்கிறான். தலையில் இருந்து பெருகிய ரத்தத்தை பார்த்து பயந்து மேம்பால இறக்கத்தில் இறங்கி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு ஓடி ஆட்களை கூட்டி வந்திருக்கிறான்.

குருவியின் உயிர் அவன் தரையை தொடும் முன்பே பிரிந்துவிட்டிருக்கிறது. நேராக மார்ச்சுவரிக்குதான் எடுத்து சென்றிருக்கிறார்கள்.

காலையில் தகவல் தெரிந்தவுடன் கடையை சாத்திவிட்டு சென்றேன். ராகவனுக்கு போலீஸ், ஆஸ்பிடல் சம்பிரதாயங்களுக்கெல்லாம் ஒத்தாசை செய்தேன். குருவியின் உடலை ஆஸ்பிடலில் இருந்தே காக்காயன் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று புதைத்தோம்

வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு உட்காரும் போதுதான் செல்லின் ஞாபகம் வந்தது

அவனை ஆஸ்பிடலில் பார்த்ததாகவே நினைவில்லை

வண்டியை எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றேன், அவன் அங்கு இல்லை. சாமுண்டி செட்டியார் கடைக்கு சென்றேன். அவன் நண்பர்கள்தான் நின்று தம்மடித்து கொண்டிருந்தார்கள். என்னை பார்த்தவுடன் ஒருவன் என் அருகில் வந்தான்

செல்லு இங்க வர்லணா. கீதாலாயா தியேட்டர்கிட்ட பாத்ததா ராஜேஷ் சொன்னான்,” என்றான்.

குடிச்சிருந்தானா,” என்றேன்,

சற்று தயங்கி விட்டு, “காலைல இருந்தே நிறைய சிரப் அடிச்சிட்டு இருந்தாண்ணா,” என்றான்.

எனக்கு பகீரென்றது. போதைக்காக ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் இருமல் மருந்தை சில மாத்திரைகளோடு சேர்த்து குடிக்கும் பழக்கம் காலேஜ் மாணவர்களுக்கு அந்த சமயத்தில் இருந்தது. செல்லு அதைச் செய்வான் என நான் நினைக்கவே இல்லை.

கீதாலாயா தியேட்டர் போனேன், அவன் வண்டி டூ வீலர் ஸ்டாண்டில் இருந்தது. தளபதி படம் ஓடிக் கொண்டிருந்தது

படம் முடியும் வரை அவன் வண்டிக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன்.

வந்தவன் என்னை பார்த்து வழக்கம் போல் புன்னகைத்தான்.

ண்ணா , சூப்பர் படண்ணா, செக்க காமிரா வொர்க்,” என்றான்.

சாப்டியா?”

இல்லணா”.

வா போய் சாப்புடலாம்”.

ம்”.

நியூ ரெஸ்டாரென்ட் போலாம், நீ முன்னாடி போ”

அவன் தெளிவாகத்தான் ஓட்டிக் கொண்டு போனான், நான் எங்கே விழுந்து விடுவானோ என்ற பயத்தில் அவன் பின்னாலேயே இடை வெளி விடாமல் தொடர்ந்தேன்.

போஸ் மைதானம் பாலம் தாண்டி, ஹென்றி அன் ஊல்ஸி மணிக் கூண்டுக்கு முன் திரும்பி ஹோட்டல் வாசலில் வண்டியை நிறுத்தினான்

அவன் போதையில் இருப்பதற்கான ஒரு அறிகுறியும் இல்லை

நெய் புரோட்டா ஆர்டர் செய்தான். முகத்தில் கவலை ரேகையே இல்லை, அமைதியாக உட்கார்ந்திருந்தான். புரோட்டா வந்தது, இரண்டு வாய் சாப்பிட்டவுடன் ஒமட்டலுடன் வாஷ் பேசினுக்கு ஓடி வாந்தி எடுத்தான்

எடுத்து விட்டு வந்தவன், வேணாம் என்பது போல் தலையாட்டிவிட்டு வெளியே வண்டியில் போய் உட்கார்ந்து கொண்டான்.

நானும் பாதியிலேயே எழுந்து கொண்டு பில்லை கொடுத்து விட்டு அவனருகில் போய் நின்றேன்.

சற்று நேரம் கழித்து “ அழுதியாடா,”  என்றேன்

அவன் ஒன்றும் சொல்லவில்லை

நான் ஒரு கிங்ஸ் பற்ற வைத்துக் கொண்டு அவனுக்கொன்று கொடுத்தேன்.

அழுதுரு செல்லு,” என்றேன்.

அதற்கும் அவன் ஒன்றும் சொல்லவில்லை, புகையை ஆழ இழுத்து கொஞ்சமாக வெளியே விட்டு கொண்டிருந்தான்.

நான் புகையை நுரையீரலுக்குள் இழுத்து தேக்கி கண்ணை கிறங்கி  மூடினேன். குருவியின் முகம் கண்ணுள் வந்ததுஅவன் கோவில் மணி போல் கணீரென்ற சிரிப்பும், ஓலைப்பாயின் மேல் பெய்யும் மழை போல ஓயாத பேச்சும்.

பேசிகிட்டே இருப்பான் தாயோளிஇப்படி அல்பாயுசுல போய்டான்,” வாய்விட்டு சொல்லிவிட்டு என்னையறியாமல் தேம்பி அழ ஆரம்பித்தேன். ரோடு என்னும் பிரக்ஞை எதுவும் இல்லை. ஒன்பது வருடங்கள் என் கண் முன் வளர்ந்த பையன். காலையிலிருந்து அடக்கி வைத்திருந்த துக்கம் அழுகையாய் மடை திறந்து கொட்டி கொண்டிருந்தது.

ஹோட்டலில் இருந்து ஒருவர் வண்டி எடுக்க அருகில் கடந்து போனார். சட்டென்று என்னை திரட்டி கொண்டு, கர்ச்சீப்பால் முகத்தை துடைத்தேன்.

செல்லு ரோட்டை வெறித்து கொண்டு அமைதியாய் உட்கார்ந்திருந்தான்

அவனை தொட்டு திருப்பினேன்

பொறந்ததுல இருந்து கூட இருந்தவன் இப்படி போறதுஎனக்கே தாங்க முடியல உனக்கு எப்படி இருக்கும்னு எனக்கு புரியுது. அவங்கூட இருந்தத எல்லாம் நெனச்சுக்கோ அழுதுருவ,” என்றேன்.

என்னை பார்த்து சிரித்தான்

போலாம் பாபுனா,” என்று வண்டியில் சாவியை போட்டான்

ஏதோ சரியாக இல்லை என புரிந்தது. எதுவும் பேசாமல் அவன் பின்னால் அவன் வீடு வரை வந்தேன். வண்டியை நிறுத்தியவன் நேராக வீட்டிற்குள் போய் அவன் ரூமுக்குள் புகுந்து கொண்டான்

இரண்டு வீடு தள்ளியிருந்த குருவி வீட்டிற்கு நடந்தேன். செல்லின் அப்பா முன்னால் சேரில் உட்கார்ந்திருந்தார்

வீட்டிற்குள் இன்னும் அழுகை சத்தம் கேட்டு கொண்டிருந்தது.

செல்லின் அப்பாவை தோளை தொட்டு தனியாக கூட்டி சென்றேன்

அண்ணா, செல்ல டும்கூருக்கு உடனே அனுப்பி வைங்க. அவன் இங்க இருக்கறது சரியா படல எனக்கு,” என்றேன்.

அவன் சுடுகாட்டுக்கு வராதப்பவே எனக்கு கலுக்குனுதான் இருந்துச்சு. மொதல்ல இந்த பாழா போன பைக்க விக்கணும்,” என்றார்.

சற்று நேரம் கழித்து “தனியா இருந்தா எதாச்சும் பண்ணிக்குவானோனு பயமா இருக்கு பாபு,” என்றார்.

அதெல்லாம் ஒன்னும் பண்ணிக்க மாட்டாணா. அவன் இங்க இருந்தா இதே ஞாபகமா சுத்திட்டு இருப்பான். அனுப்பிடுங்க,” என்றேன்

சாவு வீட்டில் பெருத்த ஓலம் ஒன்று எழுந்தது. சொந்தக் காரர்கள் யாராவது ஊரில் இருந்து வந்திருக்க வேண்டும்.

வீட்டை திரும்பி பார்த்துவிட்டு, “நீ சொல்றதும் சரிதான், எம்பேச்ச எங்க கேப்பான் , அவனம்மாகிட்ட பேசறேன்,” என்றார்

அடுத்த நாளே செல்லு டும்கூர் கிளம்பிப் போனான்.

சென்றவன் ஆறேழு மாதங்கள் சேலம் பக்கமே வரவில்லை. அவன் மறக்கட்டும் என அவன் வீட்டிலும் அவனை வா வென்று சொல்லவில்லை

அதற்குள் எனக்கு கேபிள் டி.வி நன்றாக பிக் அப் ஆகிவிட்டது. லோக்கல் திருவிழா வீடியோ எடுத்து ஒளிபரப்புவது, கடை விளம்பரங்கள் பிடித்து அவற்றை வீடியோ எடுத்து கேபிள் சானலில் ஒளிபரப்புவது என ஆரம்பித்தேன். இடக்குறைவால் வீடியோ கடையை மூடிவிட்டு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அனைத்தையும் அங்கு மாற்றிக் கொண்டேன். இருந்த வேலையில் யாரையும் பார்ப்பதற்கு கூட எனக்கு நேரம் இல்லாமல் போனது.

கோட்டை பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்பை வீடியோ எடுக்க போகும் போது ராகவனை பார்த்தேன்.

அவனை பார்த்தவுடன் நான் கேட்ட முதல் கேள்வியே, “செல்லு எப்டி இருக்கான்? ஊரு பக்கம் வந்தானா?” என்பதுதான்.

ராகவன், “ இங்கதா இருக்கான் ரெண்டு மாசமா. காலேஜ் ஹாஸ்டல்ல டோப் அடிச்சிருக்கான். சீட்ட கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டானுங்க.,“  என்றான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சற்று தணிந்த குரலில், “பெங்களூர்லயே ரீ ஹாப்ல சேத்துவிட்டுருக்காரு வரதண்ணன், அங்க இருந்து செவுரேறி குதிச்சு எங்கயோ போயி மருந்தேத்திகிட்டு பஸ்ஸ புடிச்சு ஊருக்கு வண்டான். சும்மா வந்திருந்தாலும் பரவால்ல ஒரு நர்ஸோட மோதரத்த திருடிட்டு வந்திருக்கான். கர்நாடகா வேறயா வரதண்ணண் படாத பாடு பட்டு , தண்ணியா செலவு பண்ணி போலிஸ் கேஸ் இல்லாம பண்ணியிருக்காரு. மெண்டலாயிட்டான், பாபு,” என்றான்.

வீட்லயேதான் இருக்கானா?” என்றேன்.

கிட்டத்தட்ட பூட்டிதான் வெச்சிருக்காங்க. ஒரு நாளு சாமுண்டி வரைக்கும் நடந்தாவது போய்ட்டு வரேனு அவங்கம்மாகிட்ட ரொம்ப கெஞ்சியிருக்கான். கைல காசெல்லாம் எதுவும் குடுக்காம அனுப்பிவுட்ருக்காங்க. திரும்பி வந்தவன் புல் டைட்டு. காச கீச திருடிட்டானா பார்த்த அதுவும் இல்ல. ஆர்த்திதான் அவன் மைனர் செயின் சின்னதா இருக்க மாதிரி இருக்குனு சொல்லியிருக்கா. செயின்ல பாதிய நகை கடைல வெட்டி வித்திட்டு டோப்பு வாங்கியிருக்கான் பாபு. எனக்கெல்லாம் என்ன சொல்றதுனே தெரில,” என்றான்.

வீட்லயே வெச்சு ட்ரீட்மண்ட் பண்ண முடியாதா?” என்றேன்.

இந்த மாதிரி கேஸ் எல்லாம் ஜெயில் மாதிரி ஒரு ரீ ஹாப் செண்டர்லதான் வெச்சு ட்ரீட் பண்ணனுமாம். மெட்ராஸிக்கோ பெங்களூருக்கோதான் கூட்டிட்டு போவணும். வரதண்ணன் என்ன பண்ணப் போறாருனு தெரியல,” என்றான்

அன்றே சென்று பார்க்க வேண்டும் என நினைத்தேன் , சவுண்ட் மிக்ஸிங் வேலைகள், வேறொரு இடத்தில் மஞ்சு விரட்டு கவரேஜ் என்று பண்டிகையெல்லாம் முடிந்து ஒரு வாரம் கழித்துதான் அவன் வீட்டுக்கு போக முடிந்தது

அவன் வீட்டில் இல்லை. வரதண்ணன் அவனுக்கு மயக்க ஊசி போட்டு ஆம்புலன்ஸில் பெங்களுர் நிம்ஹான்ஸில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்

வீட்டில் யார் முகத்திலும் ஒளியில்லை, வீடே சாவு வீடு போல துக்கம் நிறைந்து கிடந்தது.

அங்கே இருக்க பிடிக்காமல் காபியை அவசரமாய் குடித்துவிட்டு கிளம்பிவிட்டேன்

அதன் பிறகு பல மாதங்கள் கழித்து ஒரு இண்ட் சுஸிகி வண்டியில் என் கேபிள் அலுவலகத்திற்கு வந்து இறங்கினான்

பாபுணா,” என்றான் அதே புன்னகையுடன்.

தோளோடு அனைத்து என்னுடைய ஆபிஸ் ரூமுக்குள் கூட்டி சென்றேன்

எப்டி இருக்கற, எப்படா வந்த பெங்களூர்ல இருந்து?” என்றேன் உற்சாகமாக

நல்லாருக்கனா, ரெண்டு வாரம் ஆச்சி வந்து”

முழுசா வெளிய வண்ட்டியா”

வித் ட்ராயல் எல்லாம் போச்சு, க்ரேவிங்கும் இல்ல. ரெண்டு மாத்தர மட்டும் குடுத்திருக்காங்க. நார்மலாதான் இருக்கேன்”

என்ன பண்ணப் போற, மண்டிக்கு போ போறியா”

இல்லனா, வைஸ்யால பி காம் சேந்துருக்கேன்”

சூப்பர்றா. அவன் சட்டுனு போய்ட்டான் நீ சின்னம்பட்டு போப் போறியோனு ரொம்ப பயந்தட்டண்டா,” இதைச் சொல்லும் போது  என் கண்கள் கலங்கிவிட்டன.

ம்.” சுற்றிலும் பார்த்துவிட்டு, “பிசினஸ் நல்லா பிக் அப் ஆயிருச்சு போலருக்குனா” என்றான்

மெட்ராஸ்காரன் அருணுக்குதான் தாங்க்ஸ் சொல்லணும். டி.வியெல்லாம் பாக்குறியா. சன் டிவி, எம் டிவி , வீ டி வினு நிறைய சானல் வந்துருச்சு,” என்றேன்.

போட்டியா உங்க சானலும் ஓடுதே. உங்க சானல பாத்துட்டுதான் வண்டியெடுத்துட்டு பாக்க வந்தேன்,” என்றான்.

பலமாக சிரித்துவிட்டு, “லொல்லு மட்டும் அப்படியே இருக்குடா உனக்கு,” என்றேன்

 நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பிச் சென்றான்

எனக்கு உண்மையாகவே குருவியும் அவனுடன் இருந்தது போலவே ஒரு உணர்விருந்தது அன்று.

அதன் பிறகு அவனை மீண்டும் அடிக்கடி பார்த்தது அவன் காலேஜ் மூன்றாம் ஆண்டு படிக்கும் போதுதான். அப்பொழுது நான் என் பழைய வீட்டை விற்றுவிட்டு அவன் தெருவிலேயே ஒரு பெரிய வீட்டை வாங்கி  குடி புகுந்திருந்தேன்

ரோட்டில் பார்த்தால் நின்று பேசாமல் போகமாட்டான். ஒரு நாள் பங்க் கடையில் நான் தம்மடித்து கொண்டிருக்கும் போது பார்த்தான், தம்மெல்லம் அடிப்பதில்லை என நான் கொடுத்தும் மறுத்துவிட்டான். மூன்றாம் வருட பரீட்சையெல்லாம் முடிந்துவிட்டது பி எஸ் ஜீ யில் எம் பி ஏ சேரலாம் என்றிருப்பதாக சொன்னான்உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தான், குருவியின் பேச்சு, குருவியின் சிரிப்பு, செல்லின் புன்னகை.

சொன்ன ஒன்றிரண்டு வாரங்களில் அவன் வீட்டைத் தாண்டும்போது ஒரே சத்தமாக இருந்ததுவண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன். வரதண்ணண் உள் கதவை வெளியே இருந்து சாத்தி விட்டு வீட்டு வராண்டாவில் செல்லை பெல்ட்டால் விளாசிக் கொண்டிருந்தார். செல்லின் அம்மா உள்கதவின் கம்பியை பிடித்துக் கொண்டு “ஐயோ அடிக்காதிங்க செத்துற போறான் விட்றுங்க அடிக்காதிங்க,”  என்று கதறிக் கொண்டிருந்தார்.

 நான் சென்று வரதண்ணனை பின்னால் இருந்து  இரண்டு கைகளையும் இறுகப் பிடித்து கொண்டேன். “அண்ணா, மேல கீழ ஏதாவது பட்ற போவுது, கொஞ்சம் பொறுமையா இருங்கண்ணா,” என்றேன்

படட்டும் பாபு பட்டு போய் தொலையட்டும் நாதேறி நாயி,” என்றார் மூச்சிறைக்க.

கொஞ்சம் அவரை அமைதிபடுத்தி , பெல்ட் டை கையில் இருந்து வாங்கிவிட்டு வராந்தா தின்னையில் அவரை உட்கார வைத்தேன்

செல்லு செருப்பு வைக்கும் ஸ்டேண்ட் அருகில் சுவற்றோடு ஒட்டி கால்கள் ரெண்டையும் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான்

உள் வாசல் கதவை நான் திறந்துவிட்டேன், செல்லின் அம்மா ஓடி வந்து செல்லை கையை பிடித்து தூக்கி உள்ளே அழைத்து சென்றார்

வரதண்ணன் சட்டென்று உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார். பஜாரில் எல்லோராலும் பெரும் மரியாதையுடன் பார்க்கப்படும் அவ்வளவு பெரிய மனிதர் குலுங்கி அழுவதை பார்க்க மிகுந்த சங்கடமாக இருந்தது

சற்று அழுகை அடங்கியவுடன், “என்னாச்சுண்ணா?” என்றேன்

திரும்பவும் ஆரம்பிச்சிட்டான் பாபு. சுஸிகி ஆர். ஸி புக்க வெச்சு ஆறு மாசத்துக்கு முன்னாடி மாணிக்கத்துகிட்ட வட்டிக்கு பணம் வாங்கியிருக்கான். இவன் வட்டியும் கட்டல அசலும் திருப்பல. இனிமேல் இவண்ட்ட வாங்க முடியாதுனு தெரிஞ்சி போயி இன்னிக்கி காலைல வீட்டுக்கே வந்து மாணிக்கம் என்கிட்ட சொல்லிட்டான்

இவனுக்கு எதுக்கு இவ்வளவு பணம்னு கூப்புட்டு கேட்டா மாக்கான் மாதிரி அப்படியே நிக்கறான். ரூமுக்குள்ள போயி எல்லாத்தையும் பொரட்டி பாத்தா அலமாரி ட்ராவுக்கு கீழ ஒளிச்சு வெச்சுருக்கான் பாபு. கஞ்சால இருந்து சாரு கோக்கேயினுக்கு போய்ட்டாரு இப்போ.” 

என்னால் நம்பவே முடியவில்லை. “எவ்ளோ நாளாணா?”

யாருக்கு தெரியும். நான் வீட்ல அதிகம் இருக்கறதுல்ல காலைல போனா ராத்திரிதான் வரேன். இவள கேட்டா ஒரு வித்தியாசமும் இல்ல நல்லாத்தான் இருந்தான்றா. ஆர்த்திதான் அஞ்சாறு மாசமா அவன் ரூம்ல அவனே தனியா பேசி சிரிக்கிறானு சொல்லி இருக்கா இவகிட்ட . வயசு பையன் ஏதாவது புஸ்தகம் கிஸ்தகம் படிப்பானு இவ அசால்டா உட்டுட்டா என் கிட்ட சொல்லவே இல்ல.”

ஒரு வேள திரும்ப குருவி ஞாபகம் வந்து…” என்றேன்.

அட போ பாபு. அதெல்லாம் நம்ம சொல்லிக்கலாம் சமாதானத்துக்கு. இவன் ருசி பாத்துட்டான் இனி மேல் உட மாட்டான். அதுவும் இவன உடாது. இவன் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு இத விட்டானானே எனக்கு இப்ப சந்தேகமா இருக்கு,” என்றார்.

நல்லாதான இருந்தான் ட்ரீட்மெண்ட் போய்ட்டு வந்து?”

எப்படி நம்மள ஏமாத்துறதுனு கத்துகிட்டு வந்திருக்கான் ட்ரீட்மெண்ட்ல. ஒத்த ஆம்பள புள்ள பெத்து அவன இப்படி…” அடக்க மாட்டாமல் மீண்டும் அழ ஆரம்பித்தார்.

எந்த வார்த்தையும் அவரை தேற்றாது என தெரிந்து பேசாமல் அவரருகில் உட்கார்ந்திருந்தேன்

செல்லை பார்க்காமலே வண்டி எடுத்து கொண்டு கிளம்பிவிட்டேன்.

அவனை வரதண்ணன் எங்கும் அனுப்பவில்லை. அவனை கிட்டதட்ட சிறையில் வைத்திருப்பதைப் போல் வைத்திருந்தார். அவர் மண்டி மூட்டைக்காரர்கள் இரண்டு பேர்  எந்நேரமும் அவனுடனே இருந்தனர். அனைத்து கட்டுப்பாடுகளையும் மாதம் ஒரு முறையாவது உடைத்து பவுடர் வாங்கிவிடுவான். செயின், பணம், பாத்திரம் என எது கிடைத்தாலும் அதை பவுடராய் மாற்றி விடுவான். வரதண்ணன் சோகத்தில் ஆளே வாடி வதங்கி பாதியாகி போனார்.

நான் பல முறை சொல்லியும் அவனை திரும்பவும் ரீ ஹாப் அனுப்ப அவர் சம்மதிக்கவில்லை. அதில் சுத்தமாக அவருக்கு நம்பிக்கை போய்விட்டது.

ஆர்த்தி காலேஜ் முடித்த கையோடு அவள் கல்யாணத்தை முடித்து வைத்தார். செல்லை கல்யாணத்திற்கு கூட கூட்டி வரவில்லை, அம்மை போட்டிருக்கிறது  என்று மாப்பிள்ளை வீட்டில் சொல்லிவிட்டார்கள்.

ஆர்த்தி கல்யாணத்திற்காகவே உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்ததை போல, அவள் கல்யாணமாகி போன மூன்றே மாதத்தில் ஹார்ட் அட்டாகில் வரதண்ணன் போய் விட்டார்.

அவர் எழவு விழுந்த அன்று படிந்த சாவுக் களை அந்த வீட்டிலிருந்து இன்னும் விலகவே இல்லை. சில சமயம் யோசித்தால் குருவி போனதில் இருந்தே அப்படித்தான் இருந்தது என தோன்றும்

வரதண்ணன் இறந்த பிறகு மண்டி செல்லின் கைக்கு வந்தது. காலையிலேயே பவுடரை இழுத்து விட்டுத்தான் மண்டி பக்கமே போவான். வாயே திறக்காத செல்லு  சிரிக்க சிரிக்க பேசுபவன் என பஜார் முழுக்க பெயரெடுத்தான். அவனுடைய போதை பழக்கம் நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரிந்த விஷயமாக இருந்தது. ஒன்றிரண்டு வருடங்கள் பெண் தேடினாலும் அதன் பிறகு அவனுக்கு வரன் பார்ப்பதையே செல்லின் அம்மா விட்டுவிட்டார். பழக்க வழக்கங்களில் தெரியாவிட்டாலும் நிர்வாகத்தில் போதையின் தாக்கம் நன்றாக தெரிந்தது. முடிவுகள் எதையும் அவனால் எடுக்க முடியவில்லை, எடுக்கும் முடிவுகளும் மோசமானவையாக இருந்தன. பல லாரிகள் ரோட்டை நிறைத்து நிறுத்தி லோடடித்த வியாபாரம் சுருங்கி சில லாரிகள், அரை லாரி, டெம்போ, ஆட்டோ என தேய்ந்து பத்து வருடங்களில் வியாபாரமே இல்லாத நிலை வந்தது

கையிருப்பு காசு தீரும் வரை வீட்டில் உட்கார்ந்து கோக் அடித்து கொண்டிருந்தான்.

வரதண்ணன் மெயின் ரோட்டில் சில கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். அந்த கடைகளை தவிர வேறு வருமானம் இல்லை என்ற நிலை வந்தது. செல்லின் அம்மா கடை வாடகையை அவனை வாங்க விடவில்லை. விட்டால் அதையும் விற்று பவுடர் ஆக்கி விடுவான் என பயந்து தரமுடியாது என சொல்லிவிட்டார்

ஏதாவது வேலை வேண்டும் என என்னை வந்து பார்த்தான். டி டி எச் எல்லாம் வந்து கேபிள் டல்லடிக்க ஆரம்பித்த நாட்களிலேயே நான் விளம்பர படங்கள் எடுப்பது, பெரிய கல்யாணங்களுக்கு  சினிமா போல வீடியோ எடுப்பது என தொழிலை  சற்று மாற்றிக் கொண்டிருந்தேன். அதன் மூலம் எனக்கு நிறைய பெரிய மனிதர்களின் தொடர்புகள் இருந்தது. ட்ரீட்மெண்ட் எடுத்து கொண்டால் எங்காவது சொல்லி வேலை வாங்கி தருகிறேன் என சொன்னேன். அதன் பிறகு என்னை பார்க்க அவன் வரவில்லை. ஒரு வருடம் கழித்து நான் தான் அவனை பார்க்க போக வேண்டியிருந்தது

அவன் பேசும் நுனி நாக்கு ஆங்கிலத்தால் ஒரு பெரிய பைனான்ஸ் கம்பெனியில் மானேஜராக வேலை கிடைத்து சேர்ந்திருந்தான். அவர்கள் அவனை கட்டி வைத்திருக்கிறார்கள் என செல்லின் அம்மா ஒரு நாள் இரவு பத்து மணிக்கு வந்து கதவை தட்டினார். அவரை என் வீட்டிலேயே என் மனைவியுடன் இருக்க சொல்லிவிட்டு என்னிடம் வேலை செய்யும்  ஐந்தாறு பேரை அங்கு நேராக வரச் சொல்லிவிட்டு நானும்  அந்த கம்பெனிக்கு போனேன். செல்லை மானேஜர் ரூம் சேரிலேயே நைலான் கயிற்றால் கட்டி வைத்திருந்தார்கள். அருகில் நின்றிருந்தவர்கள் யாருமே ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்பவர்கள் போல் இல்லை. செல்லின் உதடு தடித்து போய், முகமெல்லாம் வீங்கி இருந்தது

என்னைப் பார்த்தவுடன் கட்டை அவிழ்த்து விட்டனர்

ரெண்டு லட்ச ரூபா கையாடல் பண்டாரு சார், கேட்டா கெத்தா செலவாயிருச்சினு சொல்றாரு,“ வேறோரு ரூமில் இருந்த வந்த சேட்டு பையன் போல இருந்தவன் சொன்னான். இவன் ஒருவன் தான் அந்த கம்பெனியில் வேலை பார்ப்பவன் போல இருந்தான்.

அதுக்காக கட்டி வெச்சு அடிப்பிங்களா. போலிஸுக்கு போக வேண்டியதுதானே?” என்றேன்.

சார் கம்பெனி ரெப்பூடேஷன் டேமேஜ் ஆயிரும் சார். பொய் சொல்றாரு நாலு தட்டி தட்டுனா உண்மை வரும்னு பாத்தோம். இப்பதான் இந்தாளு ஒரு போத பார்ட்டினு தெரிஞ்சது, அதான் வீட்டிக்கி போன் பண்ணோம். சார் இவர் பண்ண வேலையால இந்த ப்ராஞ்சல இருக்க எல்லார் மேலயும் ஆக்‌ஷன் எடுப்பாங்க சார். நாந்தான் இந்த ப்ராஞ்சுக்கு சீனியர் மேனேஜர், என் வேலயே போய்ரும் சார்,” என்றான் நாத்தழுதழுக்க.

அவன் அந்த காசு முழுசா பவுடர் அடிச்சிருப்பான். அஞ்சு பைசா அவன் கைல இருக்காது. அவங்க வீட்லயும் இப்ப இருக்க நிலைமைல ஒன்னும் கிடைக்காது. நீங்க அவன அடிச்சு கொன்னு போட்டுட்டு ஜெயிலுக்கு போலாம் அவ்ளோதான்” என்றேன்

சார் ஏதாவது பாத்து பண்ணுங்க சார். இந்தாளுக்கு வேல கொடுத்த பாவத்துக்கு நான் நடுத் தெருவுல நிப்பேன் போலருக்கு,” என்றான்.

இப்ப நான் இவன கூட்டிட்டு போறேன். என் நம்பர தரேன் நாளைக்கு மத்தியானத்துக்கு மேல கூப்புடுங்க அவங்கம்மாகிட்ட பேசி எவ்ளோ தர முடியும்னு பாத்து சொல்றேன்” 

அவனை ஆஸ்பிடல் கூட்டிப் போய் மருந்து போட்டு வீட்டிற்கு அழைத்து சென்றேன்

பைனான்ஸ் கம்பெனிக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதாக பேசி, செல்லுடைய அம்மா நகையை அடகு வைத்து அந்த பணத்தை கொடுத்தார்

அதன் பிறகு மாதம் ஒரு தொகையை அவனுக்கு கொடுக்க ஆரம்பித்தார். அப்படியும் ஆறு மாதத்திற்கொரு முறை நகையோ, வெள்ளி சாமானோ மாயமாவது தொடந்து கொண்டுதான் இருந்தது. இப்போது தங்கை மகனின் அரணைக் கொடியை கழட்டி பவுடராக்கிவிட்டு நடு ரோட்டில் செருப்படிபட்டு உட்கார்ந்திருக்கிறான்

நான் போகாமல் நிற்பதை பார்த்துவிட்டு, “ஒரு தம்மு வாங்கி தரியா பாபுணா” என்றான்.

போதை நன்றாகவே இறங்கி இருக்கிறது போல பட்டது எனக்கு.

எந்திருச்சி வா,” என்றுவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

செருப்பெதுவும் போடாமல் அப்படியே நடந்து வந்து வண்டியின் பின்னால் உட்கார்ந்தான்.

புது பஸ் ஸ்டாண்டிற்குள் போய் ஒரு பெட்டி கடையில் கிங்ஸ் வாங்கி அவனிடம் கொடுத்தேன். நான் சிகரெட் இப்பொழுது குடிப்பதில்லை

பற்ற வைத்து இழுக்க ஆரம்பித்தான். சிரிப்பும் மிதப்பும் கண்ணில் இல்லை. முழுதாக போதையிறங்கி நின்று கொண்டிருந்தான்.

இப்படி போதையில இல்லாதப்போ என்ன வாழ்க்க வாழ்றோம்னு ஒரு நாளாவது யோசிச்சி பாத்திருக்கியாடா?” 

அவனுக்கு புகை இழுப்பதில் கவனமெல்லாம் குவிந்திருந்தது

எனக்கு கோபம் ஏறி வந்தது.

உனக்கு நாப்பது வயசுக்கு மேல ஆகுதுஇது வரைக்கும் நீ வாழ்ந்த வாழ்க்க யாருக்காச்சும் உபயோகமா இருந்தததா, உனக்கே கூட இல்ல. உன்ன விட சின்ன பையனெல்லாம் உன்ன நடு ரோட்ல செருப்பால அடிக்கறான். இப்படி வாழனுமாடா. இப்பாவாவது வாடா ட்ரீட்மெண்ட் எடு,”  என்றேன்

ட்ரீட்மெண்ட் எடுத்தா?”

“ம்.. திரும்ப ஒரு மனுசனா வருவஎன்றேன்.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நீ என்கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது ஒரு வார்த்த சொன்ன ஞாபகம் இருக்காநீதாண்டா அவன்னு, அது உண்மைனா. கோக் ஏத்துனா நான் ரெண்டாள் பாபுணா. குருவி எனக்குள்ள இறங்கிறுவான். அப்புறம் சிரிப்பும் சந்தோஷமும் மட்டும்தான். செல்லா மட்டும் இருந்தன்னா ரெண்டு நாள்ல செத்து போயிருவேன்,” என்றான்.

ஒரு பப் இழுத்துவிட்டு தொடர்ந்தான். “உங்களுகெல்லாம் அவன் செத்துட்டான் எனக்கு இன்னும் அவன் உயிரோடதான் இருக்கான். கல்லுல மந்திரம் சொல்லி சாமிய எழுப்புற மாதிரி என் உடம்புல கோக்கை விட்டு அவன எழுப்புறேன். நான் உசுரோட இருக்க வரைக்கும் அவனும் இருப்பான்” 

இன்னுமாடா உம் பழக்கத்துக்கு குருவி பேர சொல்லிகிட்டு இருப்ப?” என்றேன்.

நிமிர்ந்து என்னை பார்த்தான்பில்டர் வரை கங்கு போய்விட்டது, அதை கீழே போடாமல் விரல்களை விசில் அடிப்பது போல் மடக்கி நடுவில் கங்கின் நுனியில் மெலிதாக ஒட்டிக் கொண்டிருந்த பில்டரை பிடித்து உதட்டில் வைத்து புகையை இழுத்தான், கங்கு உதட்டில் ஒளிர்ந்து அடங்கியது

சாட்சி சொல்ல வந்தவன் –இரா.கவியரசு கவிதை

$
0
0
சாட்சிக் கூண்டில் ஏறிய போது
தூரத்திலிருந்து முறைத்த குற்றவாளி
முட்டையொன்றை மந்திரித்து  வீசினார்.
அவசரத்தில்
உடைத்துக் குடித்து விட்டேன்.
கோபமுற்றவர்
நாக்கை முழுவதுமாக இழுத்து வைத்து
நான் சொல்லவிருந்த சம்பவத்தை
தடயமில்லாதபடி அழித்துக் கொண்டிருந்தார்.
வயிற்றில் குஞ்சு பொரித்த
சத்தியத் தவளைகள்
சம்பவத்தைத்
தொண்டைக்குள் இழுத்துக் கொண்டன.
தண்டனைப் புத்தகத்தை விரித்தபடி
நான் தவளை போலக் கத்துவதாக
எச்சரிக்கை மணி அடித்தார்
குற்றவாளிக்காக வாதாடியவர்.
சம்பவம் எச்சிலில் கரைந்து கொண்டிருக்க
வளாகத்தில் ஒரு பெரிய குதிரை
கால்களை உயர்த்தியபடி
துள்ளிக் கொண்டிருந்தது.
பிடரியை இழுத்துப் பார்த்த காவலர்
கழுத்தைத் தடவிய போது
“சத்தியம் சாகாது
சத்தியம் பலமாக உதைக்கும்”
என்று பாட ஆரம்பித்தது.
என் பக்கத்தில் நின்ற வழக்கறிஞர்
” இவர் கைரேகையைப் பாருங்கள்
யுவர் ஆனர் ! “
சம்பவத்தின் போது
குற்றவாளியின் சட்டையைக் கிழித்திருக்கிறார்
என்று என் கைவிரல்களை
உயர்த்திக் காண்பித்தார்.
கண்கள் பொய் பேசுவதில்லை என
நீதிபதியை உற்றுப் பார்த்தபடி
சம்பவத்தைச்  சொல்ல ஆரம்பித்தேன்.
வாக்குமூலத்தின்
ஒவ்வொரு சொல்லும்
நான்காகப் பிரிந்து  ஓட
தட்டச்சு செய்தவர் கதற ஆரம்பித்தார்.
அடித்துப் பிடித்து
ஒரே வரிசையில் அடுக்கியபோதும்
சம்பவம்
சேராமல் பிரிந்து கொண்டே இருந்தது.
குற்றவாளி
அடுத்த முட்டையை எடுத்த போது
குதிரை வேகமாகப் பாய்ந்தது
தண்டனைப் புத்தகம்
பறந்து வந்து தாக்கவே
சத்தியம் !சத்தியம் !சத்தியம் !
என்ற பெருமுழக்கத்தோடு
குதிக்க ஆரம்பித்தன
தவளைக் குஞ்சுகள்.
கட்டிடம் அதிர ஆரம்பித்தது
தலைவலி தாங்கமுடியாமல்
சம்பவம் நடந்த இடத்திற்கு
என்னை அழைத்துச் சென்றார்கள்.
உள்ளதை
உள்ளபடியே சொல்வதற்காக
ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய இரவை
இழுத்துக் கொண்டிருந்தேன்
சம்பவம்
அசைந்து அசைந்து
வந்து கொண்டே இருந்தது.

‘மோகனசாமி’சிறுகதை தொகுப்பு குறித்து கண்மணி கட்டுரை

$
0
0

தொகுப்பிலிருக்கும் 10 சிறுகதைகளுமே ஒருபாலினச் சேர்க்கையைப் பற்றி அந்தரங்கமாகப் பேசுகின்றன. ‘ இது என் சுயசரிதை’, என்று அறிவித்த எழுத்தாளர் வசுதேந்த்ராவின் தைரியம், அவரை அண்ணாந்து பார்க்க வைக்கிறது. பல இடங்களில் வாசகரைக் கசியவைக்கும், தொந்திரவு செய்யும் இந்த நூல் இதுவரை ஆங்கிலம், ஸ்வெடிஷ் உள்ளிட்ட 10 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டத்தில் வியப்பேதுமில்லை. வாசுதேந்த்ரா சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.’மோகனசாமி’, பெங்களூரு சென்ட்ரல் யூனிவர்சிட்டியின் ப்ளஸ் ஒன்றுக்குத் துணைப் பாடமாக அரசாங்கத்தால் அறிவிக்கப் பட்டிருக்கிறது!

நமது மதிப்பீடுகளைப் புரட்டிப் போடும் இந்த அரிய நூலை மொழிபெயர்ப்பு என உணராதவண்ணம் சிறப்புற மொழிபெயர்த்திருக்கிறார் நல்லதம்பி. ஏற்கெனவே விவேக் ஷான்பக்கின் ‘காச்சர் கோச்சரி’ல் நாம் உணர்ந்ததுதான். காமம் சார்ந்த விவரணைகளை விரசமில்லாத மொழி வழுக்கலாக உறுத்தலின்றி சொல்கிறது. அதேநேரம், தேவையான இடங்களில் தகுந்த சொற்களைப் பயன்படுத்தத் தவறவில்லை. ‘கம்ஸூ’, ‘கண்டுஸூளே’ போன்ற சொற்களைப் புழங்கி விளக்குவதன் மூலம் கன்னட மணத்தையும் ஆங்காங்கு சாமர்த்தியமாக தக்கவைத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

மோகனசாமி-மயக்கந்தரும் இந்தப் பெயரைத் தவிர வேறெந்த பெயரும் கதைக் களத்தோடு இவ்வளவு இயைந்திருக்காது. நண்பர்களால் அன்போடு ‘மோகனா’ என்றழைக்கப்படும் மோகனசாமி என்னும் கதாபாத்திரத்தின் வழியே சமபாலின சேர்க்கையில் ஈடுபாடுள்ளவர்களின் மனக்கொதிப்பு, அவர்களுக்கு எதிர்கொள்ள நேரும் அவமானங்கள், புறக்கணிப்புகள், தனிமை…..யாவற்றையும் மனதைத் தொடும் விதத்தில், மிகையில்லாது எளிய சொற்களில் விரித்து வைக்கின்றன கதைகள். நேர்மையும் பண்பும் உடைய மோகனசாமி, வாழ்க்கையில் போராடி கௌரவ நிலையை அடைகிறான். அவன், தான் விரும்பும் ஆண்களோடு ரகசியமான காதல், காம வாழ்க்கையைத் துய்ப்பதிலும் வெற்றியடைவது ஆறுதளிக்கிறது. இதிலுள்ள நோய்த்தொற்று குறித்த அபாயங்களையும் பொறுப்பாகக் கோடிட்டுக் காண்பித்திருக்கிறார் ஆசிரியர். தத்ரூபமான பாத்திரங்கள் உயிரோடு நடமாடுகின்றன.

ஏறக்குறைய 15 வருடங்களில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு என்பதால் சில கதைகள் தேவையற்று நீளமாக இருக்கின்றன. முதல் கதையான ‘சிக்கலான முடிச்சி’ல், அலுவலகப் பயணம் நிமித்தமாக விமான நிலையம் செல்லுமுன் காதலன் கார்த்திக் இரவு சாப்பிடுவதற்காக சாம்பார் சமைத்து ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டுச் செல்பவன் மோகனா எனும் மோகனசாமி. அந்த நண்பன் கார்த்திக்கிற்கு பெண்ணோடு திருமணம் நிச்சயமானதும் அதிர்ச்சியடைகிறான் மோகனசாமி. பின்னர் நடைமுறையை உணர்ந்து கூடவே தங்கி உறவாடி வாழ்ந்த கார்த்திக்கை, அவனது உதாசீனத்தைக் கண்ணீரோடு பிரிகிறான்.

‘சைக்கிள் சவாரி’யில் தன் உடல்மொழியைக் கேலி செய்யும் பள்ளித் தோழர்கள் மற்றும் சகோதரியிடமிருந்து தப்புவதற்காக தன்னை, தன் பேச்சை, விளையாட்டை-எல்லாம் சுருக்கிக் கொள்கிறான் மோகனசாமி. எந்நேரமும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியதால் முதல் மதிப்பெண் பெறுகிறான். சைக்கிள் கற்றுக்கொண்டால் தன் உடலின் நளினம் விலகக் கூடும் என்றெண்ணி ஹம்பியில் சைக்கிள் கற்றுக் கொள்கிறான் மோகனசாமி. இருள் கவியும் நேரம் கோயில் பிரகாரத்தில் 2 வெள்ளைக் காரன்கள் புணர்ந்து கிடந்ததைக் கண்டதும், தனக்கு மனப் பிறழ்வல்ல என அமைதியடைகிறான்- புகைகூடப் பிடிக்காத மோகனசாமி. மோகனா சுத்தமானவன்; நாசூக்கானவன்.

‘பேசக்கூடாத பேச்சுகள் வதைக்கும்போது ‘ கதையில், மோகனசாமியைப் புரிந்துகொண்ட அவனது பிராமண அப்பா, உள்ளுக்குள் உடைந்து போனாலும் அவன் மனதை நோகடிக்கவில்லை. ஆனால் மோகனசாமியைத் தன் ஆண்மையின் தோல்வியாக அவர் கருதுகிறார். அதிக மதிப்பெண் வாங்கிய அவனுக்கு அரசாங்கப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தபோதும், வரதட்சிணை வாங்கமுடியாத, வம்சத்தை வளர்க்கமுடியாத மோகனசாமிக்கு எதற்கு சக்தியைமீறி செலவழிக்க வேண்டுமென்று கை கழுகிறார். அதனால் பெங்களூரில் சிறு வேலைகள் செய்தும் வங்கிக் கடனிலும் படித்து முடித்த மோகனசாமி கொடுக்கும் பணத்தைக் கைநீட்டி வாங்கக் கூசுகிறார்.

‘நான்முகன்’ கதையில் 40 வயதான மோகனசாமிக்குப் பணப் பஞ்சமில்லை. ‘முதல் வணக்கம் மற்றும் கடைசி வணக்கத்திற்கு நடுவில் வாழ்க்கையைப் பசுமையாக்கிக் கொள்வதே நம் புத்திசாலித்தனம்’ என்ற கொள்கையுடைய அவன், உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளால் 30 வயதுபோலத் தன்னுடலை வைத்திருக்கிறான். பெருத்துப்போன தன் பழைய கார்த்திக்கை இப்போது அவன் மனம் நாடுவதில்லை. இந்தக் கதையானது ‘கேய்’ வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றம். மோகனசாமி துய்த்துக் கடந்துபோகும் பல்வேறு ஆண்களையும் அவர்களோடான உறவுகளையும் ரசனை கலந்த நகைச்சுவையோடு படம் பிடிக்கிறது கதை.

அவனோடு தங்கியிருக்கும் யோகாசன குருவான ராம்தர் திரிவேதி, ‘’யோகாவைப் போலவே இணைவதும் ஒரு சாதனை. நிம்மதியாக இணைய வேண்டும். சூரியன் மேற்கில் இறங்கும் மாலை வேளையில் கங்கையில் ஓசையில்லாமல் மீனுடன் நீந்தும் சுகம் இந்த சேர்க்கையில் நமக்குக் கிடைக்கவேண்டும். சுகம் என்பது ஒரு தியான நிலை.’’ ஆனால் பிறிதொருவனைத் தேடக் கூடாதென்ற ராம்தரின் நிபந்தனையால் ‘கட்டாயத்திற்காக பத்திய உணவைச் சாப்பிடும் நோயாளியைப் போல அவன் தவித்தான்’.

கோயில் வரிசையில் சட்டையைக் கழற்றிவிட்டு நிற்கும் இளம் தந்தையான சாந்தனுவால் கவரப்பட்ட மோகனசாமியின் எண்ணங்கள் : ‘பொதுவாக திருமணம் நடந்து, ஒரு குழந்தையைப் பெற்ற அப்பாக்களின் தேகம் சிறப்பான கவர்ச்சி கூடியிருக்கும். இன்னும் விரியாத அனுபவமற்ற மொக்கு போலவும் இல்லாமல், மாலைவேலையில் வாடிய பூப்போலவும் அல்லாமல்-விடியற்காலையில் இளம் சூரிய ஒளிக்கீற்றுக்கு முழுமையாக மலர்ந்த பூவைப்போல அவர்கள் பக்குவமாக இருப்பார்கள். துணிவுடன் புதியத்தைத் தேடும் உற்சாகம் அவர்களுக்கு இருக்கும். முகத்தில் சிறப்பான நிறைவு தெரியும். சருமத்தில் அழகாகப் பிரகாசம் கூடியிருக்கும்.’ ஓர் ஆணை இவ்வளவு நுட்பமாக வருணித்து நாம் படித்ததில்லை. சாந்தனுவின் ஒரு வயது குழந்தையோடு அவன் வீட்டில் மோகனசாமியும் சாந்தனுவும் கூடும் காட்சிகள், அவற்றிடையே வரும் தொல்லைகள்…..எல்லாம் வாய்விட்டு சிரிக்கவைப்பவை.

மோகனசாமியின் வீட்டிற்கு உறவுக்காக வரும் பரிச்சயமில்லாத இளைஞன், கணிணி உட்பட்ட பொருட்களைத் திருடிக்கொண்டு ஓடுகிறான். ‘அவயங்களுக்குப் புதிய வடிவம் கொடுக்கக்கூடிய மிகப்பெரும் கலைஞன்’, என்று கருத்த தர்ஷன் சிலாகிக்கப் படுகிறான்.

கிளிமஞ்சாரோ: அற்புதமான கதை; தொகுப்பின் கடைசிக் கதை. ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறுவதற்காகத் தனியே கிளம்பிவந்த மோகனசாமியின் மன அவசங்கள்,இயற்கையின் ஆகிருதி….எல்லாம் மிக அழகாக சொல்லப் பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு:

வயிற்றில் அனலின் சுவடுகூட தெரியாததுபோல தன் உடம்பின் மீது பனிப்போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கிறது!

புரியாத என் மனது வேறு ஏதாவது இரகசியத் திட்டத்தைத் தீட்டுகிறதோ?

மெல்ல விடியத் தொடங்கியது. வெளிச்சம் அவனை உலகுக்குக் காட்டிவிடும். இருட்டின் இரகசியத்தைக் காக்கும் நல்ல குணம் அதற்குக் கிடையாது.

இப்படிப்பட்டவர்கள் தான் எனக்கானவர்களாக வரமுடியும் என்ற கடினமான கட்டுப்பாடுகளைப் போட்டுக் கொண்டால் மட்டுமே நாம் தனிமைப் படுத்தப் படுவோம்.

வாசிப்பின் முடிவில் அலைக்கழிப்பைத் தாண்டி, ஓரினச் சேர்க்கை என்பது வாழ்க்கை முறையின் ஓர் வகைமையே என்கிற எண்ணம் வருகிறது. இதுவே வாசுதேந்த்ராவின் நோக்கம். அதில் அவர் வெற்றியடைந்துவிட்டார். போலியற்ற தன்மை வாசுதேந்த்ரா எழுத்தின் பலம். ஒரு கதையைத் தவிர எல்லா கதைகளிலும் மோகனசாமி இருக்கிறான். கதைகளை அதே வரிசையில் படிக்க, வித்தியாசமான அந்த மனிதனின் பரிணாம வளர்ச்சி படிப்படியாகத் தெரிகிறது. ஒரு நாவலைப் படித்த முழுமையான உணர்வு கிடைக்கிறது. சிக்கலில்லாத மொழியின் வழியாக தமிழ் வாசகர்களைப் புதிய தளத்திற்கு அழைத்துப் போகும் நல்லதம்பி அவர்களுக்கு நன்றி. படிக்கவேண்டிய புத்தகம்.

 

கன்னடத்தில்: வசுதேந்த்ரா தமிழில்: கே.நல்லதம்பி
பதிப்பகம்: ஏகா விலை: 299

செவல்குளம் செல்வராசு கவிதைகள்

$
0
0

1.வெகு மக்களால்
வாசிக்கப்படாத
இலக்கிய இதழில்
26ம் பக்கம்
என் கவிதை பிரசுரமாகியுள்ளது​​
யாராவது பார்த்தீர்களா

2.தொல்லை செய்கிறது
என்ன செய்வது
அச்சேறாத புத்தகத்தை
அவசர அவசரமாய்
எல்லாவற்றையும்
ஒளித்து வைக்கிறேன்
யாரோ கதவு தட்டுகிறார்கள்

3.அவசர அவசரமாய்
எல்லாவற்றையும்
ஒளித்து வைக்கிறேன்
யாரோ கதவு தட்டுகிறார்கள்

4.ஐந்து நாட்களுக்குப் பின்
கூரையை தாண்டி
வெம்மை இறங்கிய
நற்பகலில் சூழல் அமைந்தது
அமைதிப்படுத்த மறந்த கைபேசி
ஒலித்துக் கெடுத்தது

மழைக்குப் பின் –கமலதேவி சிறுகதை

$
0
0

தொடர்ந்து விடாமல் பெருமழையாகவும் தூரலாகவும் நின்று நிதானித்து பெய்த மழையால் துறையூர் கலைத்துப்போடப்பட்டிருந்தது.ஈர அதிகாலையில் அந்தசிறுநகரில் நடைப்பயிற்சி செல்வதற்காக குடையுடன் தன்வீட்டு வாசலில் நின்ற வெங்கட்ராமன் தலையுயர்த்தி வானத்தைப் பார்த்தார்.அடைமழைநாள் எப்படியோ தன்குளிரோடு நசநசப்போடு அவனை கொண்டுவந்துவிடுகிறது.

துன்பம் இனியில்லை..சோர்வில்லை.துன்பம் இனியில்லை சோர்வில்லை…என்ற வரிகளை மந்திரம் என மனம் அனிச்சையாய் சொன்னது.விஸ்வாவின் இறுதி நாட்களில் இந்தவரிகளை பிடித்துக்கொண்டமனம் உள்ளேயே எந்தநேரமும் நிரப்பமுடியாத ஒன்றை நிரப்பிக்கொண்டிருந்தது.அவன் இறப்பை எதிர்ப்பார்த்து காத்திருந்த பத்துநாட்களில் இந்தவரிகளின்றி எதுவும் துணையிருந்திருக்க முடியாது.தயவுசெஞ்சி செத்துபோடா கண்ணா.. இவ்வளவு வலி வேண்டாம்..என்று நூறுமுறையாவது மனதால் சொல்லிய நாட்கள்.

குடையை மடக்கி கையில் பிடித்துக்கொண்டு நடந்தார்.நாய் ஒன்று அசதியில் தெருவிளக்கின் அடியில் படுத்திருந்தது.நடுவயதுடையது. செவலை நிறம்.மூச்சு ஏறிஇறங்கும் வயிற்றின் தசைகளில் இளமையின் பூரணம். சற்று நேரம் நின்றார். மணிவிழி திறந்து அவரைப்பார்த்து வாலையசைத்து கண்களை மூடிக்கொண்டது.

தெப்பக்குளத்தை சுற்றி நடந்தார்.பெரியஏரியிலிருந்து வரும் புதுநீர் நிரம்பித் தழும்பிக்கொண்டிருந்தது.நீரில் கலங்கல் அவர் கண்களுக்குத் தெரியவில்லை.ஆனால் நாசி கண்டுகொண்டது.ஒருபுலன் இல்லாவிட்டால் ஒருபுலன் உதவுவதை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டார்.இருபுலன் சேர்ந்து ஒருபுலனாய் பரிணாமம் வளர்ந்தால்!… அழகு என்பதும் நாம் அறிந்த உயிரியல் என்பதும் என்னவாகும்? என்று மனதில் தோன்றியது.

எப்பொழுதும் நடக்கும் வழியில் சாக்கடை சிறுபாலத்தில் உடைப்பு ஏற்பட்டு வழியெங்கும் நீர் கணுக்கால் வரை சென்றது.திரும்பிவிடலாம் என்ற எண்ணம் எழும் பொழுதே அதுமுடியாது என்பதை அவர்மனம் அறிந்திருந்தது.

பழையப்பாதையில் நடந்தார்.இந்தப்பாதையில் வந்து ஆண்டுகளாகின்றன.சிறுதயக்கத்துடன் வாயில்கதவைப்பிடித்து நின்று அந்தப்பள்ளிக்கட்டிடத்தைப் பார்த்தார்.இத்தனை ஆண்டுகளில் விரிந்து பரந்து உயர்ந்திருந்தது.அவர் கால்களுக்கடியில் சிறுகூச்சம் போல ஒருஉணர்வு.உயரமான இடத்தில் ஒட்டில் நிற்பதைப்போல.கால்களை மாற்றிமாற்றி தூக்கி பின்புறமாக மடித்து நீட்டினார்.

அலைபேசி ஒலித்துக்கலைத்தது.எடுத்ததும், “குட்மானிங் டாக்டர் .இன்னிக்கு நீங்க லீவான்னு கேட்டு கால் வந்துட்டேயிருக்கு.கெம்பியப்பட்டிக்காரர் நல்லாருக்கார்.வீட்டுக்கு அனுப்பலாமா டாக்டர்.இங்க எக்ஸ்ட்ரா பெட் போட்டும் சிரமமா இருக்கு டாக்டர்,”என்றது.

“நீ சர்ச்க்கு போகலையாம்மா..”

“பக்கத்திலதானே டாக்டர். போயிட்டு திரும்பிருவேன்.மது நைட் இருந்தா..”

“சரிம்மா.இந்தவாரத்துக்கு சன்டே இல்லன்னு எடுத்துக்க வேண்டியதுதான்..ஸார்ப்பா நைன்க்கு இருப்பேன்,”என்றப்பின் அலைபேசியை ட்ராக் பேண்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.பள்ளிவளாகம் அமைதியாக இருந்தது.மைதானத்தில் மழைபெய்து ஏற்படுத்திய சிறுசிறு பள்ளங்களில் நிறைந்தகண்கள் என நீர் தேங்கிக்கிடந்தது.

உள்ளுக்குள் ஏற்பட்ட ஒருசொடுக்கலால் அவர் உடல் ஆடியது. “டாடி..”என்று விஸ்வா ஓடிவருகிறான். பள்ளியை அடுத்திருந்த நந்திகேஸ்வரர் ஆலயத்தைப் பார்த்தபடி நடந்தார்.பள்ளிசுற்றுசுவர் ஓரங்களில் ஓங்கிவளர்ந்திருந்த அசோக, பன்னீர் மரங்களிலிருந்து மழைநீர் சொட்டிக்கொண்டிருந்தது.எதிரே இருந்த மணிக்கூண்டு பிள்ளையார் கோவிலின் மணியோசைக் கேட்கிறது.தேர்நிலையில் சற்று நின்றார்.

ஆலயத்தினுள்ளிருந்து சிறுவன் அம்மாவின் கையை உதறி ஓடிவந்து சாலைஓரத்தில் தயங்கி நின்றான். கோயில் குருக்களின் மகன்தான் என கண்டுகொண்டார்.அவர் இருபுறமும் வாகனங்கள் வருகிறதா என்று பார்த்தார்.கோரைமுடி நன்குபடிந்து திருநீற்றுக்கு மேல் நெற்றியில் ஒட்டியிருந்தது.நீளவாக்கு முகம்.வெள்ளை டீசர்ட்.அவன் எதையோ எதிர்பார்த்து வலப்புறம் ஓட அம்மாவின் கைகளில் சிக்கிக்கொண்டான்.

அம்மாவா! நாமளா முடிவுபண்ணிக்கலாமா? அம்மாதான் என்று அவர் உள்மனம் சொல்ல சாலையைப் பார்த்து நடந்தார்.இரும்புக்கடையின் முன் நிற்கும் குட்டிவேம்பை தொட்டுப்பார்த்து எப்படியோ வளரப்பிடாதுன்னு தோணிடுச்சு என்று அதன் கிளையை அசைத்துவிட்டு நடந்தார்

பாலக்கரையில் கடைகள் எதுவும் திறக்கப்படாமல் இருப்பதை பார்ப்பதற்கு சுட்டிநாய்க்குட்டி உறங்குவதைப்போல இருந்தது.விஸ்வா அந்த ஐஸ்பேக்டரி முன் நிற்கிறான்.வளையும் இளம்மூங்கில் என உயரமாக.பள்ளி சீருடையில் சற்று முதுகை குனித்துக்கொண்டு சிரிக்கிறான்.கையில் இளம்சிகப்புநிற குச்சிஐஸ்.கைகால்கள் நிலையில்லாமல் பதின்வயதிற்கே உரிய குதூகளிப்பில் அசைந்து கொண்டிருக்க எண்ணெய் மின்னும் முகத்தை திருப்புகிறான்.இவர் குடையை இறுக்கிப்பிடித்தபடி கனமான கால்களை எடுத்து வைத்து நடக்கத்தொடங்கினார்.பாதையெங்கும் ஈரம்.

பாலக்கரைக்கு இடதுபுறம் நடந்து சின்னஏரியின் பின்புறம் வந்திருந்தார்.நீர் நிரம்பி அலையடிக்க மினுமினுத்துக் கிடந்தது.கழிவுகள் சேர்ந்து நாற்றமடிக்க மூக்கைப்பொத்திக்கொண்டு வேகமாக நடந்தார்.பாதிக்கரையைக் கடந்ததும் நாற்றம் குறைந்தது.அந்த மருத்துவமனையின் பின்புறம் நின்று தலையுயர்த்திப் பார்த்தார்.அது ஐந்துதளமாக உயர்ந்திருந்தது.பல ஆண்டுகளுக்குமுன்பு இதுதான் வாழ்வின் இலக்காக இருந்தது.யாருடைய இலக்கோ யாரோலோ நிறைவேற்றப்படுகையில் அது யாருடையது? என்று நினைத்தபடி நடந்தார்.

“நம்ம ஹாஸ்பிட்டல கிருஷ்ணாக்கு குடுக்கப்போறீங்களா டாடி,”என்ற விஸ்வாவின் கம்மிய குரல் கேட்டது.அப்பொழுது அவன் சிகிச்சையிலிருந்தான்.நீண்டமுகத்தில் மென்தாடியிருந்த இடங்கள் வற்றத்தொடங்கியிருந்தன.

கல்லூரியில் மருத்துவிடுப்பெடுத்து வந்தவன் வேறொருவன்.தீவிரமான கண்கள்,நீண்டமுகத்தில் மினுமினுப்பும்,உயர்ந்த சதையில்லாத உடலும்,புன்னகையை ஔித்து வைத்திருக்கும் இதழ்களுமாக காண்பவர்களின் கண்களுக்குள் நிற்பவன்.

ஏரியைக்கடந்து முசிறி பிரிவுப்பாதையை வந்தடைந்ததும் திரும்பிவிடலாம் என்று நிமிர்ந்து பார்த்தார்.பெருமாள் மலைக்குப்பின்னாலிருந்து சூரியன் எழுந்துகொண்டிருந்தான்.சற்றுநேரம் நின்றுவிட்டு நடந்தார்.

எம்.ஆர்.ஐ ஸ்கேனிலேயே நம்பிக்கையிழக்கத் தொடங்கியிருந்தாலும் ஆவேசம் விடாமல் அமெரிக்கா வரை போகச்செய்தது.திரும்பி வரும்போது மகனை, மருத்துவமனையை, வீட்டை இழந்திருந்தார்.வீட்டிலேயே இருந்தார்.வீட்டை வாங்கியவர் ஒருநாள் தன் உடல்நலப்பிரச்சனையை சொல்லித்தீர்க்க வந்தார்.

அவர்,“இனிமே தனியா இங்கருக்க முடியாதுங்க டாக்டர்.பையனோடதான்.வீட்ட வாடகைக்கு விடலான்னு இருக்கேன்.கைமாறிப்போனாலும் உங்கவீடு.இருக்கனுன்னு நெனப்பிருந்தா இருந்துக்குங்க,”என்றார்.

விட்டுட்டு வந்தாச்சு இனிமேல் அந்த திண்ணைகளில் சாவகாசமாக அமரமுடியுமா? பரந்துகிடக்கும் உள்முற்றத்தில் தனியாக இரவுபடுத்தால் உறக்கம் வருமா? பின்கிணற்றின் நீர் சுவைக்குமா? என்ற எண்ணங்கள் அவரையும் துணைவியையும் வதைத்தன. வீட்டை வேண்டாம் என்று சொல்ல முடியாமல் அல்லாடிய மனங்களுக்கு வீட்டை மருத்துவமனையாக்கலாம் என்ற எண்ணம் இந்தஅடிவாரத்தில் வைத்துதான் தோன்றியது.

“நம்ம வீட்ட வாடகைக்கு எடுத்து ஹாஸ்பிட்டலா மாத்திண்டா என்ன?”என்றார்.

அந்த அம்மாள்,“நல்ல விஸ்தாரமான இடம்தான்..”என்றாள்.

இரண்டுநாட்கள் யோசனைக்குப்பிறகு கணேசனை, ஜான்சியை அழைத்தார்.அடுத்தப்பத்துநாட்களில் மருத்துவம் பார்த்துக்கொள்ள ஆட்கள் வரத்தொடங்கினார்கள்.அந்தவீட்டின் மகிமையோ என்னவோ சுற்றுவட்டார கிராமத்து ஆட்கள் வந்து கொண்டேயிருந்தார்கள்.நின்று நிதானித்து மருத்துவம் பார்த்தார்.தொடர்ந்து வந்தவர்களின் உடலை மனதை புரிந்துகொள்ள முயலும் சாகசம் அவருக்குப் பிடித்திருந்தது.

காலையுணவை முடித்து மருத்துவமனையின்முன் காரை நிறுத்தி இறங்கியவர் பெயர்ப்பலகையை பார்த்தார்.விஸ்வநாதன் மருத்துவமனை.அந்தப்பயலை இன்னும் சிலநாட்களுக்கு மனதிலிருந்து பிடுங்கி எறியமுடியாது என்று நினைத்துக் கொண்டு படிகளில் ஏறினார்.

திண்ணையை அடைத்து போடப்பட்ட கேட்டினுள் கிடந்த பெஞ்சுகளில் ஆட்கள் எழுந்து நின்றார்கள்.அவர் புன்னகைத்துக் கடந்தார்.அந்தத்திண்ணைகளில் விஸ்வா பெம்மைகளின் பின்னால் மண்டியிட்டுத் தவழ்ந்தான்.

முன்கட்டிலிருந்த மருந்தகத்திற்கு வந்தார்.கணேசனிடம் பேசியபடி நின்றார்.அங்கு விஸ்வா புத்தகத்துடன் அமர்ந்திருந்தான். உள்ளே விஸ்தாரமான பகுதியில் கிடந்த மேசைமுன் அமர்ந்தார்.பக்கவாட்டில் திரைகளால் பிரிக்கப்பட்டு படுக்கைகள்.அவருக்கு இடப்புறம் உள்முற்றத்தில் ஜான்சி மேசையில் அமர்ந்திருந்தாள்.பக்கத்திலிருந்த சீலாவை அழைத்தார்.

கழுத்தைப்பிடித்துக்கொண்டு தன்முன் அமர்ந்திருந்த பெண்ணிடம், “அவ சொல்லிக்கொடுக்கற பயிற்சிய தினமும் காலையிலயும் சாயறச்சையும் செய்யனும்.செல்போனை கொஞ்சமாச்சும் கையிலருந்து எறக்கனும்,”என்றார்.அடுத்ததாக பெஞ்சில் காத்திருந்த சிறுமி சிரித்தாள்.

“இங்கவா அம்மணி..உனக்கென்ன? ஸ்கூலுக்கு மட்டம் போடறதுக்காக இங்க வந்திருக்கியா?”என்று அவளை அழைத்தார்.அவள் அவர் பக்கத்தில் வந்து நின்றாள்.

“என்ன?”என்று ரகசியமாகக் கேட்டார்.

“அம்மாட்ட சொல்லக்கூடாது,”என்றாள்.

“ம்,”

அவர் நெற்றியிலிட்டிருந்த நாமத்தைக்காட்டி, “பீம் இந்தமாதிரி வரஞ்சிருந்தான்,”என்று வாய்மூடி சிரித்தாள்.

கும்பல் குறையாமல் வந்துகொண்டிருந்தது.பெரும்பாலும் வைரஸ் காய்ச்சல்.அவர்களிடம், “பாராசிட்டமால் போட்டு பாத்துட்டு வாங்கன்னு சொன்னா கேக்கறதில்ல,”என்று உரிமையோடு வேகமாக சொல்லிக்கொண்டிருந்தார்.வீடு மருந்துவமனையான இந்த பதினைந்து ஆண்டுகளில் இவர்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.

வலிப்பிரச்சனைகளுடன் வந்தவரிடன், “மருந்து சாப்பிடு.சீலா சொல்லிக்கொடுக்கற பயிற்சிகள செஞ்சா என்ன?அதுக்கு முன்னாடி உன்னோட மகளுக்கு வரன் பாரு.எல்லா வலியும் காணாப்போயிடும்,”என்று தோளில் தட்டினார்.

வெளியிலிருந்து, “டோக்கன் முடிஞ்சுது சார்,”என்ற குரல் கேட்டது. சாய்ந்தமர்ந்தார்.ஜான்ஸி சிற்றுண்டியுடன் வந்தாள்.படுக்கையிலிருப்பவர்களின் விவரங்களை சொன்னாள்.

“என்னாச்சு சார்..நீங்க இன்னிக்கி எங்கக்கூட சரியா பேசல,”

“அசதிம்மா..”

“டாக்டர் ஃபீஸ் இல்லன்னுதான் டக்குன்னு எதுன்னாலும் ஓடி வந்திடறாங்க.நீங்க கொஞ்சமாச்சும் சார்ஜ் பண்ணினா ரீசனபிலான கூட்டம் வரும் சார்,”

அவர் புன்னகைத்தபடி எதிரேயிருந்த விஸ்வாவின் படத்தைப் பார்த்தார்.ஜான்ஸி படுக்கையிலிருந்தவர்களிடம் சென்றாள். உண்ணாமல் எழுந்து பின்பக்கம் வந்தார்.கழிவறையிலிருந்து வெளியே வந்தவர் இவரைக்கண்டு முகம் மலர்ந்தார்.

“வீட்டம்மாவ நாளக்கி கூட்டிப்போலாம்.ரொம்ப வயக்காட்டுல போட்டு வறுக்காதய்யா,”என்றபடிநடந்து வந்து துளசி, திருநீற்றுப்பச்சை செடிகள் செழித்த மதிலருகே நின்றார்.இலைகளெல்லாம் மழைநீர் கழுவிய பசுமையிலிருந்தன.

விஸ்வா குளிக்க அடம் செய்து உள்ளாடையுடன் கிணற்றை சுற்றி ஓடிவந்து கொண்டிருந்தான்.அவன் பாட்டி பின்னால், “ஓடி விழுந்திறாத..” கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

தலையை மெதுவாக உலுக்கிக்கொண்டார்.அவருக்குத் தெரியும் இது எங்கு செல்லும் என.எத்தனையோ நாட்கள் இப்படியாகக்கிடந்து மீள்பவர்தான்.அந்த நேரங்களில் மருத்துவஅறிவு சுமையா என்ற கேள்வி தலைமேல் கனக்கும்.அந்த எண்ணம் தரும் சோர்வு மேலும் உறக்கத்தக்கெடுக்கும்.உறக்கம் கெட்ட வேளைகளில் அவன் அவரைச் சுற்றி வியாபிப்பான்.

மதிலின் சிறுவாயிலைத் திறந்தார்.சுமையேற்றிய மாட்டுவண்டி மெதுவாக நகராட்சி சந்தைக்கு நகர்ந்து கொண்டிருந்தது.வண்டியோட்டி துண்டால் மிகமெல்ல மாடுகளை தட்டிக்கொடுத்து நடத்தினான்.

“ந்தா..ந்தா..வந்திருச்சு.எடம் வந்திருச்சு,”என்று மாடுகளுடன் பேசிக்கொண்டிருந்தான்.

திரும்பிநின்றார்.ஈரத்தரையில் பாசிபடர்ந்திருந்தது.

“டாடி..தயிர்லேந்து வெண்ண வராப்ல..மழத்தண்ணியிலந்து இந்தபாசி வந்து ஒட்டிக்குமா..

“ம்..இருக்குமாயிருக்கும்..”

“அப்ப யாருப்பா மழத்தண்ணியக்கடையறா..”

“ஜகன்மாதா…சுத்தறாலான்னோ..”

“அவளாட சேந்து நாமாளுந்தானே..”

“ஆமா..”

“எதுக்குப்பா…”

“ஜனிச்சுட்டோமோல்லிய்யோ கண்ணா..” விஸ்வா தொடர்ந்து, “அப்ப ஜனிக்காதவாள்ளாம் காத்தில இருக்களா மழபேஞ்சா வருவளா..”கேட்டுக்கொண்டேயிருந்தான்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவர் மனம் கேள்விகள் கேட்பதை நிறுத்தியது. கண்களை மூடித்திறந்தார்.முன்னால் கொய்யா அங்கங்கே இலைமறைவில் கனிந்திருந்தது.காய்களும் பிஞ்சுகளுமாய் இலைகளுக்குப்பின்னே காத்திருந்தது.

ஜான்சி அவரை அழைத்துக்கொண்டே வருவது கேட்டது.அவர் உள்நோக்கி நடந்தார்.தயங்கியப்பின் தென்கிழக்குப்பக்கம் சென்றார்.அறை வாயிலருகே நின்றார்.

விஸ்வாவிடம் அம்மா, “நன்னா சாப்பிடு கோந்தே,”என்று தலையைத்தடவினாள்.

அதே இடத்தில் கிடந்த விஸ்வாவின் பழைய டேபிளில் தோட்டத்தை வேடிக்கைப்பார்த்தபடி சீலா சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.இவரைக்கண்டதும் கண்களை விரித்தாள்.“நல்லா சாப்பிடும்மா..”என்று திரும்பினார்.

அலைபேசியின் அழைப்பு நடையை துரிதப்படுத்தியது.டாக்டர் ரவிதான்.மருத்துவமனைக்கு வர முடியுமா என்று கேட்டார்.ரவி மனசுக்கு அகப்படாத கேஸா இருக்கும் என்று காரில் ஏறினார். குழந்தைகள் மருத்துவர் டாக்டர் இளங்கோவின் அழைப்பு வந்துக்கொண்டிருந்தது.வெளியே மழைமுடிந்த வெள்ளை வெயில்.மழையை அர்த்தப்படுத்தும் வெயில்.

சுவர்களின்உலகம் –சங்கர் சிறுகதை

$
0
0

இரவு உணவை முடித்துவிட்டு மொட்டை மாடிக்கு வந்தேன். மணி எட்டரைதான் ஆகியிருந்தது. ஆனால் ஊரே அடங்கிக் கிடந்தது. கேட்ட ஒரே சத்தம் பக்கத்து வீட்டு தென்னமரக் கிளைகளில் காகங்கள் உட்கார்ந்து கரைந்த சத்தம் மட்டுமே. குடித்துவிட்டுச் சாலையோரம் விழுந்துக் கிடக்கும் குடிமகன்களைப் போல் சுய நினைவற்றுக் கிடந்தது வானம். சுற்றிலும் யார் வீட்டு மாடியிலும் யாரும் இல்லை என்பதைக் கவனித்தேன். இந்த ஊர் இதற்கு முன் இப்படி இல்லை. எப்போதும் எல்லார் வீட்டிலும் அடுத்தவீட்டுக் கதைதான் ஓடிக்கொண்டிருக்கும். தங்கள் வீட்டில் சாப்பிட்ட தட்டை எங்கு வைத்தோம் என்று தெரியாதவர்கள்கூட பக்கத்துவீட்டுப் பிரச்சனைகளைப் பற்றி முழுதாய் தெரிந்து வைத்திருப்பார்கள். சில நேரங்களில் அது தொந்திரவாக இருந்தாலும் பல நேரங்களில் பெரிதும் உதவியிருக்கிறது. ‘அது’ வந்த பின் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்து இப்போது முழுவதுமாக மாறிவிட்டிருக்கிறது.

பல நினைவுகள் வந்து அலைக்கழித்தன. பின் எப்போதோ தூக்கிப்போனேன்.

மறுநாள் காலை சீக்கிரமே குளித்து முடித்துவிட்டுக் கிளம்பினேன். ‘அங்கு’தான்.

“என்னம்மா சொல்ற… வெளிய வந்து சொல்லு… சமையக்கட்டுல இருந்து கத்தாதன்னு எத்தனவாட்டி சொல்றது”

அம்மா சரியாக வெளியே கிளம்பும்போதுதான் எதேனும் சொல்லுவாள். பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்க்கவில்லை. அப்படியென்றால் கோபமாக இல்லை. ஆனாலும் ஆளைக் காணோம். நானே சமையக்கட்டிற்குச் சென்றேன்.

“சொல்லுமா.. என்ன சொன்ன”

அடுப்பில் இருந்தப் பாத்திரத்தைக் கீழே எடுத்து வைத்துக்கொண்டே “பக்கத்து வீட்டு ரேவதிய ரெண்டு நாளா காணமாடா… கணேசன் அண்ணன் வந்து காலைலயே விடிஞ்சதும் விடியாததுமா விசாரிச்சிட்டுப் போனாரு.. நீ எந்திரிச்சதும் உன்ன வந்துப் பாக்க சொன்னாரு” என்றாள்.

ரேவதி அக்காவை காணவில்லை என்று அம்மா சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. எனக்கு ஏன் அதிர்ச்சியாகவில்லை என்பதை நினைத்துதான் அதிர்ச்சியாக இருந்தது. ஒருவேளை இப்படி ஏதேனும் நடக்கும் என்று முன்னரே எதிர்பாத்தேனா. ச்ச.. நான் ஏன் அப்படி நினைக்கப்போகிறேன். எனக்கும் அவளுக்கும் என்ன பிரச்சனை. தெருவில் அதிகம் அவள் யாரிடமும் பேசிக் கூடப் பார்த்ததில்லை. நான் மட்டும் இல்லை, யாருமே அவளுக்கு தீங்கு நினைக்க மாட்டார்கள். ஆனால் பிறகு ஏன் அந்தச் செய்தியை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். என்னை நினைத்து எனக்கே பயமாக இருந்தது. அவர்கள் வீட்டுக்குப் போவதா வேண்டாமா என்று குழப்பத்தில் சிறிது நேரம் அங்கேயே நின்றேன். பின் ஒரு முடிவெடுத்தவனாய், “போய்ப் பார்க்கிறேன்” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன்.

கணேசன் அண்ணனின் மனைவிதான் ரேவதி. ஓராண்டுக்கு முன் அவர்கள் திருமணம் நடந்தது. கணேசன் அண்ணனின் தூரத்து சொந்தம் என்று அம்மா சொன்னாள். ஊருக்கு வந்த புதிதில் மிகவும் அமைதியான பெண்ணாய் ஒருவருடனும் பேசாமல் எப்போதும் கையில் எதாவது புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பாள். எப்போதும் “ஊர் வம்புக்கு நான் போக மாட்டேன்பா..” என்று பெருமைப் பேசும் அம்மாவே ஒரு நாள் “என்னடா இந்தப் பொண்ணு வீட்ட விட்டு வெளியவே வர மாட்டேங்குது..” எனக் கேட்டாள்.

“புதுசா வந்துருக்காங்கள்லம்மா.. அதுனால அப்படித்தான் இருப்பாங்க..போக போக சரி ஆகிடுவாங்க” இதைச் சொன்னபோது எனக்கே நம்பிக்கை இல்லை.

கணேசன் அண்ணன் திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே துபாய் சென்றுவிட்டார். வீட்டில் ரேவதி அக்கா, கணேசன் அண்ணனின் அண்ணன், அவரின் மனைவி மூன்றுபேர் மட்டுமே இருந்தனர்.

அண்ணன் துபாய் போவதற்கு முன் சில தடவைகள் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது கூட ஒரு தடவைதான் ரேவதி அக்காவை பார்க்க முடிந்தது. அதுவும் அந்த அண்ணன் காப்பி கொண்டு வரச் சொன்னதால்.

ஒரு வேளை பிடிக்காமல் நடந்த திருமணமோ என்றெல்லாம் சில சமயம் தோன்றும்.

நான் முதன் முதலாக ரேவதி அக்காவிடம் இங்குதான் பேசினேன். நண்பர் ஒருவர் ஒரு சுவரில் பதியப்பட்டிருந்தக் கவிதைகளைக் காண்பித்து இந்தக் கவிதைகள் யார் எழுதியது என்று கேட்டார். ‘நகுலன்’ என்றேன்.

“இல்ல இவங்கள நான் கொஞ்ச நாளா தொடர்ந்து பாலோ பண்ணிட்ருக்கேன்.. பேரு ரேவதி. கவிதைகள் நல்லா எழுதுறாங்க.. ஒரு வேள இவங்களே வேற பேர்ல எழுதுறாங்களோன்னு டவுட்டாகிருச்சு” அவர் பேசியதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. என் கவனம் முழுவதும் அந்தக் கவிதைகளின் மேல்தான் இருந்தன.

“எனக்கு

யாருமில்லை

நான்

கூட..”

“இருப்பதற்கென்று

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்”

இதற்கு முன் பல தடவைகள் இந்தக் கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போதுபோல் எப்போதும் இவை இவ்வளவு அர்த்தம் பொதிந்தவையாக இருந்ததில்லை.

ரேவதி அக்கா!!

அந்தக் கவிதைகளின் கீழே பெயர் போடவில்லை என்பதால் நான் “நகுலன்!” என்று எழுதினேன்.

உடனேயே “ஆம்” என்று பதில் வந்தது. எங்கள் நட்பு நகுலனிடமிருந்து தொடங்கிற்று.

சில நாட்களிலேயே மிக நன்றாக பேசத்தொடங்கிவிட்டோம். எப்போது இங்கு வந்தாலும் அவரிடம் “ஒரு குட் மார்னிங்” அல்லது “குட் ஆப்டர்நூன்” அல்லது ஒரு “குட் ஈவ்னிங்” சொல்லிவிட்டுத்தான் மற்றவர்களைப் பார்க்கவே போவேன். ரேவதி அக்காவும் அப்படித்தான். எங்கள் பேச்சு முழுக்க முழுக்க தீவிர இலக்கியம் சார்ந்ததாகவே இருக்கும். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என எதைப் பற்றியும் விவாதிக்க கூடியவராக ரேவதி அக்கா இருந்தாள். ஒவ்வொருமுறையும் அவள் மீது எனக்கு மரியாதை கூடிக்கொண்டே போனது. என்னையும் “எழுது. எழுத எழுத தன்னால் எழுத்து பிடிபடும்” என ஊக்கப்படுத்தினாள்.

ஒன்றை நான் கவனிக்கத் தவறவில்லை. என்னதான் இங்கு நன்றாகப் பேசினாலும் அக்கா வீட்டிற்குப்போனால் முற்றிலுமாக மாறி, சரியாகச் சொன்னால் அதே பழையப் பெண்ணாகத்தான் இருந்தாள். எப்போதும் அவள் அறைக்குள்தான். ஒன்றிரண்டு தடவை வெளியே வந்தாலும் ஒரு ஹாய் ஹல்லோ மட்டும்தான்.

எனக்கு இந்த விசயம் ஆச்சர்யமாய் இருந்தது. ஒரே ஆள் இங்கு ஒரு மாதிரியும் வீட்டில் ஒரு மாதிரியும் ஏன் இருக்கவேண்டும். இத்தனைக்கும் கணேசன் அண்ணனின் குடும்பத்தில் எல்லோருமே நல்லவர்கள். கலகலப்பானவர்கள். கணேசன் அண்ணனின் அண்ணனுக்கும் அவருக்கும் பத்து பதினைந்து வயது வித்யாசம் இருக்கும். தம்பியைத் தன் பிள்ளையைப்போல் பார்த்துக்கொள்பவர் அவர். ரேவதி அக்காவை ஒரு சொல் கடுமையாகப் பேசிப் பார்த்ததில்லை. இருந்தும் அக்கா தன் கூண்டிற்குள்தான் எப்போதும் இருந்தாள்.

இங்கு எதிர்பார்த்த மாதிரியே எல்லா இடங்களிலும் ஒரே அமைதி. இன்றைக்கு முழுவதும் இதைப் பத்திதான் பேசுவார்கள். எல்லா சுவர்களிலும் #சேவ்ரேவதி என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தன. பெரிய பெரிய இலக்கியவாதிகள் எல்லாம் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தனர்.

எனக்குப் புரிந்தது… நான் ஏன் அவள் காணாமல் போனது பற்றி அதிகம் கவலைக்கொள்ளவில்லை என.

நாங்கள் பேச ஆரம்பித்த புதிதில் ரேவதி அக்காவிற்கு அதிக நண்பர்கள் இங்கு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எண்ணிக்கைக் கூடத் தொடங்கியது.

ஒரு நாள் யாருமே எதிர்பார்க்காதவண்ணம் தன் படத்தை சுவரில் பகிர்ந்திருந்தாள். அன்று மட்டும் அவளுக்கு முன்னூறுக்கும்மேல் நட்பு அழைப்புகள் வந்தன. அனேகமாக ஊரில் இருந்த எல்லோருமே அந்த லிஸ்ட்டில் இருந்தனர். அதற்கு முன்பெல்லாம் ஒவ்வொரு முறையும் யாராவது புதிதாக நட்பாக வேண்டினால் என்னிடம்தான் முதலில் சொல்வாள். நான் அவரின் சுவர் பக்கம்போய் ஆராய்ச்சி செய்து அவரின் நட்பை ஏற்கலாமா வேண்டாமா என்று சொல்வேன். ஒரு முறை எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டையே வந்துவிட்டது. அம்முறை நட்பு அழைப்பு கொடுத்தவர் பக்கத்து தெருவில் இருக்கும் கீர்த்தி. பெண் என்பதாலும் அதுவும் பக்கத்து தெருவில் இருப்பவள்தானே என்பதாலும் ரேவதி அக்கா என்னைக் கேட்க்காமலேயே அவளின் நட்பை ஏற்றுக்கொண்டுவிட்டாள். எனக்குத் தெரிந்தபோது நான் அவளை நன்றாகத் திட்டினேன். ஏனென்றால் அந்த கீர்த்தியை பற்றி ஊரில் ஒருவர் கூட நல்லவிதமாக பேசவில்லை. வாராவாரம் அவள் வீட்டிற்கு புதிது புதிதாக பொருட்கள் எப்படி வருகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். அவள் அதை பெறுவதற்கு எந்த தப்பான விசயங்களையும் செய்வதில்லைதான். “எனக்கு இதெல்லாம் வேண்டும்.. ஏழையாய் பிறந்துவிட்டதால் இதற்கெல்லாம் ஆசைப்பட முடியுமா” என்பது மாதிரி ஏதாவதுதான் சொல்லுவாள் யாரேனும் ஒரு தர்மவான் வீட்டில் கொண்டுவந்து இறக்கிவிடுவான். வேடிக்கை என்னவென்றால் அதைப் பார்த்து கீர்த்தியையும், வாங்கிக்கொடுத்தவனையும் திட்டித் தீர்க்கும் புண்ணியவான் அடுத்த முறை முதலில் ஓடிப்போய் சீர்வரிசை செய்வான். கீர்த்திக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்ததால் யார் திட்டுவதைப் பற்றியும் கவலைப்படமாட்டாள். இப்படி வாங்கிக்கொடுப்பதினால் அவர்களுக்கு என்ன லாபம் என்றோ, வாங்கிக்கொள்வதில் கீர்த்திக்கு என்ன ஆசை என்றோ புரியவில்லை.

ரேவதி அக்காவிடம் இதைச் சொன்னபோது என்னை ஆணாதிக்கவாதி எனத் திட்டினாள். நானும் மற்ற ஆண்களைப்போல்தான்.. ஒரு பெண் பொது வெளியில் சகஜமாகப் பழகினாலே சந்தேகப்படும் மோசமான வக்கிர புத்திக்காரன் அது இது என என்னவெல்லாமோ சொல்லித் திட்டினாள். ஒரு கட்டத்திற்கு மேல் எப்படியோ போங்கள் என்று விட்டுவிட்டேன். ஒரே வாரத்தில் நீ சொன்னது சரிதான் என்று என்னிடம் வந்து சொன்னாள்.

புகைப்படத்தை ஏன் பகிரவேண்டும்.. உடனே அதை நீக்குங்கள் என்று அவரிடம் சொன்னேன். அதன் பிறகுதான் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது. நான் பொறாமையால் பேசுகிறேன் என்றும் என் எல்லையை மீறாமல் இருக்கவேண்டும் என்று பேச ஆரம்பித்தாள்.

இது ஒரு வினோத உலகம். வந்த சில நாட்களிலேயே உணர்ந்தாலும் விட்டு வெளியேறும் வழிதான் தெரியவில்லை. இது வந்த பின்னர் எல்லோருக்கும் மூன்று முகங்கள் ஆகி விட்டன. இங்கு காண்பிப்பது ஒரு முகம், வெளி உலகில் ஒரு முகம் மற்றும் மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த மூன்றாவது முகம்.

மேலும் சில சுவர்களில் சில போராட்ட அழைப்புகள் இருந்தன. உலகில் பல நாடுகளின் அரசியலை நிர்ணயிக்கும் சக்திகொண்டதாய் இவ்விடம் இருப்பதால் எல்லோரும் முடிந்தவரை இவ்விடத்தை பயன்படுத்திக்கொள்ள முனைகிறார்கள். வாரத்திற்கு ஒரு போராட்ட அறிவிப்பையேனும் பார்க்கலாம். நம்மில் சிலருக்கும் எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்லும் பழக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இவ்விடம் சொர்கபுரி.

இப்போது யோசித்தால் எனக்கு ரேவதி அக்காவைப் புரிந்துகொள்ள முடிகிறது. தன்னை யாரும் கண்காணிக்கவில்லை என்ற சூழ்நிலையில்தான் ஒரு மனிதன் தன்னை உண்மையாக வெளிப்படுத்திக்கொள்வான் என்று சொல்வார்கள். கட்டுப்பாடுகள் அற்ற, அதே சமயம் சிறிதளவு பாதுகாப்பாய் உணரும் இடத்தில் கூட ஒரு பெண் தன்னை முழுமையாய் வெளிப்படுத்திக்கொள்கிறாள். எனக்குப் புரிந்தது ஆனால் என்னைப்போல் பலரும் நட்பாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரேவதி அக்காவின் சுவரை அடைந்தபோது கணேசன் அண்ணனின் அண்ணன் அங்கிருந்தார். “காணாமல்போனவளைத் தேடாமல் இங்கென்ன செய்துகொண்டிருக்கிறார்” இருந்தும் அவரைப் பார்த்தவுடன் எழுந்த குற்றவுணர்ச்சியை மறைக்க முடியவில்லை.

கடைசியாய் அவளுடன் சண்டைப் போட்டபின் இரண்டு நாட்கள் மனதில் வேறெதுவும் ஓடவில்லை. அவள் கேட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் அநியாயமானவை. அவளின் நல்லதிற்கு சொன்னதை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் அசிங்கப்படுத்திவிட்டாள். பதிலுக்கு திருப்பி திட்டியிருந்தால் ஒருவேளை மனம் சமாதானம் ஆகியிருக்கும். அதற்கு அவள் வாய்ப்பே குடுக்காததால் அவள் வீட்டிற்குப் போனேன். கணேசன் அண்ணனின் அண்ணந்தான் இருந்தார். சட்டென்று மனதில் ஒரு எண்ணம்.

“அண்ணா.. ரேவதி அக்கா இருக்காங்களா” அவள் அங்கு இல்லையென்பது தெரிந்தும் தெரியாத மாதிரி கேட்டேன்.

“இல்ல சிவா.. அவ அங்கதான் போயிருக்கா” என்றார்

ஒன்றும் பதில் சொல்லாமல் தலையை குனிந்து நின்றேன்.

“என்னாச்சுப்பா…? அவகிட்ட எதுனா கேக்கனுமா”

“வந்து..உங்ககிட்டதான் ஒன்னும் சொல்லனும்…” என்று இழுத்தேன்.

“சொல்லு.. என்ன சொல்லனும்” அதுவரை அசிரித்தையாக இருந்தவர் என் முகத்தைக் கவனமாகப் பார்த்தார்.

“நான் சொல்றத எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரில.. ஆனா தப்பா எடுத்துக்காதீங்க.. ரேவதி அக்கா பத்தி ஒன்னு சொல்லனும்ன்னுதான் வந்தேன்.. தப்பா எதுவும் இல்ல..அக்கா நல்லவங்கதான்.. அதுனால அவங்க மேல் இருக்குற அக்கறைலதான் சொல்றேன். அக்காவ ‘அங்க’ அனுப்பாதீங்க அண்ணா அது கல் மனசுக்காரங்களுக்கான இடம்.. சரியாத்தான் சுவர்களால அந்த உலகத்த உருவாக்கிருக்காங்க.. அங்க பாதிபேரு மோசமானவங்களா இருக்காங்க.. இது அக்காவுக்கு சொன்னா புரிய மாட்டேங்குது.. அவங்க எல்லாரையும் நம்புறாங்க.. யாரு எப்படின்னு பாத்து பழக மாட்றாங்க.. நான் சொன்னாலும் என்னயத்தான் திட்றாங்க.. இந்த ஊர்ல இதுக்கு முன்னாடி எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும்.. நேத்து பொறந்த கொழந்தல இருந்து நாளைக்கு சாகப்போறவங்க வரைக்கும் எல்லாரையும் தெரிஞ்சு வச்சுருப்போம்.. ‘அது’ வந்ததுக்கு அப்றம் எல்லாரையும் புதுசா பாக்குற மாதிரி இருக்கு.. எது உண்மை எது பொய்ன்னு கண்டுபிடிக்க முடியல..எதுக்கு வம்பு பாருங்க.. அதான் உங்ககிட்ட ஒருவார்த்த சொல்லிரலாம்ன்னு வந்தேன்.. நான் சொன்னேன்னு எதுவும் அவங்கிட்ட சொல்லிடாதீங்க.. அதுக்கும் என்னதான் திட்டுவாங்க..நான் வர்றேன்” சொல்லிவிட்டு விறுவிறுவென்று அவ்விடத்தைவிட்டு வெளியேறினேன். கணேசன் அண்ணனின் அண்ணன் என்னைக் கூப்பிடவில்லை. அதிலிருந்து நான் சொன்னதை அவர் சீரியசாக எடுத்துக்கொண்டார் என்பது புரிந்தது. உள்ளுக்குள் ஒரு குரூர சந்தோசம்.

அடுத்த ஒரு வாரத்திற்குளெல்லாம்….

கணேசன் அண்ணனின் அண்ணனிடம், “சாரி அண்ணா.. என்றேன்” என்னைப் பார்த்தவர் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதார். “பாவி மக.. இந்தப் பாழாப்போன சொவத்துங்கப் பக்கம் வராத வராதன்னு சொன்னேன்.. என் பேச்சக் கேக்கலயே.. இவ்ளோ வீம்பா ஒரு பொம்பளைக்கு இருக்குறது.. எம் தம்பி வந்து கேட்டா நான் என்ன சொல்லுவேன்.. எங்க போனாளோ.. என்னாச்சோ தெரியலயே” அழுது தீர்த்தார்.

ஒரு சில நிமிடங்களுக்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அவரிடம் ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

“தம்பி பொண்டாட்டின்னு கூட பாக்காம புருசன் இல்லாதப்பா ஊர் மேயிரியான்னு கேட்ருக்கான் பாவி.. சொல்லு பொறுக்க மாட்டாம வீட்ட விட்டுப் போயிட்டா” வரும் வழியில் ஏதோ ஒரு சுவரோரம் இருவர் பேசிக்கொண்டார்கள்.

இங்கு காணாமல் போன எத்தனையோ பேர் திரும்பி வந்திருக்கின்றனர். திரும்பி வரவே மாட்டார்கள் என்று ஊர் உலகமே சொன்னவர்கள் எல்லோரும் மறுபிறவி கிடைத்து மீண்டிருக்கின்றனர். “உலகமே இங்கிருக்கிறது, இவ்வுலகில் கண்டுபிடிக்க முடியாதவர்களே இனி இருக்க மாட்டார்கள்” என்று என்னை இங்கு முதன் முதலில் அழைத்து வந்தபோது ஒருவர் சொன்னார். ரேவதி அக்காவும் திரும்பி வருவாள். அவள் வரவேண்டும். “#சேவ்_ரேவதி_அக்கா” என்று என் சுவரில் எழுதிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினேன்.

“சுவர்களின் உலகத்திற்கு வந்தமைக்கு நன்றி. மீண்டும் வருக” என்ற செய்தி கண் முன் தோன்றி மறைந்தது.


மணச்சேறு, ஆண் மாடல் –இரா.மதிபாலா கவிதைகள்

$
0
0
​​மணச்சேறு
மிடறு மிடறாய்
திரித்து பின்னிய
மதுக் கயிற்றில்
தேடல் வாளியை இறுக்கி
நினைவுக் கேணியில்
இறக்கி, ஏற்றி
ஏற்றி, இறக்கி
ஒர் புணர்ச்சிப் பொழுதின்
முன் விளையாடல்கள் போல்….
தொலைத்த காலங்களை
அள்ளி அள்ளி
எடுக்கிறேன்.
நீ
பணத்தை தரப் போகும் எஜமானி
முக பாவத்தோடு நிற்கிறாய்
அள்ளி குவித்த
சேற்றில் மணக்கிறது
நாம்
சேர்ந்திருந்த
பொழுதுகளின் வாசம்.
​​
ஆண் மாடல்
பனைவாழை செந்தூண்கள்
மேல் அகண்ட குன்றுகள்
அமர்த்தி அதிர நடக்கையில்
அவையெங்கும்
மெளன மகுடி ஒசை
இடுக்குகளை பொத்தி
எழாது அடக்குகின்றன
நாற்காலி மறைவுகளில் கரங்கள்.
இருப்பினும்
சிலிர்த்து பாயும்
பார்வை நாக்குகளால்
ருசிக்கேம் தேகத்தின்னிகள்
இசையதிர நடக்கிறேன்
உள்ளாடை மீது குவிகிறது ஒளி
உண்ண வசதியாய் எடுப்பாய்
நிமிர்ந்தப்பட்டு இருக்கிறது
தீனி
எழுச்சிக்கு உதவுகிறது
மின்புள்ளி திரைகளோடு
மூளை செல்களால்
புணர்ந்த நினைவு.
 அளவிலும்  கலையிலும்
மெருகேற்றிய  ஆடைகளை
வாங்க வெறியேற்றும்
பிழைப்பு எனக்கு.
இப்போதெல்லாம்
“வெளிச்சம் சூழ்”
ஒளி வெள்ளத்தில்தான்
எழுச்சியுறுவேன்
என்கிறது  உறுப்பு.
வெட்கம் கொள்ளும்
இளம் மனைவிக்கு
எப்படி புரிய வைப்பேன்
இதை.

அன்பும் அறனும் உடைத்தாயின்- செந்தில்குமார் சிறுகதை

$
0
0

டோக்கியோவிலிருந்து நான்கரை மணி நேர பயணத்தில் மட்சுமோத்தோ வந்தடைந்தாகிவிட்டது. இடையில், இரண்டு முறை ஹைவே பார்க்கிங்கில் நிறுத்தி தேனீர் அருந்தியிருந்தேன். மட்சுமோத்தாவிலிருந்து தக்காயமா மலைக்கு செல்லும் வழியில் விரைந்துக்கொண்டிருந்தது கார். இரு பக்கமும் மலை சரிவில் மேப்பிள் மரங்களின் இலைகள் பழுத்து சிவப்பு நிறமாக மாறத்தொடங்கியிருந்தது. நவம்பர் மாதத்திற்க்கான குளிர், பசுமையான மலையில் ஏறத்தொடங்கியவுடன் இன்னும் அதிகமானது. காரின் வெப்பமூட்டும் கருவியில் இன்னும் வெப்பத்தை ஏற்றினேன்.

டோக்கியோவிலிருந்து கிளம்பும்போது எந்த திட்டமும் இல்லை. திருமணம் போன்ற பந்தங்கள் இல்லாது இருப்பதின் வசதிகள் இவை. ஆனால், இப்போதெல்லாம் தனிமை அலுத்துபோனதாய் ஒரு உணர்வு. மட்சுமோத்தோவின் அழகு கவனத்தை கலைத்தது. விடிகாலை பெய்த மலையில் மரக்கிளைகள் எங்கும் நனைந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது. இங்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. சென்றமுறை வந்தபோது சிவா கூட வந்திருந்தார்.

சிவாவை எங்கே முதலில் சந்தித்தோம்? தோக்கியோ அருகே இருக்கும் சிம்பாசி ரயில் நிலையத்தில், ஒரு திங்களன்று காலை, விபத்தால் ரயில்கள் நின்றுபோய் அலுவலகத்திற்க்கு தாமதமாக வருவதாக செய்தி அனுப்பியபடி நின்றபோது அருகில் வந்தார்.

நீங்க தமிழா?

பெரும்பாலும், இப்படி விசாரிப்புகள் வருவதில்லையே!. கையில் வைத்திருந்த கரையும் நிழல்கள் புத்தகம் ஞாபகத்தில் வந்து, புன்னகைத்தேன்.

என் பெயர் சிவநேசன். மலேசியாவிலிருந்து வந்திருக்கேன். இங்கே வந்து இரண்டு மாசமாயிடுச்சு இன்னும் ஒரு மணி நேரம் டிராவல் செஞ்சு ஆபிசுக்கு போகணும். என்ன இப்படி திடீர்ன்னு ட்ரெயன் நின்னுடுச்சு?

ஓ இர்ண்டு மாசமா இப்படி நடக்கலையா?

இல்லையே? ஏன்?

இல்லை. யாரோ ஒரு நபர், ட்ரெய்ன் முன் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டார். இனி, பாடி எடுத்து முடிக்கிற வரைக்கும் ட்ரெய்ன் போகாது.

ஏன், இப்படி செஞ்சுகிட்டாரு? கேட்டபின் அந்த கேள்வி என்னிடம் கேட்பதின் அபத்தம் புரிந்து, புன்னகைத்தார்.

வாங்கண்ணே கோப்பி சாப்பிடலாம், என்றார் இருவரும் அருகிலிருந்த காபி ஷாப்புக்குள் நுழைந்தோம். வசதியான ஒரு மூலையில் இடம் கிடைத்தவுடன், அவரே இருவருக்கும் கப்புசீனோ வாங்கி வந்தார்.

திங்கள்கிழமையே இப்படி ஆயிடுச்சே?

பெரும்பாலும் திங்கள்கிழமைகளில்தான் இப்படி விழுவார்கள். போன வெள்ளி மாலை வேலை இழந்திருக்ககூடும். இன்று காலை, வீட்டிலிருந்து எப்போதும் போல் அலுவலகத்துக்கு கிளம்பி, ஸ்டேசன் வந்தவுடன், செல்லுமிடம் ஒரு பெரிய கேள்வியாக முன்நிற்க, ரயில் முன் பாய்ந்துவிடுவார்கள்.

ஆனால், இது ஆயிரக்கணக்கான நபர்களுக்கு இப்போ பிரச்சினையாயிடுச்சே அண்ணே?

ஏதோ, சமூகத்தை முடிந்த வகையில் பழிவாங்கிட்ட திருப்தி அவருக்கு கிட்டும்தானே.

புன்னகைத்தார், சிவநேசன். ஆனா ஒரு வேலை போனால் என்ன ஆகிவிடபோகிறது? இதற்க்கெல்லாம் தற்கொலைதான் தீர்வா? என்ன முட்டாள்தனம் இது?

இல்லை ஒரு வேலை போனதால் தற்கொலை இல்லை. ஏதோ ஒரு வகையில் நாம் இந்த சமூகத்துக்கு பொருந்தவில்லை என்று நினைக்கிறார்கள். அதுதான் அவர்களை இந்த முடிவுக்கு துரத்துகிறது. தவிர, தங்களுடைய எஜமானை காப்பாற்ற முடியாமல் தோல்வியைத் தழுவிய சாமுராய்கள் வயிற்றை கிழித்துக்கொண்டு உயிர் இழக்கும் அராகிரி போன்ற உதாரணங்களும் இவங்க வரலாற்றில் இருக்கு.

சிவா, தொடர்ந்தார். எனக்கு என்னவோ, நம்மளை மாதிரி ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை வர்றதில்லைன்னு தோணுது. நம்மாள ஆனதை செஞ்சோம், அப்படியும் விழுந்துட்டோமா? அது தலைவிதி என்று போட்டுட்டு வாழ்க்கையை தொடர முடியும். இங்கே எல்லாத்துக்கும் நாமதான், நாம மட்டும் தான் காரணம்ன்னு நெனைக்கிறாங்க இல்லீங்களா?

இருக்கலாம் என்றேன் மையமாக.

சிவநேசன் மலேசியாவில் வாழும் நான்காம் தலைமுறை தமிழர். அவருடைய முன்னோர்கள் நாகப்பட்டினம் அருகே இருந்து மலேசியா சென்றவர்கள். சிவாவிற்கு வரலாறு குறித்து இருந்த ஆர்வம் என்னை நெருக்கமாக உணர செய்தது.

வாரவிடுமுறைகளில் சந்தித்தோம். சிவா ஒரு கைத்தேர்ந்த சமையல்காரர்.
வெள்ளி இரவுகளில் சாப்பிட அழைப்பார். செல்வதற்க்கு முன்பே சமையலை முடித்திருப்பார். மதுவுடன் அமருவோம். சிவா நிறைய குடிப்பதில்லை. இரண்டு ரவுண்டுகள் போனவுடன், பாடத் தொடங்கிவிடுவார். பெரும்பாலும் ராஜாவின் சோக பாடல்கள். சிலவேளைகளில் கண்ணீல் நீர் வழியுமளவிற்க்கு அந்த பாட்டின் சோகத்தில் ஆழ்ந்துவிடுவார். பொதுவாக, நல்ல உரையாடல்காரர். அவர் வளர்ந்த கம்பம், கள்ளுக்கடைகள், சண்டைகள் என உரையாடல் நீளும் இரவுகளில் அங்கேயே உறங்கிவிடுவேன். அதிகாலையிலே எழுந்து, குளித்து, பட்டையாக விபூதி பூசி, ”கற்பனை என்றாலும் கற்சிலையென்றாலும்” பாடலை உரக்க ஒலிக்க வைப்பதுதான் அவருடைய ஒரே பிரச்சினை.

அப்படி ஒருநாள் இரவு குடித்திருக்கும்போது, கேட்டார்.

ஏண்ணே, நீங்க இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலை?

ஷோபா நினைவில் எழுந்தாள். ஊரில் ஒரு காதல் இருந்துச்சு. பிறகு அது பிரியுறமாதிரி ஆயிடுச்சு. இனி இங்கேயே பார்த்துடலாம்ன்னு இருக்கேன்.

அட, ஜப்பானிய காதலி உண்டா? அதான் அண்ணே இவ்வளவு நல்லா இந்த மொழி பேசுறீங்க என்று சிரித்தார் சிவா
உண்மையில் ஷோபாவிற்கு பின் இந்த ஏழு வருட தோக்கியோ வாழ்க்கையில் ஏறக்குறைய காதல் போல் சில உறவுகள். எதுவும் நிலைக்கவில்லை. பீத்தோவனின் ஐந்தாம் சிம்பெனி, யமாசாக்கி விஸ்கி, நாவல்கள் என விடுமுறை நாட்கள் முடிவுபெறும். சிலவேளைகளில் இலக்கில்லாத பயணங்கள். நெருங்கிய நண்பர்களின் குடும்ப வாழ்க்கை எதுவும் உற்சாகமூட்டுவதாய் இல்லை. தனியாக வாழ பயந்து திருமணம் செய்துக்கொண்டு, பின்பு அப்படி செய்துக்கொண்டதாலயே வெளி இழந்து, அதிலிருந்து விடுவித்துக்கொள்ள துடிக்கும் நபர்கள் கலவரத்தைதான் ஏற்படுத்தினார்கள்.

”கவர் பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக்கொண்டே
ஆப்பதினை அசைத்திட்ட குரங்கதனைப் போலே”

கதைதான்.

அந்த வருட விடுமுறைக்கு மலேசியாவிலிருந்து அவரது குடும்பம் வந்திருந்தது. ஒரு நாள் சாப்பிட கூப்பிட்டிருந்தார். சிவாவின் மனைவி, நீல நிற ஜீன்ஸ் , மேலே வெள்ளை டாப்ஸ் போட்டிருந்தார். கழுத்தை சுற்றி மப்ளர் போல் போட்டிருந்த சால். வெளியே வந்து, வாங்கண்ணா என்றார். ப்ரியாவின் கண்கள் பெரியவை. சுருள் கேசம், அழகான சிரிப்பு. மலேசியாவின் வங்கி ஒன்றில் பணிபுரிவதாக ஏற்கனவே சிவா சொல்லியிருந்தார். ப்ரியா, ஒவ்வொரு வார்த்தைக்கும் புன்னகைத்தார். சிவாவின் மகன் அரவிந்த் ஓடிவந்து அம்மாவின் காலை பற்றிக்கொண்டு நின்றான். அம்மாவை போலவே லட்சணம். சமையல் சிவா செய்தது போலவே சுவை.

குடும்பம் அங்கிருந்த இரண்டு வாரமும் சிவா விடுமுறையெடுத்து ஊர் சுற்றி காண்பித்தார். இருந்த ஒரே நண்பரும் குடும்பத்தோடு ஐக்கியமாகிவிட , அந்த விடுமுறையில் நான் மட்டும் தனியாக சுற்றிக்கொண்டிருந்தேன்.

சிவாவின் மனைவியும், பிள்ளையும் ஊருக்கு திரும்புவதற்கு முதல் நாள், நான் ஒரு இந்திய உணவகத்திற்கு அழைத்திருந்தேன். இருவரும் ஒரே நிறத்தில் உடையணிந்து வந்தனர். ப்ரியாவின் கைகளை கோர்த்துபிடித்திருந்த சிவா, திருமணமாகி ஏழெட்டு வருடங்களுக்கு பிறகும், தனது காதலியை பிரிவதைபோன்ற பரிதவிப்பில் இருந்தார்.

என்ன சிவநேசன், விட்டா நீங்களும் ப்ரியாவோட ப்ளைட் ஏறிடுவீங்க போல இருக்கே?

வெட்கத்துடன் சிரித்தார் சிவா.

”அண்ணா, நீங்களும் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்குங்க. அப்புறம் தெரியும்” என்றார் ப்ரியா.

பிறகு சில மாதங்கள் கழித்து அலுவலகத்தில் இருக்கும்போது, எண் இல்லாது ஒரு அயல் நாட்டு போன் கால் வந்தது. எடுத்தவுடன்,

”அண்ணா, அண்ணா நான் ப்ரியா பேசுகிறேன் “ என்றார். குரலில் தெரிந்த பதட்டம் என்னையும் தொற்றிக்கொண்டது.

சொல்லுங்க, ப்ரியா.. என்ன விஷயம்?

அழத் தொடங்கினார். தயவு செய்து அழாதீங்க. என்னாச்சுன்னு சொல்லுங்க

”அண்ணா, அவருடைய அலுவலகத்திலிருந்து போன் வந்தது. அவர் விபத்தில் செத்துட்டதா சொல்லிட்டு கட் செஞ்சுட்டாங்க. அவருடைய அலுவலக நண்பர்கள் யாரும் போன் எடுக்க மாட்டேங்குறாங்க. இங்குள்ள அலுவலகத்தில் கேட்டால் ஹெச் ஆர் யாரிடமும் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள் என்கிறார்கள். எனக்கு ஒன்னுமே புரியலைண்ணா” என்றார் கேவி அழுதபடி.

நடுக்கத்துடன் அலுவலகத்தில் விடுமுறை சொல்லிவிட்டு உடனடியாக அவர் இருந்த வீட்டுக்கு சென்றேன். வீடு பூட்டீயிருந்தது. எத்தனையோ முறை சென்ற வீடு, அன்றைக்கு புதிதாக துக்கவீட்டுக்கு உரித்தான சவக்களை பூசியிருந்தது. வீட்டு வாசல் முழுவதும் உள்ளே வர கூடாது என்கிற மஞ்சள் நிற டேப் போட்டு சுற்றி வைத்திருந்தார்கள், காவல்துறையினர். வீட்டின் அருகே நின்று மூடியிருந்த சன்னலை உற்று நோக்கினேன். நிலவும், மலரும் பாடுது என்று கண்களை மூடி லயித்து பாடும் சிவநேசன் மனதில் தோன்றினார். பால்கனியில் காய்ந்த அவரது சாரம் காற்றிலாடியது. அருகிலிருக்கும் யாரையும் தெரியாது. இந்த ஊரில் வேறு எப்படியும் தகவல்கள் சேகரிக்க முடியாது. அருகிலிருக்கும் வீட்டுக்கார்களோ, தெருவில் இருப்பவர்களோ யாரும் பேச மறுப்பார்கள்.

அவரது அலுவலகம் குத்துமதிப்பாக தெரியும். ஆனால் அங்கு சென்ற போது எதுவுமே சொல்ல மறுத்தார்கள். அவரது உறவினர்களிடம் மட்டும்தான் பேசுவோம் என்றார்கள். திரும்ப நடந்தபோது, ப்ரியா போன் செய்தார். ”அண்ணா, அவர் ட்ரெய்ன்லே விழுந்துட்டாராம் அண்ணா”..என்றார். திடுக்கிட்டேன்.

இணையத்தில் தேடியதில், சிம்பாசி ரயில் நிலையம் அருகே, இந்தியர் ஒருவர் ரயில் முன் பாய்ந்த தகவல் தெரியவந்தது. நண்பர்களிடம் விசாரித்தால், அது சிவாதான். நாங்கள் இருவரும் முதன்முதலாக சந்தித்த அதே சிம்பாசி ரயில் நிலையத்துக்கு அருகேதான் சிவநேசன் ரயில் முன் பாய்ந்துள்ளார். ஏன் இப்படி செய்தார்? வேலையில் எதுவும் சிக்கலா? வேறு என்ன குழப்பம் என்று எதுவும் புரியவில்லை. அதற்குள் பலமுறை ப்ரியா போன் செய்தபடியே இருந்தார். பாடி ரீசிவ் செய்ய அங்கே வருவதாக இருந்தால் ஏற்பாடு செய்கிறோம். இல்லையென்றால், நாங்களே மலேசியா அனுப்பிவிடுகிறோம் என்று சொன்னதாக கூறினார். தைரியமாக இருங்கள். என்னாலான வகையில் எல்லா உதவிகளையும் செய்கிறேன் என்றேன். மலேசிய தூதரகம் மூலம் மூன்று நாட்கள் கழித்து சிவநேசன் மலேசியாவுக்கு அனுப்பபட்டார்.

என்ன நிகழ்ந்தது? ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்? அரவிந்த என்ன ஆவான்? இப்படி எந்தகேள்விக்கும் விடையில்லை. இரவு தூக்கத்தில் சிவா சோகமாக ”இதயம் ஒரு கோவில்” பாடினார். கூடவே ப்ரியாவின் பெரிய கண்கள். திடீரென்று விழிப்பு வந்து எழுந்தமர்ந்தேன். தண்ணீர் குடித்து வந்து தூக்கம் பிடிக்காமல் கணிப்பொறியை துளாவினேன். முகநூலில் சிவநேசனின் பக்கம் கண்ணில் பட்டது. முதல் பக்கத்தில் சிவநேசனின் கைகளை பிடித்துக்கொண்டு ப்ரியா நின்றிருந்தார். இறுதியாக சிவ நேசனின் முகநூல் நடவடிக்கைகள் தெரிந்தன. சிவாவின் கடைசி நாளில் ”ஒரு உண்மை சொல்லவேண்டும்” என்கிற ஒரு முக நூல் ஐடியின் நட்பு அழைப்புக்கு செவி சாய்த்திருந்தார்.

தக்காயாமாவின் உச்சிபகுதிக்கு வந்துவிட்டதை, தனித்திருந்த வீடுகள் ஞாபகபடுத்தின. காரின் வேகத்தை மட்டுப்படுத்தினேன். வலதுபக்கம் கார்கள் நிறுத்துவதற்கான இடமிருந்தது. அங்கு காரை நிறுத்திவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்தேன். எனக்கு நேர் எதிரே இருந்த பழைய மரவீடு கவனம் ஈர்த்தது. தோட்டத்தில் வளர்ந்திருந்த ஜப்பானிய ககி மரத்திலிருந்து ககி பழங்களை ஏணியில் ஏறி பறித்துக்கொண்டிருந்தார் ஒரு முதியவர். முதியவருக்கு எப்படியும் எண்பது வயதிருக்கும். காக்கி நிற சட்டையும் பழுப்பு நிற பேண்டும் அணிந்திருந்தார். பேண்ட் உடன் இணைத்த நாடா சட்டை மேல் குறுக்காக இணைந்திருந்தது. ஏணியை பிடித்துக்கொண்டிருந்த அவரது மனைவி, கிழவர் சொன்ன ஏதோ ஒரு ஹாஸ்யத்துக்கு, ஒரு கையை இடுப்பில் ஊன்றியபடி ரசித்து சிரித்தார்.

திகிரி சிறுகதை தொகுப்பு – துரோகிக்கப்படும் பெண்கள் –ஜான் மேரி கட்டுரை

$
0
0

ஆன்மாவை சுமந்து திரியும் வெற்று உடலே நாம். ஆன்மாவின் விழிப்புநிலை என்பது அரிதாகவே நடக்கும்; அது அவரவர் தேடலின் பொருட்டு நடப்பவை. நடந்த சம்பவத்தை வெறும் சம்பவமாக எழுதாமல் அதை புனைவுகள் மூலம் கதையாக நம் கண் முன் காட்சிப்படுத்துகையில் ஒரு மின்னல் தாக்கியது போல் இந்த வெற்று உடலில் இருக்கும் ஆன்மா விழிக்கும். அது வெறும் விழிப்புநிலை மட்டும் அல்ல அது தொடர்ந்து நமக்குள் கேள்வியாகவும், அழுகையாகவும், நேசக் குரலாகவும், நாம் நமக்கென்ன என்று கடந்து வந்த சில சம்பவங்களின் தீராத குற்றணர்வின் குரலாகவும் என பல ஒலிகளாக நம் அகமனக் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்படி விழிப்புநிலை தரும் எழுத்துக்களே ஒரு எழுதாளனின் வெற்றி.

 

போகன் சங்கரின் ‘திகிரி’ நான் வாசிக்கும் அவருடைய முதல் சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பு முழுக்க சமூகத்தாலும், ஆண்களாலும் வஞ்சிக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட பெண்களின் குரல்களாக எதிரோலிக்கிறது. ரத்தமும் சதையும் உணர்ச்சியும் அற்ற வெற்று உடலாகவே பார்க்கப்படுகிறார்கள் “சிறுத்தை நடை” தவிர மற்ற ஏழு கதைகளும் சமவெளியில் நடப்பவை

 

“தீட்டு” கதையில் ஒரு பெண்ணின் உடல் பண்டப்பொருட்களாக சமூகத்தில், தனிமனித வாழ்கையில் எப்படியெல்லாம் பார்க்கப்படுகிறது என்பதைச் சித்தரிக்கிறது. வேலைக் கேட்டு போகும் இடத்தில் அவளின் மெலிந்த, போஷாக்கு குன்றிய, அழகுகுன்றிய உடலால் கொண்டமையால் நிராகரிக்கப்படுகிறாள். தன் ஆச்சி இறக்கும் தருவாயில் பணத்துக்காக உதவி கேட்டு போகும் இடத்திலும் பணத்தை கொடுத்து அவள் உடலை உடல் துஷ்பிரயோகம் செய்ய முயற்ச்சிக்கிறான் அவளது முதலாளி. அந்த தருணத்தில் அவள் “தீட்டாயிருச்சண்ணே” என்று சொல்லும் இடத்தில் ஒரு பெண்ணின் வலியைக் உணர்விதுச் செல்கிறார் போகன். கொன்று புசிக்காமல் உயிருடன் பிய்த்து திண்ணும் ஓநாய் கூட்டத்தின் நடுவில் தவிக்கும் உயிர் போலவே கோமதி தவிக்கிறாள். கோமதியின் அக்கா பற்றிய சிறிய குறிப்புக்குகூட அவளது உடல் ஈர்ப்பு சார்ந்த சமூகத்தின் பார்வையை தனிக்கதையாக உணர்விக்கக் கூடியது.

 

 

“சிறுத்தை நடை” கதையில் சமவெளியில் வசிப்பவர்களின் மனநிலையும் மலை பிரதேசத்தில் வசிப்பவர்களின் மனநிலையும் ஒன்று போல் இல்லை என்பதை பூடகமாக சித்தரிக்கிறது. சமவெளியில் இயல்பான கொண்டாட்ட சூழலில் வசித்த பெண் மலை பிரதேசத்துக்கு வருகிறாள். தன் ரசனைக்கு நேர் எதிராக உள்ள கணவன் அங்கு வாழும் மக்கள் அச்சூழல் அவளுக்கு மர்மமாக இருக்கிறது ஒரு நாட்டு ரோஜா செடியை அவள் அங்கு நடுகிறாள் அது மர்மமான பூஞ்சையால் தாக்கப்பட்டு காய்ந்து விடுகிறது. நாட்டு ரோஜா மலைகாட்டு பகுதியில் தாக்குப் பிடிப்பதில்லை என்று சாக்கோ சொல்லுமிடம் அக்கதையில் வரும் பெண்ணை ரோஜா செடியாகக்கூட படிமப்படுத்தி வாசிக்கும் சாத்தியத்தை தந்துவிடுகிறது. அவளையும் அறியாமல் அவள் வீட்டு வேலைகாரன் அவளை புணர்ந்து கொள்கிறான். ஒரு பெண்ணாய் மற்றவர்களால் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்படுகிறாள். சாக்கோ ஒருவன் மட்டும் தான் மனிதனாக தெரிகிறான். ஸ்காட்லெட்டுடன் நட்பு கொண்டதினால் அவன் அதிகார வர்கத்தினரால் கொல்லப்படுகிறான். இறப்புகளும், துரோகங்களும் பெண்ணை மையப்படுத்தி பின்னப்பட்டுள்ளது.

 

“முகம்” கதையில் ஒரு ஆண்ணின் பார்வையில் பெண் என்பவள் எப்படி என்று சொல்லப்படுகிறது கதையின் ஆரம்பத்தில் இறந்த பெண்ணின் ஆவி வருகிறது. அவள் இறந்து நூறு வருடங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவளின் இறப்பிற்கு அவளுடைய தந்தையோ, உடன் பிறந்தானோ, பர்த்தாவோ, காமுகனோ,அரசனோ இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கதையின் நாயகன் அந்த பெண்ணின் ஆவியை ஒரு பாலத்தில் பார்க்கிறான். மிரண்டு போய் ஒரு வீட்டின் முன் அமர்கிறான். அப்போது தமிழ்ச்செல்வியை சந்திக்கிறான்; அவள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிறாள். அவள் போலீஸ் அதிகாரியை ஒருவனை கொன்று விட்டு தலைமறைவாக வாழ்கிறாள் பின்பு அவளும் சுட்டு கொல்லப்படுகிறாள். வீட்டுக்கு வரும் கதை நாயகன் தொட்டிலில் உறங்கும் தன் பெண் குழந்தையை கையில் ஏந்தி பார்க்கிறான் இறந்த பெண்ணின் கண்களும்,தமிழ்ச்செல்வியின் கண்களும் தன் குழந்தையின் கண்களும் ஒன்றும் போல் இருப்பதாக பார்க்கிறான். வழிவழியாக பெண்களின் வலிகளும் துயரங்களும் தொடர்வதாக சொல்லப்படுகிறது. அவர்களின் எல்லா முகமும் ஒருபுள்ளியில் இணைவது போன்ற பொதுச் சித்திரத்தை தந்துவிடுகிறது.

 

 

“திகிரி” சாவை கை தொடும் தூரத்தில் பார்க்கும் ஒரு மனிதனின் மனநிலை பற்றின கதை. ஒருவர் சாவின் பயத்தில் உள்ளார். மருந்துகள் எடுக்கிறார். அதன் பக்க விளைவாக குடும்பம் மேல் விலகல் வருகிறது. மகள் மேல் இருந்த பிரியமும் போய் விட்டது. இப்பொழுது சமணர்களைக் காண மலைக்கு போகிறார். ஒரு பெண்ணை காண்கிறார். அவள் ஒரு தொல் கதையின் எச்சம். அவள் தன் கதையை சொல்கிறாள் இவரிடம்.அதில் வரும் படைவீரன் தான் நீ என்று. அதன் தொடர்ச்சியாத்தான் நீ இருக்கிறாய் என்று.அந்த நேரத்தில் சமணர் கோயிலில் அவருக்கு ஒரு விடுதலை கிடைக்கிறது.
“அறியாமையை வழிபடுகிறவர்கள் இருளில் ஆழ்கிறார்கள்”என்றார்.
”அறிவை வழிபடுகிறவர்கள் இன்னமும் ஆழ்ந்த இருளில்” என்றார். ”உங்கள் ஈசோபநிஷதம்”
மழைத்துளிக”

 

 

“நாகப் படம்” இத்தொகுப்பில் உள்ள எல்லா கதைகளை விடவும் இதுவே தனித்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன்.ஒரு கலைஞன் தன் கலைக்காக தன்னை மட்டும் அல்ல தன்னை சார்ந்தவற்றையும் இழந்து ஒரு படைப்பை தருகிறான்.நிர்வாணம் சிறந்த மருத்துவமாக கருதப்படுகிறது.மனித உடலை தவிர உலகில் அழகான விஷயம் கிடையாது. மனிதனை மட்டுமே கடவுள் அவரது சாயலில் படைத்தார். அப்படி படைக்கப்பட்ட உடலை ஒரு கலையாக பார்த்து தன்னை அதில் முழுமையாக அற்பனிப்பவர்கள் ஓவியர்களும் , சிற்பிகளும் மட்டுமே.கோவில்களில் காணப்படும் சிற்பங்கள் அனைத்திலும் கலைஞனின் ஆத்மார்த்த அற்பனிப்பும் உழைப்பும் வெளிப்படும். கோவில்களில் காணப்படும் சிற்பங்களில் பெரும்பாலும் பெண் உருவச்சிலையே காணப்படுகிறது.ஆனால் கிரேக்க வீதிகளில் காணப்படும் சிலைகளின் அதிகபட்ச அழகு ஆணின் உடலில்தான் வெளிப்படுகிறது.இக்கதையில் குழந்தை பருவத்தில் ஒருவன் வீட்டின் வறுமை காரணமாக தன் அம்மாவாள் ஓவியர் ஒருவரிடம் விட்டு செல்லப்படுகிறான்.பிறகு திருமண பருவத்தை எட்டியதும் அவன் அம்மாவாள் பெண் பார்க்கப்பட்டு குருவிடம் போராடி சம்மதம் வாங்குகிறாள் பெண் பார்க்க குரு தானும் வருவதாக கூறுகிறார் அங்கு பெண்ணை பார்த்ததும் ஆசான் திகைத்து நின்றுவிட்டார்,”மகனே இவளே உனது பெண் என்கிறார்.பிறகு திருமணம் நடக்கிறது.அவன் தன் சொந்த ஊருக்கு வந்த பின் குருவின் வாழ்வு தடம் மாறுகிறது அவர் இறக்கும் தருவாயில் தன் சிஷ்யன் வீட்டின் முன்பு வந்து இருக்கிறார்.தோற்றத்தில் முற்றிலும் வேறொருவராக அவர் தன் சிஷ்யனிடம் கடைசியாக நான் ஒரே ஒருமுறை உன் மனைவியைப் படம் வரைந்து கொள்கிறேன் என்றும் அது தன்னை குணப்படுத்தும் என்றும் கூறுகிறார் அவன் முதலில் அதிர்ந்து பேச்சிழந்து போனாலும் சம்மதிக்கிறான் அதன் பிறகு அவர் மூன்று ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்ததாகவும் நிறைய வரைந்தார் எனவும் கதை முடிகிறது

 

“ஆடை” கதையில் இடதுசாரிதுவ மரபில் இருந்து வந்த ஒரு கேரளத்து பெண் புரட்சி பேசும் சித்திக்கை காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள்.இருவருக்கும் குழந்தை பிறக்கிறது வேலை நிமித்தமாக இஸ்லாமிய நாட்டுக்கு செல்கிறான் அங்கு போனதும் சித்திக் கலாவை படுதா போடுமாறு கட்டாயப்படுத்துகிறான் அவன் சொல்வதை இவள் கேட்க மறுக்கவே அவள் நடத்தை கெட்டவள் குழந்தை அவனுக்கு பிறக்கவில்லை என்று அவளை பழிச்சொல்கிறான்.அதன் பிறகு இருவரும் பிரிந்துவிடுகின்றனர்.பிறகு ஒரு பயணத்தில் கலா கிருஷ்ணனை சந்திக்கிறாள் கிருஷ்ணன் புத்தக வாசிப்பாளனாக இருக்கிறான் இருவரும் புத்தகங்களை பற்றி கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர் பிறகு ஒருநாள் கலாவின் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போகின்றது கிருஷ்ணன் உதவி செய்ய மருத்துவமனைக்கு செல்கிறான். மருத்துவமனையில் கலாவின் அப்பா அவளை பற்றி தவறுதலாக சொல்லவும் கிருஷ்ணன் என்ன செய்வது என்று பதட்டத்துடன் நீண்ட நாட்களுக்கு பிறகு புகை பிடிக்கிறான். கள்ளுக்குடிக்கலாம் என்றும் நினைக்கிறான்.உடலை அதிகம் தாண்டாத உறவாக மட்டுமே இருக்கும் என்றும் புத்தகங்களை பற்றி மட்டுமே பேசிக் பிரிந்துவிடும் ஒரு உறவாக இருக்கும் என்று கிருஷணன் நினைக்கிறான்.கலா தன் குழந்தையை பற்றி சொல்லும் போது பண உதவி கேட்டுவிடுவாள் என்ற அச்சத்தில் கிருஷ்ணன் அதை நீயும் உன் குடும்பமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறான்.அதற்கு கலா பண உதவி உங்களிடம் கேட்கவில்லை அறிவுரை தான் கேட்டேன் என்று சொன்னதும் கிருஷ்ணனுக்கு குற்றணர்வு ஏற்படுகிறது. அவன் பேருந்தில் வரும்போது ஒரு கனவு காண்கிறான் அதில் கிருஷ்ணனின் ஆடையை அணிந்து கொள்ளுமாறு கலா தருகிறாள். இங்கு “ஆடை” என்பது எதையும் எதிர்பார்க்காமல் இந்த சமூகத்துக்கு எது தேவையோ அதை பொருட்படுத்தாமல் உதவ வந்த கிருஷ்ணன் இப்போது அதையெல்லாம் அணிந்து கொண்டு போங்கள் என்று கலா சொல்வதாக பொருள்படுகிறது.ஒரு பெண் தன் சுயத்தை இழந்து பழிச்சுமத்தப்பட்டு குடும்பத்திலும் சமூகத்திலும் வேசியாக, துரோகியாக,நக்சல்லாக,
பார்க்கப்படுகிறாள் அவள் உணர்வு நசுக்கப்படுகிறது.

 

“ஜெயமோகனின் கள்ளக்காதலி” தலைப்பே பகடையாக ஆரம்பிக்கின்றதே என்று எனக்கு தோன்றியது. மணி ஒரு கதைச்சொல்லி ஞாபக மறதி அவர் வீட்டின் முன் ஒருநாள் ஒரு பெண் வந்து நிற்கிறாள் யார் என்று மணி கேட்க ஜெயமோகன் என்று அந்த பெண் கூறுகிறாள் யாரு எழுத்தாளர் ஜெயமோகனா என்று கேட்கிறார் இல்லை உங்கள் நண்பர் ஜெயமோகன் என்று சொன்னதும் இருபது வருடங்கள் முன்பு தன் நண்பர் ஜெயமோகனை மணிக்கு நினைவு வருகிறது.அவர் ஒரு போதகராய் உள்ளார் மணி ஜெயமோகனுக்கு புத்தகங்கள் கொடுப்பது உண்டு அதனால் அவருக்கு புத்தகங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது. ஜெயமோகனுக்கு ஒரு பெண் துணை ஏற்படுகிறது அவருக்கு இவள் தான் அனைத்தும் செய்கிறாள் இவள் தான் அவரை புரிந்து கொண்டதாகவும் நினைக்கிறார் இது ஜெயமோகன் மனைவிக்கு தெரியவரவே கள்ள உறவு என்று அடித்து விரட்டப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் அங்கு அவருக்கு துணையாக இருக்கும் பெண் அழுவதை பார்த்து முகம் சுழிக்கிறார் ஏனெனில் அவரை பொறுத்தமட்டில் பெண்களின் கண்ணீர் பொய்யானவை “ஏவாளின் கண்ணீர்!” என்று திரும்பிக்கொள்கிறார்.பிறகு மணி கதை ஒன்றை வாசித்து காண்பிக்கிறார் அதில் ஒரு ஆண் தன் பெண்ணை ஒவ்வொரு அங்கமாக கை வைத்து அவள் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளை கூட நேசிக்கிறேன் அவற்றை புலர்மழையைப் போல பரிசுத்தமானது என்று கூறுகிறான்.இவற்றை கேட்டதும் போதகருக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது அந்த பெண்ணின் அனைத்து தீமைகளையும் எல்லா பிரச்சனைகளுடனும் அவளை ஏற்றுக்கொள்கிறார்.பிறகு ஜெயமோகன் தன் கள்ளகாதலியுடன் வடமாநிலம் சென்று ஊழியம் செய்கிறார்.அங்கு சென்றதும் மணிக்கு கடிதம் எழுதுகிறார் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருப்பதாக

 

 

திகிரி போகன் சங்கரின் மூன்றாவது கதைத்தொகுப்பு ஒரு ஆண்ணின் பார்வையில் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வலிகள், சொல்லப்பட்டிருக்கிறது.

இவருக்குள் இருக்கும் கவிஞன் கதைகளின் இடை இடையே வெளிப்படும் சில வரிகளில் தெரிகிறது. அவை வர்ணித்து காட்சிபடுத்தும் விதம் அழகு. தன் மீது சுமத்தப்படும் பொறுப்புகளிலிருந்தும் கடமைகளிலுந்தும் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்வில் இருந்து பெண்கள் விலகிவிடாமல் போராடுகின்றனர் போகனின் கதைகளில் வரும் பெண்கள்.

ஒரு சிறுகதை தொகுப்பு என்பது ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கதைக்கரு கொண்டு ஒரு கதையில் இருந்து அடுத்த கதைக்கு செல்லும் போது அது முற்றிலும் வேறொரு உலகம் வேறொரு அனுபவத்தையும், மனநிலையும் தந்தால், அது பன்முக வாசிப்பு சாதியத்தைக் கூட்டும். இத்தொகுப்பிலுள்ள கதைகளின் கருக்கள் ஒரே வகையில் இருப்பதால் என் எதிர்பார்ப்பை இத்தொகுப்பு பூரணப்படுத்தவும் இல்லை. ஆடை,முகம்,தீட்டு, சிறுத்தை நடை போன்ற கதைகளில் வரும் கதைமாந்தர்கள் கதை சொல்லப்படும் விதம் வேறாக இருந்தாலும் பெண்களின் வலி ஒரே விதமாக சொல்லப்படுகின்றது. பெண் வலியை அனுபவிக்கிறாள் அதற்கு காரணம். ஆண் என்பதே மையக் கருத்து. இத்தொகுப்பின் தலைப்பு கதையான திகிரி கதையும் , நாகப்படம் கதையும் மட்டுமே வேறொரு உலகத்தையும் கதை கருவையும் கொண்டுள்ளது.

ஜார் ஒழிக சிறுகதை தொகுப்பு குறித்து பிரபாகரன் சண்முகநாதன் கட்டுரை

$
0
0

எல்லா மதிப்பீடுகளுக்குமான மறு மதிப்பீடு தான் காலத்தின் தேவை”

நீட்சே

சாம்ராஜின் மொழி அலங்காரங்கள் அற்றது. அதன் இயல்பே அதன் அழகு. சொற்களின் எதார்த்த கூட்டிசைவு படைப்போடு ஒன்ற வைத்துவிடுகிறது. முதல் வரிகளே அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட களத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் நோக்குடன் காத்திருப்பவை. மரியபுஷ்பம் அவசர அவசரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள்’ என்றோ ‘கணேசனோடு எப்போது அந்த வார்த்தை ஒட்டிக் கொண்டது என கணேசனுக்கே தெரியாது’ என்றோ தொடங்கும் வரிகள் ஊருக்கு வழி சொல்லும் அடையாளங்கள் போல கதைக்கான திறவை முன்வைப்பன.

காட்சிகளாக விரியும் சொற்கள் திடமான வரைவுக்குள் கதையை நகர்த்துகிறது. அந்த வரைவு புகுத்தப்பட்டதாக இல்லாமல் அதன் போக்கிலேயே தீர்மானிக்கப்பட்டதாக அமைவது நம்பகத்தன்மை உடையதாக்குகிறது.

முதல் கதை குள்ளன் பினு, பினுவின் அறிமுகத்திற்கு அவன் காலை ஊன்ற வாகாக, வண்டியை நிறுத்த இடம் தேடுவது நீரோட்டம் பார்க்கிறவர்களை ஒத்து இருக்கும் என்ற ஒப்பீடு தெளிவான அறிமுகத்தை ஏற்படுத்தும். அவனுடைய உயரமான தாத்தா, உயரமான பேபி கொச்சம்மாளை கல்யாணம் செய்து உயரமான மகன்களை மகள்களை ஈன்றெடுக்கிறார். அந்த குடும்பத்திலேயே குள்ளனான பினு தாத்தாவிடமிருந்து தந்தையிடமிருந்து உறவினர்களிடமிருந்தும் எவ்வித அன்பையும் பெறவில்லை. தனியனாகவே திரியும் அவலம் அவனுக்கு.

தந்தைக்கு பிறகு அவர் நடத்திய மெஸ் பார்த்துக் கொள்ளும் பொறுப்புக்கு வருகிறான். அவனது அக்காவின் மகளைக் கேலி செய்யும் இளைஞர்களை எதிர்க்க துணியும் போது தன்னுடைய உயரமே சண்டையில் சாதகமாகிறது. உயரத்தால் அல்லாது மனதில் தான் உயர்ந்துவிட்டதாக நம்புகிறான். அதுவரை அவனை கூட்டிச் செல்ல வரும் உமரின் ஆட்டோவில், அதன் பிறகு வராமல் நடந்தே செல்ல தொடங்குகிறான். இறுதியில் கதை இவ்வரியோடு முடிகிறது, அவனது நிழல் நீளமாய் ஆற்றின் நடுப்பகுதி வரை நீண்டு தெரிய, அதிர்ந்து சட்டென்று பின்வாங்கினான் பினு ’. உயரத்தைக் கண்டு பயம் கொள்ளுகிற புனைவு கதையை இறுதி செய்கிறது.

காட்சிகளாக விரியும் கதைகளில் காலம் இரண்டொரு வரிகளில் கடந்துவிடுகின்றன. அவையும் காற்புள்ளிக்கு பிறகு இன்னொரு பரிணாமத்தை காட்டிவிடுகின்றன.

இந்த கட்டுரை ஆரம்பித்ததில் இருந்து ஒரு சின்ன நெருடல் எனக்குள் இருந்துக் கொண்டே இருக்கிறது. ரொம்ப சீரியஸாக கட்டுரை பயணப்படுகிறதோ என்று. இதற்கு நேர் எதிரான கட்டுடைக்கப்பட்ட எளிய மொழியில் தான் இக்கதைகள். மனிதர்களின் இயல்பான குறும்பை, கேலியை, பகடியை தன்னுடைய தூண்களாக கொண்ட தொகுப்பை விமர்சிக்கும் போது மட்டும் இறுக்கமான மொழியாக இருந்தா எப்படி?

வடிவேலுவை ஏன் கொண்டாடுகிறோம் என யோசித்து பார்த்தால் அவருடைய மறுக்க முடியாத அடையாளமாக மதுரக்காரன் என்கிற தொனி இருப்பதை சொல்ல முடியும். சாம்ராஜ்க்கும் அது பொருந்தும். ஏறத்தாழ மதுரையோடு நெருங்கிய தொடர்பு கொண்ட யாரும் சொல்லிவிட முடியும், மதுரை எவ்வளவு கொண்டாட்டமான நகரம் என்று. அதே நேரத்தில் பிடிவாதம் கொண்ட இடமும் கூட.

சாம்ராஜின் கதைகள் ஒரு எளிய கதைசொல்லியை அறிமுகப்படுத்துகிறது. கதைசொல்லி கதைகளைச் சொல்லி சிரிக்கிறான், கூடவே அழுகிறான், கடக்க முடியாத இடத்தை ‘ச்சைஇதெல்லாம் பெருசா’ என உதாசீனப்படுத்தி அழைத்துச் செல்கிறான். அவன் மொழிக்கு பழகிய நாம் அவனோடு சென்ற விட்ட நம்மை, வெகு நேரமாக தேடிக் கொண்டிருக்கிறோம்.

சாமின் கதைகள் மனிதர்களைச் சுற்றியது. அவர்களின் உணர்வுகளை சுற்றியது. குள்ளனான பினுவிற்கு உயரமே அவனுடைய சிக்கல். முத்திருளாண்டிக்கு வாக்கப்பட்டு வரும் செவ்வாக்கியத்திற்கு கணவனுடன் எதிர்பார்த்த தாம்பத்திய உறவு இல்லாது போவது சிக்கல். பரமேஸ்வரிக்கு மாமனார், அச்சுதன் நாயருக்கு தன்னுடைய கேப்டன் கனவு, லக்ஷ்மியக்காவிற்கு விரக்தி, மல்லிகாவிற்கு ஒரே சந்தோசமான சினிமா இல்லாது போனது, மரியபுஷ்பத்தின் கணவனான சகாயத்திற்கு மனைவியின் மீதான சந்தேகம் – என உழலும் மனிதர்களை நாம் இயல்பான உலகில் எல்லா மூலைகளிலும் சந்திக்க நேரிடும். இவர்கள் தங்களுக்கான வாழ்வின் மீதான பிடித்தத்தை பழிவாங்கும், நிறைவேற்றும், முற்றிலுமாக துறந்து விடும் முடிவுகள் வழியாக உறுதி செய்கின்றனர்.

இன்னொரு பார்வையில் தோழர்கள், கலகம், புரட்சி, அரசியல் குறித்த பகடிகளைக் குறிப்பிடலாம். அதிலும் மனிதர்கள் தங்களுக்கான வாழ்க்கை உறுதிப்பாட்டிற்கே அரசியலை அணுகுகின்றனர்.

பகடியின் உச்சபட்சத்தை தரிசிக்க ‘தொழில் புரட்சி’ ‘மருள்’ ‘ஜார் ஒழிக’ கதைகளைக் குறிப்பிடலாம்.

மிக எளிமையானது தான் படைப்பு உருவாக்கத்தில் சிக்கலானதும் கூட. பகடியை அவ்வகையில் சேர்க்கலாம்.

மத்திய அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பைக் காட்ட திட்டமிடும் தோழர்கள் சின்ன வட்டம் தான் ஆறு பேர். அதிலும் ஒருவர் தன் தங்கைக்கு சொந்த சாதியில் மாப்பிள்ளை பார்க்க போவதை மறைத்து விட்டு துக்க நிகழ்விற்கு போவதாக கூறிச் செல்பவர். மூன்று குழு. கண்காணிப்பு, செயலாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு. ஒரு நாய் இருந்ததை கவனிக்க மறந்ததால் அத்திட்டமே முடங்குகிறது. வந்தவய்ங்க கொளுத்தி விட்டுட்டு போயிருந்தவாச்சும் புது ஜீப் கிடைச்சுருக்கும் என புலம்பும் ஆபிசர், அவரிடம் சாப்பாடு பாக்கி வாங்க காத்து நிற்கும் தள்ளு வண்டி கடைக்காரர் என கதை கையாண்டிருக்கும் பாத்திரங்கள் உண்மைக்கு நெருக்கமானவை. தாங்கள் நம்பும் அரசியல் பாதையை கொண்டிருப்பவர்களின் செயல்களைப் பகடி செய்யும் கதைகளில் வெகுளித்தனமும் ஏமாற்றமும் சேர்ந்தே தொனிக்கிறது. புரட்சி வந்துக் கொண்டிருக்கிறது என கனவுகளை வளர்த்துக் கொண்டவர்கள் அவை பொய்த்து போவதை அறியும் போது விரக்தி அடைகின்றனர். அதன் மீதான விமர்சனத்தை பகடிகள் வழியாக வெளிப்படுத்துகின்றனர். பின்னணியில் ஆற்றாமை இருப்பதை யாரும் மறுக்க இயலாது.

எழுதப்படாத தியாகங்கள் எத்தனையோ இடதுசாரிய அரசியலில் அடையாளப்படுத்தபடாது கரைந்திருக்கின்றன. செயல்பாடுகளின் நோக்கங்கள் மறைந்து நடைமுறைகள் இறுகும் போது சடங்குகள் போலவே அலுப்பு வெளிப்பட்டு விடுகிறது.

பிராச்சாரத்திற்கு பயன்படாத படைப்புகள் வெகு அரிதாகவே காணக் கிடைக்கும் இடதுசாரிய பரப்பில் சாம்ராஜ் முதல் அடிகளை முன்வைக்கிறார். பகடி என்பதுவும் விமர்சனம் தான். எதிர் கருத்தியல்களில் இருந்து வரும் விமர்சனங்களை விட இவை ஆற்றல் நிரம்பியவை.

மருள் என்கிற கதை ஒட்டுமொத்த கட்டுக்கோப்பான நிறுவனத்தை ஒரே நாளில் குலைத்து போடும் குறும்புக்கார அருளைப் பற்றி சொல்வது. கலகம் அப்படியானது தான் என நிறுவ முயல்கிற கதை. கொஞ்சம் கூட சிரிக்காது இந்த கதையைக் கடப்பவர்கள் சொற்பம். அதே போல ஜார் ஒழிக கதையும். பெயிண்டர் கணேசனுக்கு ங்கொம்மலாக்க என்ற வார்த்தை இல்லது ஒரு வரியைப் பேச தெரியாது. தோழர்களோடு இணைந்து பயணிக்கிற போது அவனை அறியாமலேயே உருவாகும் மூர்த்தியுடனான தோழமை அந்த வார்த்தையை மறக்க செய்கிறது. விநாயகர் சிலையோடு இஸ்லாமிய தெருக்களில் நுழையும் கூட்டத்தினரை எதிர்கொள்ளும் போது மூர்த்தி அதே வார்த்தையே உச்சரிக்க நேருகிறது. மூர்த்தி கணேசனிடம் நீங்க என்னை மன்னிச்சு தான் ஆகணும் என உரக்க சொல்லுவதோடு கதை நிறைவு பெறும்.

சாம்ராஜின் கதைகளில் வரும் தோழர்கள் மிக சிறு குழுக்களாக இயங்கும் எம்.எல். இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பெரிய பொருளாதார பலமோ அல்லது ஆள் பலமோ இருப்பதில்லை. இடதுசாரிய தோழர்களுக்கே இல்லாத போது, அதை விட குறைவு இவர்கள் பலம். ஆனாலும் சமூகத்தில் மாற்றங்களுக்காகவும் புரட்சி வந்துவிடும் என இன்றும் நம்புகிற தோழர்களின் வட்டத்தை நான் அறிவேன். அவற்றோடு சாம்ராஜ் முன்வைக்கும் பகடி நுண்மையான விமர்சனமே ஒழிய குற்றச்சாட்டாக இருப்பதில்லை.

அவருடைய மொழி ஆளுகை பல இடங்களில் ஒளிருவதைக் காண முடியும். செவ்வாக்கியம் தன் கணவன் தொடுப்பு வைத்திருப்பதை அறிந்தும் பொறுந்திருந்தவள், பத்து வயது சிறுமியை சீண்டும் கணவனைக் கண்ட பிறகு அவனுக்கு தான் நம்பும் தண்டனையை அளிக்க துணிகிறாள். தன் தோழி சொர்ணத்தோடு மலையாள மாந்தீரிக பெண் ஒருத்தியிடம் செல்கிறாள். அந்த காட்சி இப்படியாக விரிகிறது, நடுக்கூடத்தில் ஒரு சிறிய பீடத்தின் மேல் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண். தலைமுடி ஆலமரம் விழு போலிருந்தது. படங்களும் தாமிரத் தகடுகளும் மின்ன, முன்னே ஒரு ஆறு திரி விளக்கு பதக் பதக் என துடித்துக் கொண்டிருந்தது.” என்ன செய்யணும் என அந்த பெண் கேட்கிறாள், சுடர் பதறியது’ தனக்கு பயன்படாதது யாருக்கும் பயன்படக் கூடாது என செவ்வாக்கியம் சொல்கிறாள். அதன் பிறகு கணவன் நடுங்கத் தொடங்கி விடுகிறான்.

கரண்ட் முழுநாளும் இருந்தால் சகட சகட சகட’ என நூற்பாலை இயந்திர ஒலியையும் , ‘கோரிப்பாளையம் கண்மாயில் தண்ணி கெத்து கெத்தென கிடந்தது’, என நில வர்ணிப்பையும் காட்டும் மொழி அவ்விடங்களிற்கு உயிர் கொடுக்கிறது.

மிக குறிப்பாக அவருடைய கதைகளின் பெண்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்கிற இடங்கள் உண்டு. அதில் மிக உறுதியாக நிற்கிற மனப்பான்மை உறுதியுடைவர்களாக காட்டுகிறது. மூவிலேண்ட் கதையில் மல்லிகாவிற்கு சினிமா என்றால் உயிர். சினிமா ஆப்ரேட்டர் உடன் காதல் வயப்படுகிறாள். அண்ணநும் அம்மாவும் எதிர்க்க வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். அவன் மல்லிகாவை ஒரு குடியில் வைக்கிறான்.பகலெல்லாம் தனியாக இருக்கிறாள். சூரியன் கோழிக் குஞ்சுகள் மீதேறி அவள் மீதேறி வீட்டின் மீதேறி மாலையில் தூரத்து மலையில் போய் மறையும்’ அவளை குடும்பத்தினர் வந்து மீட்டு சென்று கல்யாணம் செய்து வைக்கின்றனர். கணவன் சினிமாவிற்கு போகக் கூடாது என்கிறான். மகள் பிறக்கிறாள். கானவன் பார்க்க வர மறுக்கிறான். பஞ்சாயத்தில் இவள் படத்திற்கு போகவே கூடாது என சத்தியம் வாங்குகிறான். அதன் பிறகு வருடக்கணக்காக சினிமாவைப் பார்க்க போகவே இல்லை அவள். இந்த பிடிவாதம் பெண்களுக்கே சாத்தியம். வைராக்கியம். தன்னை தானே அதிலிருந்து விலக்கிக் கொள்வது என்றென்றைக்குமாக.

மீஎதார்த்த முடிவுகளில் சாம்ராஜின் சில கதைகள் முடிக்கப்படுகிறது. குள்ளன் பினுவின் மேலே சொன்ன வரி. கப்பல் என்கிற கதையில் கேப்டன்களால் எப்போதும் கீழேயே பார்க்கப்பட்ட பொறியாளர் அச்சுதன் நாயர் கப்பல் போன்ற பிரம்மாண்டமான வீட்டை கடற்கரையில் நிர்மாணிக்கிறார். அந்த இடத்தில் இருந்த குடிகளை அப்புறப்படுத்துகின்றனர். அங்கு வாழ்ந்த நாயொன்று மட்டும் முன்னர் குடிசைகள் இருந்ததற்கு சாட்சியாக இருந்தது. அதன் பார்வையில், நாய் தண்ணீரில் தெரியும் கப்பல் வீட்டின் தலைகீழ் பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென ஆவேசமாய் குலைத்தது. பிறகு ஆச்சரியத்துடன் நிமிர்ந்து வீட்டைப் பார்க்க, கப்பல் வீடு தண்ணீரில் கடல் இருக்கும் திசை நோக்கி மெதுவாய் மிதந்து போய்க் கொண்டிருந்தது’. தன்னை மதிக்காத கேப்டன் போலவே தன்னால் மதிக்கப்படாத மக்கள் இருந்தால் தான் தானும் கேப்டன் என்பது அதிகாரத்தின் படிமட்டங்களைக் காட்டுகிறது. தாழ்வு இருந்தால் தான் உயரம் தெரியும்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் காட்சி போல் லக்ஷ்மியாக்கவோடு போன தன்ராஜ் படுக்கையில் இறந்து போகிறான். அதோடு லக்ஷ்மி மொட்டையடித்து அதுவரையில் இருந்த எல்லாவற்றையும் துறந்து விட்டு குழந்தைகளுக்கு ஆசிர்வதிக்க தொடங்குகிறாள். காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறது.

சாம்ராஜின் கதைகளில் போலி கிடையாது எங்குமே. எதார்த்த உலகின் கோடிக்கணக்கான கதைகளில் சிலவற்றை மட்டுமே பதிவு செய்திருக்கிறார். இழையோடும் மெல்லிய பகடியும், எளிமையும் கதைகளை வலிமை உடையனவாக்குகிறது. கதை மாந்தர்கள் வெகு அரிதாகவே உரையாடுகின்றனர். கதைசொல்லியே பேசிவிடுகிறான். தொழில் புரட்சி போன்ற கதைகள் நாவலாக மாறினால் தமிழின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கும்.

கதைகளின் அடித்தளமே அவை காலந்தோறும் புதுபுது பரிணாமங்களைக் காட்சிப்படுத்துவதே. ஒவ்வொரு நேரத்திலும் எழுகிற படைப்புகள் அதற்கு முன்பு திகழ்ந்தவற்றை விமர்சித்தே தன்னை செம்மைப்படுத்திக் கொள்கிறது. சாம்ராஜின் கதைகள் எது போலவும் இல்லாதது அதன் மீதான ஈர்ப்புக்கு காரணமாகிறது. மற்றும் முந்தைய படைப்புகளில் இருந்து தன்னை செம்மை செய்துக் கொள்கிறது.

வடிவேலு பிரதி செய்ய முடியாதவர். சாம்ராஜும் அது போலத் தான்.

சுற்றுலா –ராம்பிரசாத் சிறுகதை

$
0
0

நான் ஒரு முறை ஆழ மூச்சிழுத்து விட்டேன். அது எனக்கு தேவையே இல்லை எனினும், நானே என்னை ஒரு அந்நிய மண்ணில் வேறுபடுத்திக் காட்ட விரும்பவில்லை என்பதால் அதை அவ்வப்போது நேரம் பார்த்துச் செய்ய வேண்டி இருந்தது.

பிறகு நான் அந்த பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தை அண்டினேன். அங்கு ஊரே கூடி இருந்தது. ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்தது அந்தப் பள்ளிக்கூடம். கடந்து போகும் மேகங்கள் அந்த மலையின் இடுப்பைத்தான் தொட முடிந்தது. அத்தனை உயரம் அந்த மலை. இருப்பினும் ஜவ்வாது மலையின் உச்சி பனிக்குல்லாய் உடுத்தியிருக்கவில்லை. இந்த கிரகத்தின் இந்தப்பகுதி பூமத்திய ரேகைக்கு வெகு கீழே அமைந்திருப்பதால் அப்படி இருக்கலாமென்று தோன்றியது.

இன்னும் இரவு கனிந்திருக்கவில்லை. நிலாவொளி அந்த இடத்தில் வெளிச்சமூட்டியிருந்தது. விளக்கு வெளிச்சப்புள்ளிகளால் பண்டிகைக்கென அலங்காரப்படுத்தப்பட்டிருந்த அந்த இடம் ஒரு அழகான ஆயில் பெயிண்டிங் போலிருந்தது. மேடை நாடகம் துவங்க இன்னும் நேரமிருந்தது. அங்கே கூடியிருந்தவர்களை பொழுதுபோக்குவிக்கும் நோக்கில் கரகாட்டம் என்றொரு கலாச்சார நடனம் நடந்தேறிக்கொண்டிருந்தது.

அங்கே கூடியிருந்த குழந்தைகளை, அளவில் அத்தனை பெரியதாக இல்லாத ரங்கராட்டினம் ஒன்று மேலும் கீழுமாக ஒரு வட்டப்பாதையில் நகர்ந்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தது. சக்கர வண்டிகளில் அமைக்கப்பட்டிருந்த நடமாடும் கடைகளில் கையால் செய்யப்பட்ட இனிப்புகள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவைகள் சற்றே வினோதமான கடைகள். நான்கு மறுங்கிலும் சைக்கிள் சக்கரங்களால் தாங்கி நிறுத்தப்பட்டிருக்கும் இரும்புக்கூடொன்றின் மேல் மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட தட்டி அது. அதன் மீது லாந்தர் ஒன்று வெளிச்சம் கூட்ட வைக்கப்பட்டிருந்தது. இந்த லாந்தர்களிலிருந்து வெளிப்படும் குறைவான வெளிச்சம் அந்த ஆரோக்கியமற்ற இனிப்புகளை விற்றுவிட உதவியது. நான் அந்த உணவுகளைச்சுற்றிலும் நிறைய ஈக்கள் இருக்கப் பார்த்தேன். ஆயினும், மெல்லிய வலை போன்ற துணியால் செய்யப்பட்ட குடையால் அந்த இனிப்புகள் ஈக்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தன.

நான் அந்த கடைகளினூடே, அவைகளைச்சுற்றிலும் சிறு சிறு குழுக்களாய் நின்றுகொண்டிருந்த மக்களைக் கடந்து நடந்தேன். நான் பூமி ஆண்கள் குறித்து கேள்வியுற்றிருக்கிறேன். என் போன்றவர்களுக்கு பூமி கிரகம் ஒரு நல்ல சுற்றுலாத்தளம். என் போன்று சிலர் தெற்காசிய பகுதிகளில் சுற்றுலா பயணப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் ரஷ்ஷியாவுக்கும் கூட சென்றிருக்கிறார்கள். பூமி மனிதர்கள் அழகானவர்கள் என்று கேள்வியுற்றிருக்கிறேன். இந்த பூமி கிரகம் சிலிக்கானால் உருவானது, இங்குள்ள மனிதர்கள் கார்பனால் உருவானவர்கள்.

சில காரணங்களால், பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட பிற கிரகங்களில் உள்ள உயிர்களுள் எதுவும் பூமி மனிதர்கள் போல் அழகானவைகளாக இல்லை. இது தான் பிற கிரகங்களிலிருந்து பூமி கிரகத்தை பிரத்தியேகமானதாக, தனிச்சிறப்புமிக்கதாக ஆக்குகிறது. அதனால் தான் எங்களைப்போன்றவர்களுக்கு பூமி கிரகம் ஆகச்சிறந்த சுற்றுலாத் தளமாகவும் இருக்கிறது.

தெற்காசியாவின் இந்தப்பகுதியில் ஆண்கள் சற்று கருப்பாக இருந்தாலும், நிலாவின் சன்னமான ஒளியில் அவர்களின் தோல் மின்னுகிறது. நான் பூமிக்கு வருவதற்கு முன்பே இவர்களை பார்த்திருக்கிறேன். எங்கள் கிரகத்தில், சில குறிப்பிட்ட சமூக இடங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பிற கிரகங்களுக்கு பயணிக்க முடியும். அவர்களே பூமிக்கு வந்து, பூமியின் சுகங்களை அனுபவித்துவிட்டு திரும்பியிருக்கின்றனர். சிலர் ஒரு படி மேலே போய், தங்கள் மரபணுக்களைக் கொண்டு பூமிப்பெண்களின் மரபணுக்களை வைத்து கலப்பினங்களை உருவாக்க முயன்றிருக்கின்றனர். அந்தக் குழந்தைகள் பூமி கிரகத்தின் தன்மைகளோடு தங்களை பொருத்திக்கொள்ள இயலாமல் மரணித்தும் இருக்கின்றன. அவைகளை பூமியிலேயே புதைத்துவிட்டு அவர்கள் திரும்பியுமிருக்கிறார்கள்.

கருப்புச் சந்தையில் இது போன்ற அனுபவங்களை நாங்கள் பெற்று, பார்த்து ரசித்திருக்கிறோம். அவைகளிலிருந்து பூமியில் மனிதர்கள் வெவ்வேறு நிறங்களில் இருக்கிறார்கள் என்று கண்டுகொண்டோம். அதிலும் பூமிப் பெண்களின் தேகம் அத்தனை வசீகரமாக இருக்கிறது. பூமிப்பெண்ணின் குலுங்கும் ஸ்தனங்களில் எந்த கிரகவாசியும் சொக்கிப்போவான். கார்பன் சார்ந்த சிலிக்கானை அடிப்படையாகக்கொண்ட உடல்கள் பிரபஞ்சத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பினும் பூமி கிரகத்தில் இருப்பது போல் வேறெங்கும் இத்தனை வசீகரமாக இல்லை.

எனக்கு குறிப்பாக கருப்பான, அதே நேரம் புஜங்கள் உயர்ந்த, மார்பு விடைத்த ஆண்களைத்தான் பிடிக்கிறது.

பூமி கிரகத்திற்கு வர திட்டமிடுகையில் தெற்காசியா, தெற்காப்பிரிக்கா இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டி இருந்தது. நான் தெற்காசியாவை தேர்வு செய்தேன். அதற்கு காரணம் இருந்தது. இங்குதான் நறுமணப்பொருட்களும், மூலிகைகளும் விளையக்கூடிய மண் இருந்தது. ஆம். பூமிக் கிரகத்தில் எல்லாமும் எல்லா இடத்திலும் விளைவதில்லையாம். நான் இந்த மூலிகைகள் குறித்து கேள்வியுற்றிருக்கிறேன். இந்த மூலிகைகள் இந்த கிரகத்து ஜீவராசிகளை என்னவெல்லாம் செய்கின்றன என்பதை பார்க்க ஆர்வமாக இருந்தேன்.

எனக்கு பூமி மனிதர்களிடம் மிகவும் பிடித்த விஷயம், அவர்களின் அப்பாவித்தனம் தான். நூற்றாண்டுகளாக நாங்கள் அவர்களை சந்திக்க தொடர்ந்து பூமிக்கு வருகிறோம், ஆயினும் அவர்களுக்கு நாங்கள் இன்னமும் பேய்கள் தான். பிசாசு, பிடாரி என்று பல்வேறு பெயர்களை எங்களுக்கு வைத்திருக்கிறார்கள் அவர்கள். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள அனுப்பிய அத்தனை செய்திகளையும் நாங்கள் புறக்கணித்திருக்கிறோம். நூற்றுக்கு தொண்ணூறு சதவிகித பூமி மனிதர்களுக்கு இன்னொரு கிரகம் இருக்கலாம் என்பது குறித்த எந்த பிரஞையும் இல்லை. அவர்கள் பெண்களுடனும், மதுவுடனுமே தங்கள் காலத்தை போக்குபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். அது எப்படி அவர்களுக்கு சாத்தியமாகிறது என்று நான் வியந்திருக்கிறேன்.

அவர்களின் தர்க்கம் என்னானது? அவர்களின் எதையும் தெரிந்துகொள்ளத்தூண்டும் ஆர்வம் என்னானது?

எங்களைப்பற்றி பூமி கிரகத்தில் யாருக்கும் தெரியவில்லை என்பது முழுக்க உண்மையும் இல்லை. சிலருக்கு எங்கள் மேல் சந்தேகங்கள் இருக்கிறது. சிலர் எங்களை பார்த்தும் இருக்கிறார்கள். அதாவது, எங்களை என்றால், எங்களை அல்ல, எங்கள் நிழல்களை. ஆனால் அவைகள் எல்லாம் ஐயங்கள் தான். ஐயங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவர்களுக்கு இரவுகளில் வரும் பற்பல கனவுகளுக்கும் ஐயங்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கப்போவதில்லை. நாங்கள் எதையுமே செய்ய வேண்டியதில்லை. அவர்களே அவர்களுக்கு தெரிந்ததை வைத்து தங்களைத் தாங்களே குழப்பிக்கொள்வார்கள். ஆகையால், அவர்களை அவர்களின் ஐயங்களை நாங்கள் பொருட்படுத்தியதே இல்லை.

நான் ஒரு புடவையும், ரவிக்கையும் அணிந்திருந்தேன். அது அவர்கள் என்னை தங்களில் ஒருவராக பார்க்க வேண்டித்தான். அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் போல என்னை நான் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய என்னுடைய பிரயத்தனங்கள் சற்று சுலபமாகத்தான் இருந்தது. ஒரு ஒன்பது கஜ புடவையை என்னைச் சுற்றி, சுற்றிக்கொண்டாலே போதுமானது.

என் கூந்தலில் ஜாதி மல்லிப்பூ சரத்தை சூடியிருந்தேன். இந்த பூவின் வாசம் ஆண்களை ஈர்க்குமாம். இந்தப் பகுதியில் புடவைகள் தான் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆடையாக கருதப்படுகிறது. இங்குள்ள ஆண்கள் புடவை அணிந்த பெண்களை, அதில் தெரியும் அவளில் சதைத்திரளை, வளைவுகளை, ஏற்ற இறக்கங்களை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள்…. இல்லையில்லை.. வெறிக்கிறார்கள்.. இந்தப் பெண்கள் குனிய நேர்கையிலெல்லாம் இந்த ஆண்கள் அவளின் மார்புப்பகுதியில் எதையோ தேடுகிறார்கள். இந்த நடத்தையெல்லாம் எனக்கு கேளிக்கையாக, நகைப்பைத் தருவனவாக இருந்தது.

இந்த கிரகத்தின் பிற பகுதிகளின் பெண்கள் மிகக்குறைவாகத்தான் ஆடைகள் அணிகிறார்கள். இதிலிருந்து நான் ஒன்றை புரிந்துகொண்டேன். பூமி கிரகத்தின் இந்தப் பகுதியில் , ஒன்று எத்தனை மறைக்கப்படுகிறதோ அத்தனைக்கு எதிராளியின் ஆர்வத்தை தூண்டுகிறது என்பதுதான்.

எனக்கு நேரமிருக்கவில்லை என்பதால் நான் மார்புக்கச்சை அணியவில்லை. நாளை, நான் என் கிரகத்திற்கு திரும்ப வேண்டிய நாள். நான் சற்றே உயரமான, இரட்டை நாடி உடல் ஒன்றை தேர்வு செய்து அதை என் உடலாக்கியிருந்தேன். அந்த உடலில் கண்கள் பெரிதாகவும், இதழ்கள் சற்றே தடித்தும், முகம் வட்டமாகவும், தோள்கள் அகண்டும், மார்பு திரண்டு விம்மியும், இடை சிறுத்தும், பிருஷ்டம் பெறுத்தும், அடிவயிறு உள்வாங்கியும், தொடைகளில் சதைத்திரள் கூடியும் இருந்தது. இந்த கிரகத்திலிருக்கும் ஆண்கள் இப்படிப்பட்ட உடலென்றால் பித்தாகிவிடுவார்கள் என்று கேள்வியுற்றிருந்தேன்.

நான் அந்த திருவிழா பூண்ட இடத்தினூடே நடந்து சென்றபோது ஆண்கள் என்னை வெறிப்பது தெரிந்தது. பிற பெண்கள் மார்புக்கச்சை அணிந்திருந்தார்கள். தங்கள் தோழிகளுடன் சின்னஞ்சிறு குழுக்களாக நின்றிருந்தார்கள். எனக்கு யாரையும் தெரியாது என்பதால் அந்தத் திடலில் எங்கு நின்று பார்த்தால் அந்த இடம் முழுமையும் தெரியுமோ அங்கு நான் தனியாக நின்றுகொண்டேன். எனக்கு பின்னால் மலை அடிவாரத்துக்கு இட்டுச்செல்லும் காடு இருந்தது.

சில நாழிகைகள் கழித்து என் உடலின் ஸ்தனங்கள் மீது சில ஆண்களின் கண் பார்வை படர்வதை நான் அவதானித்தேன். அவர்களின் பார்வைக் கோணத்தை அவதானித்ததில் அது என் உடலின் மார்பின் மீதும், பிருஷ்டத்தின் மீதும் மேய்வதை உணர முடிந்தது. அந்தக் காட்சி அவர்களுக்கு எப்படி இருக்குமென்று என்னால் ஊகிக்க முடிந்தது. அந்த காட்சியை அவர்களின் உடல் எப்படி மொழிபெயர்க்கிறது, எவ்விதம் அவர்களின் சுரப்பிகளை தூண்டிவிடுகிறது, எப்படி அவர்களின் உள் உடல் உறுப்புகள் ஒருங்கிணைந்து காமத்தின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி அவர்களை செலுத்துகிறது என்று நான் தெரிந்துகொள்ள விரும்பினேன்.

அவர்களின் பார்வையை நான் பார்த்தும் பாராமல் தொடர்ந்து அங்கேயே நின்றிருந்தேன். ஆனால், என்னை அவர்கள் தங்களின் மனதுக்குள் எப்படியெல்லாம் கற்பனை செய்திருப்பார்கள் என்று என்னால் கிரகிக்க முடிந்தது. அது ஒரு விசித்திரமான அனுபவம். போதை தரக்கூடிய ஒன்றுதான்.

அவர்கள் மூன்று பேராக இருந்தார்கள். அவர்களின் ஒருவன் என்னை நோக்கி நகர்ந்து வந்தான். அதை நான் எதிர்பார்த்தேன். ஏனெனில், ஏனைய பெண்கள் போல் நான் மார்புக்கச்சை அணிந்திருக்கவில்லை. தவிரவும், நான் அங்கே பெண்கள் கூட்டத்தில் ஒருத்தியாகவும் நிற்கவில்லை. தனித்திருந்தேன். அதை அவர்கள் அவதானித்திருக்க வேண்டும். தலை நிறைய மல்லிகைப்பூ. அடர்ந்த உதட்டுச்சாயம். பூமியின் இந்தப்பகுதியில் விலைமாதர்கள் இப்படித்தான் தோன்றுவார்களாம். அதை அப்படியே என் உடலில் பிரதிபலித்திருந்தேன். அது கச்சிதமாக வேலை செய்வதாகத் தோன்றியது.

என்னை நோக்கி வந்தவன் உயரமாக, ஒல்லியாக, அகண்ட தோள்களுடன், புஜங்களுடன் இருந்தான். மார்பு கட்டாக இருந்தது. கத்தியின் இதழ் போல வசீகரமாக இருந்தது. அவனுடைய சதைத்திரள் கூடிய தொடைகளை அவன் அணிந்திருந்த, காற்றில் விலகி படபடக்கும் லுங்கியினூடே என்னால் பார்க்க முடிந்தது. அதில் ரோமங்கள் இருந்தன. புழுதி லேசாக இருந்தது. உடல் வலு தேவைப்படும் ஒரு செயலை தொடர்ந்து செய்வதின் மூலமாக சதைகள் பக்கவாட்டில் ஒதுங்கி, முட்டிப்பகுதியில் ஒருங்கிணைந்து ஒரு விதமான வசீகரம் கூடி இருந்தது. அவனின் அடி வயிற்றுப்பகுதி உள்ளடங்கி இருந்தது. அவன் நடையில் இருந்த லேசான தள்ளாட்டம் அவன் மது அருந்தியிருக்கவேண்டும் என்று என்னை ஊகிக்கவைத்தது. அவனைத்தொடர்ந்து இன்னும் இருவர். மூவரின் நடையிலும் ஒரே விதமான தள்ளாட்டம்.

“நான் நடராஜ். நீ என்னை நட்டி என்று கூப்பிடலாம்” என்றான் முதலாவதாக வந்தவன் என்னை அண்டி.

“நான் கணேஷ். கன்ஸ் என்று கூப்பிடு”

“நான் வேந்தன். வெட்டி என்று கூப்பிட்டு என் தொழிலை உலகறியச்செய்யாதே”

கணேஷும், வேந்தனும் தொலைவிலிருந்தே உரக்கச் சொல்லி சிரிப்பூட்டினார்கள்.

“ஹாய்” என்று நான் பொதுவாகச் சொன்னேன்.

“நீ வெளியூரா?’ என்றான் நட்டி.

“ஆமாம்.. திருவிழா பார்க்க வந்தேன்” என்றேன்.

“எந்த ஊரு?” என்றான் நட்டி தொடர்ந்து.

நான் அதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது என்று எனக்கு தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் தொடர்ந்து பூமிக்கு வந்து போக வேண்டுமானால், நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்பது குறித்து யாருக்கும் சொல்லக்கூடாது என்பது எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் விதிகளுள் ஒன்று.

“பக்கத்துலதான்” என்றேன் நட்டியிடம்.

அது அவனை ஆச்சர்யமூட்டியிருக்க வேண்டும். அவனது புருவங்கள் சுருங்கின. அவன் அதற்கு மேல் என் பூர்வீகம் குறித்து பேசாமல் இருந்தால் போதுமென்று இருந்தது.

நட்டி என் வலது கையை பிடித்தான். அவனது கரம் கரடு முரடாக இருந்தது. அவன் தொடர்ந்து காட்டுக்குள் நுழைந்தான். நான் ஒத்துழைத்தேன். உடன் நடந்தேன். லேசாக திரும்பிப் பார்த்தேன். பின்னால் வேந்தனும், கணேஷும் சற்று தொலைவில் நடந்து வந்துகொண்டிருந்தனர். நடையில் லேசான தள்ளாட்டம். திருவிழா கூட்டத்தின் இரைச்சல் மெல்ல மெல்ல தேய்ந்துகொண்டிருந்தது.

நட்டி ஒரு சின்னப் பையை காட்டினான். சன்னமான ஒளியில், என்னால் அது ஒரு ஆணுறை என்று பகுக்க முடிந்தது. அது அவனது உள்நோக்கத்தை எனக்கு உணர்த்தியது. நான் பூமியில் இருக்கும் காலகட்டத்தில் என்னை எவ்வித பூமத்திய நோயும் பீடித்துவிடக்கூடாது. அப்படி ஏதும் பீடித்துவிட்டால் நான் என் கிரகத்திற்கு திரும்பிப்போக முடியாது.

நடந்து நடந்து நாங்கள் வந்து சேர்ந்துவிட்டிருந்த இடத்தில் பறவைகளின் கீச்சுக்குரல்கள் மட்டுமே கேட்டது. நட்டி அவன் அணிந்திருந்த லுங்கியை கழற்றி தரையில் விரித்தான். காட்டின் தின்மையால் அங்கே இருளாக இருந்ததால் அந்த லுங்கிதான் அவன் அணிந்திருந்த ஆடைகளில் கடைசியா என்பது எனக்கு சரிவர ஊர்ஜிதமில்லாமல் இருந்தது. அங்கே ஒரு மங்கலான லாந்தராவது இருந்திருக்கலாம் என்று ஒரு கணம் தோன்றியது. அவன் அந்த சின்னப் பையைப் பிதுக்கி ஆணுறையை எடுத்து தன்னுறுப்பில் அணிவதை நான் பார்த்தேன்.

பின் அவன் என் கையை பிடித்து இழுத்தான். அவன் கால்களில் தடுக்கி நான் அவன் லுங்கியில் விழுந்தேன். அவன் என்னை வேண்டுமென்றே தான் தடுக்கிவிழ வைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. தொடர்ந்து அவன் என் மீது விழுந்தான். பின் படந்தான். அவன் ஏதோ ஒரு அவசரத்தில் இருப்பது போல் பட்டது. எங்கள் இதழ்கள் தழுவின. எங்கள் காமத்தின் இந்தப் பகுதி குறித்து எனக்கு எவ்வித அறிவுருத்தலும் இல்லை.

அங்கும் இங்குமாய் தடவிப்பார்த்துவிட்டு, “நீ கன்னி கழியாதவளா?” என்றான் நட்டி.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆதலால் மத்திமமாக தலையசைத்தேன்.

அவன் என் மீது சுற்றிக்கிடந்த புடவையை அவிழ்த்தான். பின் என் ரவிக்கையை விலக்கினான். அவன் முகத்தை என் கழுத்தின் மீதும் மார்பின் மீதும் தேய்த்தான். அதில் ஒரு அவசரம் இருந்தது. அவன் விரல்கள் என் உடலெங்கும் ஊர்ந்தன. தடவின. ஆங்காங்கே கசக்கின. பிசைந்தன. அவனின் செய்கை எல்லாமும் எனக்குள் நகைப்பை உண்டாக்கின.

நானும் அவனுக்கு ஈடாக என் விரல்களை அவன் உடல் மீது செலுத்தினேன். அவனின் சருமம் உணர்ந்தேன். என் புற உடலின் சருமம் போன்றே அதுவும் இருந்தது. அவனின் எலும்புகளை உணர முடிந்தது. அவன் ஒல்லியான தோற்றத்துடன் இருப்பினும் மிகவும் கனமாக இருந்தான். அவனுடைய கைகள் என் புற உடலின் மார்புப்பகுதியிலும், பிருஷ்டத்திலும் அதிக கவனம் செலுத்தியது. சற்று நேரத்தில் வேந்தனும், கணேஷும் சேர்ந்து கொண்டார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அவர்களை நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் வரவை நான் ஒரு தொந்திரவாகவே கருதினேன். கணேஷும், வேந்தனும் என் கால்களை வலுவாக அழுத்திப் பிடித்துக்கொண்டனர். நான் எதிர்க்க முற்பட்டேன். அப்போதுதான் அவர்களில் ஒருவன் என் முகத்தில் ஓங்கிக் குத்தினான். நான் அதை எதிர்பார்க்கவில்லை. நான் நினைவிழந்தது கூட எனக்கு நினைவிருக்கவில்லை.

எத்தனை நேரம் சுய நினைவற்று இருந்தேன் என்று நினைவில்லை. நான் எழுந்த போது, வேந்தன் என் கால்களை இறுக்கமாக பிடித்திருந்தான். நட்டியின் கையில் ஒரு நீளமான மரத்தாலான முனை ஒடுங்கப்பட்ட சிறிய கட்டை இருந்தது. தோராயமாக அது ஒரு பத்து இன்ச் நீளம் இருந்தது. அதை அவன் என் புற உடற்கூட்டின் துளையின் உள்ளே செலுத்தினான். அந்தத்துளை வெறும் ஒரு ஏற்பாடு மட்டுமே. அதன் நோக்கம், பூமிப்பெண்ணை உடல் அளவில் ஒத்திருப்பது மட்டுமே. அந்த துளையில் ஒரு பத்து இன்ச் நீளமுள்ள ஒரு பொருள் செலுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது என் அவதானமாக இருந்தது, அந்தத் துளை மேலும் ஆழமாக கிழிக்கப்பட்டாலொழிய.

என் புற உடற்கூட்டில் எதுவோ கிழியும் சத்தம் லேசாக மிக மிக சன்னமாக கேட்டது. சற்றைக்கெல்லாம் அந்த பொருளை உறுவிவிட்டு நட்டி என் மீது மீண்டும் விழுந்தான்.

பின் அவன் என் உடலை மூர்க்கமாக குலுங்கச்செய்தான். எனக்கு அவன் செய்தது பிடிக்கவில்லை. ஆனால் இப்போது இந்த நிகழ்வில் எனக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. நான் அதை அதன் போக்கிலேயே தான் இயங்கி அதிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள வேண்டும். சற்றைக்கெல்லாம் நான் கட்டுப்பாடிழந்தேன். என் புற உடற்கூட்டின் உள்ளே எதுவோ அன்னியமாக நுழைந்துவிட்டதைப்போல் உணர்ந்தேன்.

அது நடந்திருக்கக்கூடாது என்று மட்டும் எனக்கு ஊர்ஜிதமாகத்தான் தெரியும். என் புற உடற்கூடு என் உடலை பாதுகாக்கத்தான். என் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி, அவனை தள்ளிவிட்டு நான் எழுந்தேன். என்னை பலவந்தமாகப் பிடித்திருந்த அந்த இருவரும் அதிர்ந்து இரண்டடி தள்ளிப்போனார்கள். நட்டி என்னை ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து பார்த்தான். நான் என் புற உடற்கூட்டின் மீது என் விரல்களை செலுத்தினேன். சற்று நேர திணறலுக்குப்பின் அந்த கிழிசலை நான் கண்டுபிடித்தேன்.

நட்டி என் அருகே மீண்டும் வந்து என்னை இறுக்கமாக பிடிக்கப்பார்த்தான். என் உடல் பலத்தையெல்லாம் ஒன்றுகூட்டி அவனை நான் தள்ளிவிட்டேன். என் போன்றவர்களின் உடல் தகுதியின் தரத்தில் அது ஒரு மூர்க்கமான உதறல். நான்கைந்து பூமி மனிதர்களின் பலம் ஒட்டுமொத்தமாக. அவன் பத்துப்பதினைந்து அடி தள்ளிப்போய் விழுந்தான். மற்ற இருவரும் என்னையும் நட்டியையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அவர்கள் முகத்தில் பீதி படர்ந்தது.

நட்டி பயன்படுத்திய ஆணுறை அங்கே கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தேன். திரவத்தின் பிசுபிசுப்பு அதில் இருந்தது. அதன் முனையில் லேசாக கிழிந்திருந்தது. என் புற உடற்கூட்டில் கிழிசல் நேர்ந்த இடத்தை தொட்டுப்பார்த்தேன். அங்கும் அதே பிசுபிசுப்பு. அந்த இடம் கல் போல் இருந்தது. அது நான் எதிர்பார்த்தது தான். அப்படித்தான் என் போன்றவர்களின் சருமம், அன்னிய திரவங்களை எதிர்கொள்ளும்.

சற்று நேரத்தில் நான் உடல் சுகவீனமாக உணர்ந்தேன். எது என் அசலான உடலை தீண்டியதோ அது என் உட்புற உறுப்புகளின் இயக்கங்களை சிதைக்கத்துவங்கியிருந்தது. அது ஒரு தொற்று தான். அந்த தொற்றோடு நான் என் கிரகத்திற்கு திரும்ப வாய்ப்பில்லை.

அவர்கள் மூவரும் இப்போது என்னை நோக்கி வந்தார்கள். நான் ஓட முயற்சித்தேன். அவர்கள் சற்று தொலைவில் என்னை பின் தொடர்ந்து ஓடி வந்தார்கள். நான் என் புற உடற்கூட்டை களைத்து கீழே வீசி அதன் மீது ஏறி நின்றுகொண்டேன். பின் திரும்பி அவர்கள் வருகிறார்களா என்று பார்த்தேன்.

“அவள் எங்கே போனாள்?” என்றான் நட்டி.

“தெரியலை. ஆனால் அதிக தொலைவு போயிருக்க முடியாது” என்றான் வேந்தன்.

அவர்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்தார்கள். என்னைத் தேடினார்கள். அவர்களில் கணேஷ் ஒரு சிகரெட் பெட்டியைத் திறக்க, ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டார்கள். பின் வேந்தன் அந்த சிகரெட்டுகளை பற்ற வைக்க, அந்த மெல்லிய ஒளியில் அவர்களின் முகங்களை நான் திருத்தமாகப் பார்த்தேன்.

“ஆளுக்கொரு திசையில தேடுவோம். யாரு அவளை பாத்தாலும் விசிலடிக்கணும்” என்றான் நட்டி.

“சோர்வா இருக்கு நட்டி. ” என்றான் வேந்தன். அவன் முகத்தில் களைப்பு அப்பிக்கிடந்தது.

“இந்தா.. இந்த பாறையில கொஞ்சம் நேரம் உக்காரு” என்றான் கணேஷ் என்னைக்காட்டி.

“நான் இங்க நிறைய தடவை வந்திருக்கேன். ஆனா, இந்தப் பாறையை பாத்தது இல்லையே” என்றான் வேந்தன்.

“எங்க மாமா சொல்வாறு. மலையிலேர்ந்து அப்பப்போ பாறை உருண்டு வருமாம்” என்றான் நட்டி.

சற்று நேரத்தில், புலி ஒன்று உறுமுவது கேட்டது. அது அவர்களை பீதியடையச் செய்திருக்க வேண்டும். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் கிராமத்தை நோக்கி அவர்கள் ஓடினார்கள்.

அவர்கள் பார்வையிலிருந்து அகல, புலி ஒன்று என் மீது தாவி ஏறி கால்கள் பரப்பி அமர்ந்தது. தொலைவில், திருவிழாக் கோலம் பூண்ட திடலிலிருந்து லாந்தர் ஒளி தெரிந்தது. அந்த ஒளி, விண்வெளியில் என் கிரகத்திலிருந்து வெளிப்படும் ஒளியை ஒத்திருந்தது.

கண்ணாடியின் மிளிர்வு –கா.சிவா சிறுகதை

$
0
0

அம்மாவுடன் மலர்க்கொடி அத்தை வீட்டிற்கு சென்றபோது பத்துமணியாகிவிட்டது.சுற்றுச் சுவரையொட்டி வைக்கப்பட்டிருந்த பூத்திருந்த செம்பருத்தி  செடிகளுக்கு காலையில் ஊற்றிய நீரின் ஈரம்  காயாமல் இருந்த மண்ணில் இளஞ்சிவப்பு நிறத்திலிருந்த புழு தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு நகர ஆரம்பித்தது.  எனக்கு இங்கு  வர விருப்பமேயில்லை.இம்மாதிரியான நேரத்தில் யார் வீட்டிற்கும் செல்வதற்கு பிடிப்பதேயில்லை.இன்று ஊருக்கு கிளம்புகிறார்களாம்..பிறகு ஒரு மாதத்திற்கு மேலாகுமாம் வருவதற்கு, கேட்டுவிட்டு உடனே வந்துவிடலாம் என அம்மா, நச்சரித்தவுடன் வரவேண்டியதாகிவிட்டது.

வாசலோரம் கிடந்த காலணிகளைப் பார்த்தபோது  வேறு சிலரும் வந்திருப்பார்கள் எனத் தோன்றியது.எனக்குத்தான் தயக்கமாக இருந்தது.பத்து வருடங்களுக்குப்பின் வருவது கேதம் கேட்பதற்காகவா இருக்கவேண்டும்.கடைசியாக நான் வந்தது சிங்கப்பூர் செல்வதற்கு விடை பெற்றுச்செல்ல.அப்போது தேனம்மையை எனக்கு மணமுடித்துத் தருவார்கள் என நானும் என் குடும்பமும் நம்பிக்கொண்டிருந்த சமயம்.அவர்களுக்கும் விருப்பம் என்பதுபோலவே அவர்கள் நடவடிக்கைகளும் இருந்தன. அத்தை மாமாவிடம் எவ்விதமான குறிப்புகளையும் என்னால் உய்த்தறிய முடியவில்லை.தேனம்மையின் பேச்சிலும் எதுவும் தென்படவில்லை.சென்று வருகிறேன் எனக் கூறியபோது அவளுடைய அடையாளமான காகிதமலர்ப் புன்னகையுடனேயே தலையாட்டினாள்.

சிங்கப்பூர் சென்று மூன்று மாதங்களுக்குப் பின் என் சின்னக்கா  தொலைபேசும்போது சொன்னார்கள், தேனம்மையை அத்தையின் ஒன்றுவிட்ட அண்ணன் மகனுக்கு நிச்சயம் செய்துவிட்டார்கள் என.அத்தையின் அம்மா மரணத்தருவாயில் அவர்கள் ஊரில்தான் தேனம்மையை மணமுடிக்க வேண்டுமென சத்தியம் வாங்கிக் கொண்டார்களாம்.தசாவதாரத்தில் கமல் சொல்லும் “கேயாஸ் ” தியரியை அப்போதுதான் உணர்ந்தேன். அத்தை எப்போதுமே உற்சாகமானவர்.அவர் முகம் சோர்ந்தோ,புன்னகையின்றியோ பார்த்த நினைவில்லை.குறையாக இருந்தாலும் அதிலொரு நிறையைக் கூறி பெருமைப்படுவார்.ஊருக்குச் செல்ல ரயிலில் இருக்கை கிடைக்காதபோது, ரயிலில் சென்றால்  பேருந்துபோல வீட்டருகிலேயே இறங்கமுடியுமா எனக் கூறியபடி கடந்துவிடுவார்.வாங்குவதற்கு சிறிய வீடாக அமைந்தபோது இப்படி இருந்தால்தான் சுத்தமாக பராமரிக்க இயலும் எனக் கூறினார்.மூத்த பையன் காதல் மணம் செய்துகொண்டபோது பொண்ணு தேடும் கஷ்டத்தைக் கொடுக்காமல் அவனே அருமையான பெண்ணை பார்த்துவிட்டான் என விழிவிரியச் சமாளித்தார்.மாமா சீட்டுப் பிடிக்கிறேனென சில லட்சங்களை இழந்தபோது, கண்டம் இருப்பதாக ஜாதகத்தில் இருந்தது,ஆளுக்கு ஏதுமில்லாமல் பணத்தோடு  போயிற்றே என மகிழ்ந்தார்.தேனம்மையின் கணவர் பணியாற்றிய பெரும் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சிறு தொழிற்சாலையில் பணியாற்ற நேர்ந்தபோது சம்பாத்தியம் குறைவாக இருந்தால்தான் மாமியார் வீட்டினரை தாழ்த்திப் பேசாமல் கொஞ்சமாவது மதிப்போடு நடத்துவார் என மெல்லிய குரலில் கூறினாராம்.

நாங்கள் இப்போது வந்திருப்பது, தேனம்மையின் கணவர் சில நாட்களுக்குமுன் இறந்ததற்கு கேதம் கேட்பதற்காக. விருப்பம் இல்லாமல் வந்தாலும் உள்ளுக்குள் ஓர் ஆர்வம் ஊறிக்கொண்டிருந்தது. தற்கொலை செய்துகொண்டு மருமகன்  மாய்ந்தற்கு  எம்மாதிரியான காரணம் கூறப்போகிறார் என. வாசலுக்கருகில் சென்றதுமே ஒளி மாறுபாட்டை கவனித்து திரும்பிய அத்தை “வாங்க ” என்று  எழுந்தார்.”பரவாயில்ல அத்தாச்சி , உக்காருங்க” என்றபடி நுழைந்து காலியாக இருந்த நாற்காலியில் அம்மா அமர்ந்து , அருகில் அமர எனக்கு கை காட்டினார். எங்களைப் பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த தம்பதியர் போன்றிருந்தவர்கள் “பிள்ளைகள் பள்ளியிலிருந்து வரும்முன் சென்றுவிடவேண்டும் “என்றபடி எழ அத்தை மெல்ல தலையசைத்தவுடன் கிளம்பினார்கள். அத்தையின் உடல் சற்று பருத்திருந்தபோதும் தளரந்திருந்தார்.   அத்தை எழுந்துபோய் இரண்டு சிறிய தம்ளர்களில் காபி எடுத்துவந்தார்.நான்,இன்றைய தேதியைக் காட்டிய காலண்டரையும் சற்று தள்ளி மாட்டியிருந்த பெரிதாக்கப்பட்ட அவர்களின் குடும்பப் புன்னகையைக் காட்டிய புகைப்படத்தையும் , மேசை மீீீது சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருந்த பூச்சாடியையும் நோக்குவது போல அம்மாவின் உரையாடலுக்காக செவியைக் கூர்ந்திருந்தேன்.

“எப்படி அத்தாச்சி, திடீர்னு இம்மாதிரி முடிவுக்கு போனாரு..விசயத்தை கேள்விப்பட்டப்ப என்னால நம்பவே முடியல.வேற யாராவது இருக்கும்னு இவனப்பாக்கிட்ட கோபமா திட்டினேன்.அவருதான் நல்லா விசாரிச்சிட்டேன்.மலரோட மாப்பிள்ளைதான்னு சொன்னாரு.அப்பயிருந்து இன்னும் மனசே ஆறல.அழகுபெத்த புள்ள இப்ப நாதியத்து நிக்குதே.எப்படித்தான் நீங்க தாங்கிக்கிட்டு இருக்கீங்களோ ” என்றபடி அத்தையின் கைகளை தன் பருத்த கைகளுக்குள் வைத்து அழுத்தியபடி விசும்பினாள்.எப்போதுமே எனக்கு ஆச்சர்யம்தான், பயணம் முழுக்க  கூடவேயிருந்து  ஏதாவது விபரங்களை உற்சாகமாக பேசிக்கொண்டே வருபவர்கள் கேத வீட்டின் அருகில் வந்தவுடன் சட்டென சன்னதம் வந்ததுபோல கதறியபடி வீட்டை நோக்கி ஓடுவதும் நெருங்கிய உறவினரை கட்டிக்கொண்டு ஓங்கிய குரலில்  அழுவதும். பெண்களின் அறிய முடியாத ரகசியங்களில் இதுவும் ஒன்று. ஆண்களால் இயன்றது , தலையை தொங்கப்போட்டபடி சென்று அங்கு நின்று கை நீட்டும் ஆண்களின் விரல்களை ஆதுரத்துடன் அழுத்துவது மட்டும்தான்.

சற்றுநேரம் விசும்பிய அத்தை அதை நிறுத்தியபோது பார்வையைத் திருப்பி அவரின் விழிகளை நோக்கினேன்.நீர்வழிந்தபடியிருந்தாலும் சட்டென சிறு சுடர் ஒன்று எழுந்தது. “என்ன சொல்வது,என் வினையோ  அல்லது தேனோட வினையோ நல்லாத்தான் பிள்ளைகளோட பேசிக்கிட்டு இருந்திருக்காரு.மறுநாள் குடும்பத்தோட  குற்றாலத்திற்கு போறதா இருந்ததாம்.இருந்த கம்பளியாடகளே  போதுமான்னு பாத்தப்ப பெரியவளுக்கு இருந்தது சேராத மாதிரி தெரிஞ்சிருக்கு.வாங்கிட்டு வந்தர்றேன்னு கிளம்பி போனவர்தான். ஏழு மணிக்கு போனவரை ஒன்பது மணிவரை வரலையேன்னு போன் பண்ணியிருக்கா.போனை எடுக்கலை.என்ன பண்றதுன்னு தெரியாம ரெண்டு தெரு தள்ளியிருக்கிற அவரோட தம்பிக்கு போன் பண்ணி இந்த மாதிரி போனவரை இவ்வளவு நேரம் காணல,எங்கே ,எப்படி  தேடுவதுன்னு புலம்பியிருக்கா.அவருதான் இவளையும் கூட்டிக்கிட்டு கடைத்தெருப்பக்கமெல்லாம் தேடியிருக்காரு.அப்பறம் ஏதோ தோணியிருக்கு,கம்பெனிப் பக்கம் போயிருப்பாரோன்னு.அங்க போயி செக்யுரிட்டிகிட்ட கேட்டப்ப ஆமா , எட்டு மணியப்போல உள்ள போனாருன்னு சொல்லியிருக்கான்.உள்ள போயி ஆபீஸ் ரூம்,மெசின் ஹாலெல்லாம் பார்த்தும் ஆளக் காணாம பழைய சாமான்களெல்லாம் போட்டுவைக்கிற சின்ன அறை ஒண்ணு பின்னாடி இருக்கிறது நினைவுக்கு வந்து ,போய் பார்த்தா … உடைந்த,தேய்ந்துபோன மெசின் பாகங்களும் பிளாஸ்டிக் டப்பாக்களுமா நெறஞ்ச  ஆறுக்கு எட்டு அடில இருக்கற அந்த இடத்தில பேன் மாட்ற கொக்கியில கயிறக் கட்டி தொங்கிட்டிருக்காரு.என்ன பிரச்சனையின்னு யாருக்கிட்டையும் சொல்லவும் இல்ல காட்டிக்கிடவும் இல்லை…”என்றபடி குலுங்கியழ ஆரம்பித்தார்.

எனக்கென்னவோ இன்னும் சொல்லி முடிக்கவில்லையெனத் தோன்றியது.நான் எதிர்பார்த்து வந்ததை இன்னும் கூறவில்லையே. குலுங்கல் சற்று தணிந்தபோது அரிதான தின்பண்டத்தைப் பார்த்து உமிழூறும் சிறுவனென  கூர்ந்து கவனித்தேன்.விழிகள் சற்று மலர, “என்னதான் இருந்தாலும் இதுவரை இப்படி பார்த்ததோ கேள்விப்பட்டதேயில்லை.அவரோட லேப்டாப்ல கடைசியா என்ன பார்த்திருக்கிறார்னு பார்த்தா அதுல வலிக்காம தூக்குப்போட்டுக்கிறது எப்படின்னு பார்த்திருக்கார்.எந்த மாதிரி கயறு வாங்கனும் எந்த மாதிரி முடிச்சுப் போடனும் ,எம்மாதிரி போட்டா முகம் விகாரமா தெரியாதுங்கறதயெல்லாம் பார்த்திருக்கார்.அதே மாதிரி செஞ்சிருக்காரு.நாங்க போயி பார்க்கிறப்ப சும்மா படுத்து தூங்கற மாதிரியே இருக்கு. அந்த கந்தசாமி மகன் செத்தப்ப  பார்க்க சகிக்காத மாதிரி நாக்கு ஒருபுறம் கடிபட்டு தொங்க அந்த மூஞ்சி வேற பக்கம்  இழுத்துக்கிட்டு கிடந்தது.ஆனா இவர் முகத்துல எந்த வலியோ வேதனையோ எதுவுமே தெரியலை.காலையில பறிச்ச பூ மாதிரியே பொலிவா இருந்துச்சு.செத்தாலும் இந்த மாதிரியில்ல சாகனும்னு மகராசன் காட்டிட்டு போயிருக்கான்” என்றபடி மூக்கைச் சிந்தினார்.

தமிழகம் கண்ட காந்தியர்கள் –பாவண்ணனின் ‘சத்தியத்தின் ஆட்சி’நூல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ

$
0
0

இன்று நம்மில் பல பேர், சுற்றுலா செல்லத் திட்டமிட்டால், வெளி நாடுகளோ, வெளி மாநிலங்களோ செல்லவே விரும்புகிறோம். நம் மாநிலத்திலேயே பார்க்காத இடங்கள் எத்தனையோ இருக்கிறதே என்று நினைப்பதேயில்லை. எந்த ஊரில் இருக்கும் கோவில்களூக்கோ சென்று வருவோம். அவரவர் சொந்த ஊரிலோ, அல்லது அருகிலோ இருக்கும் கோவில்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்றோ, அந்தக் கோவிலிலும் அழகாக உள்ள சிற்பங்களை நின்று ரசிக்க வேண்டும் என்றோ தோன்றுவதேயில்லை. நாம் இங்குதானே இருக்கிறோம்; பார்த்துக் கொள்ளலாம் என்ற மனோபாவமோ அல்லது உள்ளூர் பற்றிய ஒரு அலட்சிய மனப்பான்மையோ என்று பிரித்தறிய முடிவதில்லை. அது போல அண்ணல் காந்தியடிகள் பற்றி நமக்கெல்லாம் தெரியும். காந்தி தேசப் பிதா என்று தெரியும். அதை விட்டால், கோகலே, ..சி. பாரதி என்று மிகப் பிரபலமான தலைவர்கள் பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறோம். காந்தியின் கொள்கைகள் வெற்றி பெற்றது, அவரது அற வழி, சத்தியாக்கிரகப் போரே என்று சொல்கிறோம். ஆனால், காந்தியின் அற வழிப் போராட்டத் திட்டங்கள் இந்திய நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி செயல்படுத்தப்பட்டதற்கு எத்தனையோ மாபெரும் மனிதர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் அப்படியே.காந்தியக் கொள்கைகளை இம்மியளவும் பிசகாமல் சுவீகரித்துக் கொண்டு செயல்படுத்தியிருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் கூட அதிக வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறது.அப்படி செயல்படுத்தியவர்கள் பற்றித் தெரிந்து கொண்டால் கூட அதை ஒரு சாதாரண செய்தியாகக கடந்து போகிறோம். ஆனால், அவர்கள் அந்தந்தப் பகுதியில் இயக்கங்களைக் கட்டியிராவிட்டால், சுதந்திர வேட்கை நாடு முழுவதும் பரவுவதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. அதோடு, காந்தியின் கொள்கைகளான, கிராம சுயராஜ்ஜியம், மது விலக்கு, அந்நியத் துணி பகிஷ்கரிப்பு, சத்தியாக்கிரகம் போன்றவை நாட்டின் மூலை முடுக்குகளில் பரவியிருக்காது. அப்படிப்பட்ட ஆளுமைகளை எல்லோர்க்கும் அறிமுகப்படுத்தும் உயரிய நோக்கத்தோடு, பாவண்ணன் அவர்கள், அத்தகையோரைப் பற்றிய குறிப்புகளையும், ஆவணங்களையும், புத்தகக் குறிப்புகளையும் தேடித் தேடிப் படித்து, அதன் சாராம்சத்தைப் பிழிந்து சிறிய கட்டுரைகளாக எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே சமீபத்தில் வெளி வந்துள்ள அவரது “ சத்தியத்தின் ஆட்சி “ என்ற புத்தகம்.

இந்தத் தொகுப்பை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்ட காரணத்தை பாவண்ணன் அழகாக முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அதுவே ஒரு கட்டுரையின் சுவாரசியத்தைக் கொடுக்கிறது. அவரது நண்பரும், எழுத்தளருமான விட்டல்ராவ், இவரோடு பகிர்ந்து கொண்ட சுவையான சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். சாவி இதழுக்காக மலர் தயாரிக்கும் பணியில் விட்டல்ராவுக்கும் ஒரு பங்கேற்பு கிடைத்தபோது, அவர், சென்னையை மையமாக வைத்தே, ஆழ்வார்பேட்டை மலர், வண்ணாரப்பேட்டை மலர் என் தயாரிக்கலாமே என்ற ஆர்வத்தில், அந்தப் புகுதியில் வசிக்கின்ற சில குறிப்பிடத்தக்க மனிதர்களை சந்தித்து உரையாடி,மலருக்கான கட்டுரைகளைத் தயாரித்தபோது, அது நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்படவேயில்லை. மைசூர் மலர், உதகை மலர் என்று தயாரிப்பதிலேயே ஆர்வம் காட்டப்பட்டது. இந்தச் சிறு பொறியே பாவண்ணனை ஆங்காங்கே தோன்றி மறைந்த காந்தியர்களைப் பற்றித் தொகுக்க வேண்டும் என்ற மன எழுச்சியை அவருக்குக் கொடுத்தது.

காந்தி ஒரு சுதந்திரப் போராளி என்பவர் மட்டுமல்லர். அவர் ஒரு சத்குருவுக்கு ஒப்பானவர். சத்குரு என்பவர் யாருக்கும் எந்த போதனைகளையும் ஓதுவதில்லை. தன் வாழ்க்கை நடைமுறைகள் மூலம், தன் பண்புகள் மூலம், தன் அனுபவங்களிலிருந்து தன் வாழ்க்கையைத் தான் தகவமைத்துக் கொண்டு, தன் வாழ்க்கையே மற்றவர்களுக்குப் போதனையாக அமையும்படிச் செய்பவர். அவர்.வழியாக தங்கள் வாழ்க்கையின் திசையைத் தீர்மானித்துக் கொண்ட ஆளுமைகள் பலர். .வே.சாமிநாதய்யர் தமிழ் நூல்களைத் தேடித் தேடிச் சேகரித்தது போல, பாவண்ணன், காந்திய ஆளுமைகளத் தேடித் தேடிப் படித்து தொகுப்பாக்கியுள்ளார்.

இந்தத் தொகுப்பில், பதினான்கு காந்திய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் உள்ளன. இவர்கள் அனைவரும் காந்தியை ஒரே ஒரு முறை சந்தித்தோ, கடிதத் தொடர்பு கொண்ட பிறகோ உடனே தங்களையும் அப்படி மாற்றிக் கொண்டு இந்த சமுதாய மாற்றத்திற்கும், சுதந்திரத்திற்கும் பாடுபட்டவர்களாகின்றனர்.

பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்ற வார்த்தைகள் கூட அதிகம் புழங்காத அந்தக்காலத்தில்,பெரிய பணக்காரக் குடும்பத்திலிருந்து வெளிவந்து, போராடிய பெண் ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் மூன்று இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சௌந்திரம் அம்மா டி.வி.எஸ். குடும்பத்திலிருந்து வந்த பெண்மணி. அவருடைய இளமை வாழ்க்கை வெகு சீக்கிரமாகவே கருகி விட, அப்போதே அவர் காந்தியின் முன், மறுமணம் செய்து கொண்டார். காந்தியே அதை நடத்தி வைத்தார். காந்தியின் கொள்கையான கிராம சுயராஜ்ஜியம், சுய சார்பு இவற்றை நடைமுறப்படுத்தியதில் இவருக்கு பெரும்பங்குண்டு. பெண்களுக்குக் கைத்தொழில்கள் பயிற்சி மையங்களும், ஆரோக்கியத்தை சொல்லித்தரும் மையங்களும் என் கிட்டத்தட்ட அறுபது மையங்களை இவர் ஏற்படுத்தியிருக்கிறார். இவரது சேவைக்கு சாட்சியாக இன்றும் மதுரையில்,டி.சுப்பலாபுரத்தில் சௌந்திரம் காலனி இருப்பது பெருமைக்குரியது. காந்தியின் வழியைப் பின்பற்றுபவர்கள், நாட்டின் சேவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்களே ஒழிய, தங்களுக்குப் பெருமை தேடிக் கொள்வதற்காக அல்ல அவருக்கு ஒரு சிலை நிறுவ ஒருவர் அனுமதி கேட்டபோது, அதை மறுத்ததோடு, அப்படி சிலை நிறுவினால், தான் அந்தச் சிலை முன்பாக அமர்ந்து உண்ணாவிரதமிருந்து உயிர் விடுவேன் என்றார். புகைப்படத்துக்காக குப்பை தள்ளுவது போல பாவனை செய்து, உடனே அந்த இடத்தில் தனக்கு சிலை நிறுவிக்கொள்ளும் காரியவாதத் தலைவர்கள் இருக்கும் இந்த நாட்டில், சௌந்திரம் போன்ற ஆளுமைகள் நினைந்து நினைந்து போற்றத் தகுந்தவர்கள்.

அது போலவே, கோதைநாயகி அம்மாள், அம்புஜம்மாள். இவர்கள் மூவருமே, ஏதோ சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், தேசிய சேவை என்ற பெயரில் காந்தியுடன் இணைந்தவர்கள் அல்லர். பெண்களுக்கென்று இயற்கையாக நகை, பணம் என்ற ஆசைகளை ஒதுக்கி, வீட்டில் அடைபட்டுக் கிடப்பதே நல்ல பெண்களுக்கு லட்சணம் என்ற கட்டுக்களையெல்லாம் உடைத்து, தம் பகட்டாடை, ஆபரணங்கள் துறந்து, வீதியில் இறங்கிப் போராடியதை மிகச் சாதாரண விஷயமாகத் தள்ளி விட்டுப் போக முடியாது. இந்தப் பெண்மணிகள், தங்கள் கல்வி எல்லாமே கிராமப்புற பெண்களுக்குப் பயன்படும் விதத்தில் காந்திய வழியில் ஆசிரமங்களை நிறுவியிருக்கிறார்கள். அதற்குத் தங்களுக்குச் சொந்தமான இடங்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். மது ஒழிப்பு என்ற காந்தியின் கொள்கைகளச் செயலாற்ற இவர்கள் பெண்களைச் சேர்த்துக் கொண்டு, கள்ளுக் கடைகள் முன்னால் நின்று கொண்டு, கள்ளுக் கடைகளுக்குச் செல்வோரைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தை செய்திருக்கிறார்கள். இதற்காக கள்ளுக்கடை உரிமையாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறார்கள். துணிக்கடைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அந்நியத் துணிகளைப் பகிஷ்கரிபோம் என்று போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதற்காகச் சிறை சென்றிருக்கிறார்கள். அம்புஜம்மாள், தன்னிடம் இருந்த தங்க ஆபரணன்களை அப்படியே காந்தியின் தேசிய சேவைக்கு முழுவதுமாகக் கொடுத்து விட்டார். கோதைநாயகி அம்மாள், சிறந்த பேச்சாளராக இருந்ததோடு, நன்றாகப் பாடும் திறமையும் கொண்டிருந்தார். அவர், கதராடை, மது அருந்தாமை ஆகியவற்றை வலியுறுத்தி மேடைப் பேச்சுகள் பேச ஆரம்பிக்கும்போது, சுதந்திர உணர்வைத் தட்டி எழுப்பும் பாடல்களைப் பாடுவார்.காந்திக்கு மிகவும் பிடித்த குஜராத்திக் கவிஞர் நரசிங்க மேத்தா அவர்கள் எழுதிய வைஷ்ணவ ஜனதோ பாடலை, சங்கு சுப்பிரமணியன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்ததை, கோதைநாயகி அம்மாள் மேடை தோறும் பாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வேதரத்தினம் பற்றிய கட்டுரையில்,உப்புச் சத்தியாக்கிரக போராட்டத்தின்போது, வேதாரணயம் நோக்கிப் போகும் தொண்டர்களுக்கு ஆங்காங்கே மரங்களில் உணவுப் பொட்டலங்கள் கட்டித் தொங்க விட்டிருக்கும் என்ற தகவல் மிகவும் சுவாரசியமானது திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் நிலச்சுவான்தாரர்களிடமிருந்து நிலங்களைப் பெற்று ஏழைகளுக்கு வழங்கினார் .அது போல வேதாரண்யம் அருகில் புயல் தாக்கி, மக்கள் வீடு வாசலை இழந்து நின்றபோது, ராமகிருஷ்ணா மடத்தின் உதவியோடு அவர்களுக்கு வீடுகளைக் கட்டித் தந்தார். இவரோடு உப்புச் சத்தியாக்கிரக் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் நாராயணசாமி ஐயர். சுதந்திரப் போராட்டத்திற்காக தன் சொத்துகள் முழுவதையும் இழந்து விட்டார். 1945 ல், தன் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாகக் கூறி, தன் இரு மகள்களையும் வேதரத்தினத்திடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியை வாசிக்கும்போது, இது சங்க காலத்தில் பாரி மகள்கள், கபிலரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

மற்ற ஆளுமைகளான தி.சே.சௌ.ராஜன், குமரப்பா, ராஜாஜி, மதுரை வைத்திய நாதய்யர், அவனாசிலிங்க செட்டியார் என்று ஒவ்வொருவரப் பற்றியும் வாசிக்கும்போது, சுதந்திரப் போராட்டத்தின் வீச்சு எப்படி இருந்தது என்பதை நம்மால் உண்ர்ந்து கொள்ள முடிகிறது. காந்தியர்கள் எப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மதுரை வைத்தியநாதய்யர், ஹரிஜன மேம்பாட்டுக்காவும், ஹரிஜனங்களும் ஆலயங்களுக்குள் செல்ல வேண்டும் போராட்டம் நடத்தும்போது, மாகாணப் பொறுப்பு வகிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததை ராஜாஜி அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஆலயப் பிரவேசச் சட்டம்,மது விலக்குச் சட்டம், விவசாயிகள் கடன் நிவாரணச் சட்டம் போன்றவற்றை இயற்றியிருக்கிறார். காந்தி தண்டி யாத்திரையை தொடங்கியபொழுது, ராஜாஜி, திருச்சி தி,சே.சௌ.ராஜன் வீட்டிலிருந்து வேதாரண்யம் நோக்கி தன் உப்புச் சத்தியாக்கிரக யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். அதைப் போல, காந்தி சென்னைக்கு வரும்போதெல்லாம் தங்கும் இந்தியன் ரிவ்யூ பத்திரிகையின் ஆசிரியர் ஜி. நடேசன் வீட்டில்தான் கோ.சுவாமிநாதன், காந்தியைச் சந்தித்திருக்கிறார். நடேசன் தான், அம்புஜம்மாள் அவர்களின் தந்தையார் சீனிவாச ஐயங்காரின் வீட்டுக்கு காந்தியை விருந்துக்கு அழைத்து வந்திருக்கிறார். அங்குதான், அம்புஜம்மாள் காந்தியைச் சந்தித்ததும், மன மாற்றமும் நிகழ்ந்தது.

திருப்பூரைச் சேர்ந்த அவினாசிலிங்கம் கோவையில் குருகுல முறையில் ஒரு பள்ளியை நடத்தி வந்தார். காந்தி கோவைப் பகுதிக்கு வரும்போது அங்குதான் தங்குவார். அவினாசி, தமிழ்நாட்டில் காந்தி பயணிக்கும்போது அதிகமாக உடனிருந்திருக்கிறார்.அப்போது தான் கவனித்த சிலவற்றை காந்தியடிகள் பற்றிய குரிப்பாகக் குறித்து வைத்துள்ளார். ஒரு கூட்டம் முடித்து, மதிய உணவு சாப்பிட்டு ஆனவுடன், இலைகளை எடுத்தவர் அப்படியே சிதறலாக போட்டு விடுகிறார். காந்தி அவற்றையெடுத்து குழிக்குள் போட்டு சுத்தம் செய்தார்.இன்னொரு முறை, அவினாசி மழையில் சேற்றில் இறங்கி நடக்கத் தயங்கும்போது காந்தி அதில் இறங்கி நடந்து வருவதைக் கவனித்தார். அவருக்கு காந்தியைக் கூடவே இருந்து அவருடைய பழக்க வழக்கங்களை உற்றுக் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது

அது போல டங்கன் காந்தியைச் சந்திக்கும்போது, அவர்கள் நடந்து வரும் வழியில் பலர் மலம் கழித்துவிட்டுச் சென்றிருப்பார்கள். காந்தி சிறிதும் தயங்காமல், அவற்றை மண்ணில் தள்ளி புதைப்பார்.

தக்கர் பாபா, முழுக்க முழுக்க காந்தியின் ஹரிஜன சேவாவைக் கைக் கொண்டு வாழ்ந்தார். கோ. சுவாமிநாதன், கல்லூரி மாணவராகக் காந்தியடிகளைக் காண வந்தார். சென்னைக்கு காந்தி வரும்போதெல்லாம், அவருக்குக் கூடவே இருந்து ,கூட்டம் நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வது, எழுதும்போது உடனிருந்து உதவி செய்வது என ஒரு சீடன், குருவுக்கு சேவை செய்வது போல செய்தார். ஆனால், கல்லூரி மாணவர்களில் ஆசிரமத்துக்கு அழைத்துப் போவதற்காக அவர் காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப் படவில்லை. தக்க தருணம் வரும்போது நானே அழிப்பேன் என காந்தியடிகள் கூறி விட்டார். காந்தியடிகள் மறைவு வரை அவருக்கு அழைப்பு வரவேயில்லை. காந்தியின் மறைவுக்குப் பிறகு, காந்தியடிகளின் கடிதங்கள், கட்டுரைகள், பேச்சுகள் என் எல்லாவற்றையும் தொகுக்கும் பணி அவருக்குக் கிடைத்தது. அப்போது அவருக்கு வயது 63. அதையே அவர் தனக்கு காந்தி கொடுத்த அழப்பாகவே எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக செய்தார். கிட்டத்தட்ட 50000 பக்கங்கள். ஆனால், அவருடைய அந்த அர்ப்பணிப்பு மிக்க வேலை மிகச் சரியாகக் கண்டு கொள்ளப்படவேயில்லை. காந்தியின் ஆக்கங்களை நூறு தொகுதிகளாகத் தொகுத்தவர் சுவாமிநாதன். நூறவது தொகுதியில் தொகுத்தவர்கள் பட்டியலில் அவருடைய பெயரும் பத்தோடு பதினொன்றாகச் சேர்க்கப்பட்டிருந்தது. அவ்வளவே. வெளியீட்டு விழாவில் எந்தத் தலைவரும் சுவாமிநாதன் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை.தன் பெயரை ஒருபோதும் முன் வைத்துக் கொள்ள விரும்பாத தொண்டர் இவர். இது காந்திய சிந்தனைகளை தன் வாழ்க்கை முறையாகக் கைக் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.

லண்டனிலிருந்து மருத்துவம் பயின்று இந்தியா திரும்பிய தி.செ.சௌ. ராஜன், திருச்சி பகுதியில், கதர்ப்பிரச்சாரம்., மது ஒழிப்பு போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டதோடு, காங்கிரஸுக்கு உறுப்பினர்கள் சேர்ப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டார். அவரி சிறை வாழ்க்கையை அனுபவித்தபோது, சிறையில் பலருக்கு மலத் தொற்று ஏற்பட, இவர் மருத்துவராக இருந்ததால், தானே, பலருக்கும் மல மாதிரியை சோதிக்கும் பணியைச் செய்தார்.அதனால், அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது.அதனால், மருத்துவமனையில் சேர்ந்து சிக்கிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரை, மருத்துவமனையில் வந்து பார்க்க வந்த மாகாண சிறை அதிகாரி அவர் செய்த சேவையைப் பற்றி பாராட்டாமல், உடனடியாக மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட உத்தரவிட்டார். இப்படி எந்த எதிர்பார்ப்புமில்லாமல், துன்பங்களை அனுபவித்த ராஜன் போன்றவர்கள் காந்தி என்ற அந்த ஈர்ப்பு மையத்தில் மட்டுமே நின்றிருந்தார்கள்.

இதைப்போலவே, இங்கிலாந்திலிருந்து வணிக நிர்வாகவியல் படித்து முடித்த இளைஞராக வந்த ஜே.சி.குமரப்பா, தான் எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளைக் காட்டுவதற்காக வந்தவர்தான். ஆனால், காந்தியால் ஈர்க்கப்பட்டு யங் இந்தியாவில் பல கட்டுரைகளை எழுதினார். இங்கிலாந்து அரசு கோடிக்கணக்கில் வரிப்பணத்தை வசூலித்துக் கொண்டு, இன்னும் இந்தியா, இங்கிலந்துக்குக் கடன் பட்டுள்ளது என் அறிவித்தது. குமரப்பா, இங்கிலாந்து, தன் போர்ச் செலவுக் கணக்கையெல்லாம் இதில் சேர்த்துள்ளது என்க் கண்டுபிடித்து அறிக்கை சமர்ப்பித்தார். அத்னால், அவர் சிறை செல்ல நேர்ந்தது. குமரப்பா, பொது நிதி மிகச் சரியாகக் கணக்கு வைக்கப்பட வேண்டும் என்பதிலும், நிதியைக் கையாள்வதிலும் மிகவும் கறாராக இருந்தார். பீகார் நிவாரணப்பணிகள், மற்றும் காந்தி திரட்டிய நிதியை கணக்கு வைத்துக் கொள்வது போன்ற பணிகளை அவர் மிகச் சரியாக செய்து வந்தார். கிராமியத் தொழில்கள், கால்நடைகளின் நல்வாழ்க்கை போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தினார். இப்படி காந்தியின் அடியொற்றித் திறமையாக பணியாற்றியவர் குமரப்பா.

1928 ஆம் ஆண்டு காந்தியடிகள் இலங்கைக்குச் சென்றிருந்தார். அங்கு காந்தியால் கவரப்பட்ட ராஜகோபால், இந்தியா வந்தார். வைத்தியநாதய்யரின் பரிந்துரையின் பேரில் காந்தி ராஜகோபாலை ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார். அந்நியத் துணிகள் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். உப்புச்சத்தியாக்கிரகத்தில் பங்கெடுத்துக் கொண்ட பிறகு, நானூறு மைல்கள் நடைப்பயணமாகவே சென்னை வந்தார். வரும் வழியெல்லாம் மக்கள் சந்திப்பு பிரச்சாரங்களை நிகழ்த்தினார். இவர் தன் வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். அதில் காந்தியடிகள் கண்ணீர் விட்டு அழுத இரண்டு நிகழ்ச்சிகளைப் பதிவு செய்துள்ளார். புரட்சிகர இளைஞர் ஒருவர் சிறைக் கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆங்கிலேய அதிகாரி ஒருவரை சுடுவதற்குப் பதிலாக, வேறொரு அதிகாரியைச் சுட்டு விடுகிறார். இதை எதிர்த்து காநதி அகமதாபாத் காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். யாரும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது அகிம்சைக் கொள்கைகளை தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கே புரிய வைக்க முடியவில்லையே என்று கண்ணீர் விட்டு காந்தி அழுதார்.

மற்றொன்று, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, எங்கு பார்த்தாலும் மத மோதல்கள். ஒரு சீக்கிய கிராமத்தினை பகைக் கும்பல் முற்றுகையிட்டு, அங்கிருந்த 74 இளம்பெண்களை மணமுடிக்கத் திட்டமிட்டனர். அந்தப் பெண்கள் குளித்து வருகிறோம் என்று சொல்லி சென்று, தண்ணீரில் மூழ்கி உயிர் விட்டனர்.உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரே ஒரு பெண்ணை சுசிலா நய்யார் உயிர் பிழைக்க வைத்தார். அப்போதும், காந்தி அகிம்சை வழிக் கொள்கைகளை யாருமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என்று கண்ணீர் விட்டு அழுதார்.

காந்தியோடு பழகும் வாய்ப்போ, இருக்கும் வாய்ப்போ கிடைக்கப் பெற்றவர்கள், தன்னெழுச்சியாக அவரைப் போல தாங்களும் மாறி விடுகிறார்கள். அது அவரது ஆளுமையின் பலத்தையே காட்டுகிறது.அவினாசிலிங்கம், காந்தியுடனான தன் அனுபவங்களை, :நான் கண்ட மகாத்மா” என்று ஒரு நூலாகத் தொகுத்துள்ளார். அதில் குறிப்பிடுகிறார்: அவரிடம் பேசும் விஷயங்களை விட, அவர் நம் மீது காட்டும் அன்பும்,அதன் வழியாக நம் மனத்தில் உருவாகும் எழுச்சியும் மிகமிக முக்கியமானவை. அவரிடம் சென்று வரும் ஒவ்வொரு முறையும், உயர்ந்த லட்சியங்களப் பின்பற்றும் மனவலிமை தோன்றுகிறது.உயர்வான செயல்களில் நம்பிக்கை பிறக்கிறது. சோர்வு அகன்று விடுகிறது. வெறுப்பு மறைந்து விடுகிறது எல்லாவற்றுக்கும் மேலாகநாமும் உயர்ந்த செயல்களைச் செய்து சாதிக்க முடியும் என்கிற எண்ணமும் துணிச்சலும் உருவாகிறது. அதுதான் காந்தியடிகளிடம் இருக்கும் சக்தி அது நம்மையும் அறியாமல் நம்மை உயர்த்துகிறது” என்று குறிப்பிடுகிறார். அவினாசி குறிப்பிட்டுள்ள இந்த வரிகளே காந்தி எப்படி ஒரு காந்த விசையாக இருந்து தன்பால் தொண்டர்களை ஈர்த்திருக்கிறார் என்பதை நமக்கு புரிய வைக்கும்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுமைகள் பற்றிய புத்தகங்களைத் தேடி எடுத்து பாவண்ணன் தொகுத்துள்ளதை வாசித்து இப்படி பல தகவல்களப் பெற்றுக் கொள்ள முடிகிறது. புத்தகங்களையே வாசிக்கும்ஆவல் எழுகிறது. ஒரு சில கட்டுரைகளில் மட்டுமே புத்தகங்களின் பெயர் கிடைக்கின்றன..

இப்படி வெளியில் அறியப்படாத ஆளுமைகளை தெரிய வைப்பதில் ஈடுபட்டிருக்கும் பாவண்ணன் பாராட்டுக்குரியவர். ஒரு கட்டுரை எழுத அவர் எத்தனை நூறு, ஆயிரம் பக்கங்கள் படித்திருக்க வேண்டும் என்ற மலைப்பு எழுகிறது. அடுத்த தொகுதியையும் கொண்டு வரப்போவதாக முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். பாவண்ணன், எப்போதுமே, தான் படித்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அதிக விருப்பமுள்ளவர். தனக்குப் பிடித்த கதைகள், நாவல்கள், கவிதைகள், நல்ல சினிமாக்கள், நல்ல ஓவியங்கள், நல்ல இசை என பலவற்றைப் பற்றியும் கட்டுரைகளாகவும்,, தொகுப்புகளாகவும் கொண்டு வந்திருக்கிறார். அந்த வரிசையில் இப்போது இந்தத் தொகுப்பு. பல தலைவர்கள் பற்றிக் கூட தெரிந்து கொள்ளாத, கொள்ள முடியாத, இருட்டடிப்பு செய்யப்படுகிற இன்றைய சூழலில், தேடித் தேடி அவர் காந்திய ஆளுமைகள் பற்றி தொகுத்திருப்பது மிகுந்த போற்றுதலுக்குரிய செயல்.

சிறப்பான முறையில் வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகத்தினர் பாராட்டுக்குரியவர்கள். அட்டை வடிவமைப்பு சிறப்பு. அட்டையில் பதிதிருக்கும் முகங்களை அந்தந்தக் கட்டுரையின் தலைப்பிலும் பதித்திருந்தால் புரிதலுக்கு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அது போல கட்டுரைத்தலைப்புகளில் அடைப்புக் குறிக்குள் எந்த தலைவர் பற்றியது என்ற பெயரையும் போட்டிருக்கலாம். புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது காந்தியக் கொள்கைகளின் மீது பற்று ஏற்படுவது உறுதி.

 

( சத்தியத்தின் ஆட்சிஆசிரியர்: பாவண்ணன்வெளியீடு : சந்தியா பதிப்பகம், விலை: ரூ. 175/- பக்கங்கள்;176)


பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் –ரா. பாலசுந்தர்

$
0
0

பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி, இந்த ஆண்டு நான் வாசித்த முதல் கவிதை தொகுப்பு, பரிந்துரைத்த பாவாவிற்கு மிக்க நன்றி. பெயரே மிக வித்தியாசமாக, சிந்திக்கவும், தேடவும் தூண்டக்கூடியத் தலைப்பு, யாதனம் என்றால் மரக்கலம், தெப்பம், வேதனை, துயரம் என்று பொருள் தருகிறது தமிழ் அகராதி, ஆக அம்புயாதனம் என்றால், அம்புத்துளைக்கும் வேதனையைத் தரக்கூடியவள் காளி என்றோ அம்புகளால் செய்யப்பட்ட தெப்பத்தைக் கொண்டு காமத்தைக் கடந்து, காமத்தால் முக்தித் தரக்கூடியவள் காளி என்றோ பொருள் கொள்ளும் வகையில் வாசகத் தேர்விற்கு ஆசிரியர் சுதந்திரம் தருகிறார். இத்தொகுப்பு எங்ஙனமும் தலைப்புச் சார்ந்தோ, தலைப்பிற்கு பொருள் என்ன என்பது பற்றியோ கவிதையொ, குறிப்போ, பொருளோ இல்லை. இது ஒரு எழுத்தாளனால், கவிஞனால் வாசகனுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய சுதந்திரம் எனலாம்.

கொண்டாட்டத்திற்குரிய மகிழ்ச்சியான கவிதைகள் குறைவாக இருப்பதன் காரணம் என்ன? மகிழ்ச்சியை எழுதுவது அவ்வளவு சிரமமா? என்று புகழ்பெற்ற படிம எழுத்தாளர் ரமேஷ்பிரேதனிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர் அளித்த பதில்,

மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்றால் என்ன? நுணுகிப் பார்த்தால் ஆணுக்குப் பெண்ணின் உடம்பும், பெண்ணுக்கு ஆணின் உடம்பும்தான் மகிழ்ச்சி. என் அறிவுக்கு எட்டியவரை, காம நிகழ்த்துகலைதான் மானிடத்தின் முக்கியமான கொண்டாட்டம். இந்தக் கொண்டாட்டத்தைப் பற்றி எழுதினால்தான் எல்லோரும் பதற்றமாகி விடுகிறார்களே அய்யோ இவன் உடம்பைப் பற்றி எழுதுகிறான் என்று ஒதுக்கிவைத்து விடுகிறார்களே? ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றால், மாணவிகள் ஒதுங்கிச் சென்றுவிடுகிறார்களேஇந்தச் சமூகம் காமத்தைக் கொண்டாட்டத்திற்குரிய ஒன்றாகக் கருதவில்லை. அப்படி நினைக்க அச்சப்படும் சமூகம், அதன்மீதான கவனத்தை ஈர்ப்பைத் தவிர்ப்பதற்காகவே சினிமா, கலைநிகழ்ச்சிகள், குடி, கூத்து, அரட்டை என மனிதரின் முன் கொண்டாட்டம் இதுதான் எனப் பாசாங்கு செய்கிறது. இப்படியான சமூகத்தில் மகிழ்ச்சியான படைப்புகள் எப்படி உருவாகும்?” என்று விவரித்தார். இவர் அளித்த பதிலின் உண்மை நிலையை உணர நாம் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கவிதை நூல் அம்புயாதனத்துக்காளி. தமிழில் வெளிவந்து இருக்கும் முதல் தாந்த்ரீக பாலியல் கவிதைத்தொகுப்பு அம்புயாதனத்துக்காளி ஆகும்.

நமது இந்திய மரபில் காமத்திற்கு நீங்கா இடம் உள்ளது, இந்திய மரபு மட்டுமல்ல உலகின் தொன்மையான அனைத்து மதங்களின் அடித்தளமும், காமம் மற்றும் காமத்தை வென்றடைதல் என்பதன் கீழ் மேல்கட்டுமானம் கொள்ளும். இன்றளவில் ஆலயங்களில் காணப்படும் தாந்திரிக பாலியல் குறியீடுகள், பாலியல் சிற்பங்கள் அனைத்தும், காமம் என்பது வெறும் உடலின்பம் மட்டுமே, இவ்உடலின்பத்தைக் கடந்து உள்ளின்பத்தை அடைந்த முதல்வன், இறைவன் உள்ளே வீற்றிருப்பவன், இங்கிருந்து கடந்து செல்கையில் இத்தகைய காமகளியாட்டங்களை கடந்து உள்செல்கிறாய், எனும் குறியீட்டு பொருள் கொள்ளவே பாலியல் சார் சிற்பங்கள் வடித்துள்ளனர். அதுவும் நமது மரபில் கோபுரங்கள் விண்ணெழும் தீயின் குறியீடாக உவமப்படுத்தியுள்ளனர். அத்தகைய கோபுரங்களில் காமச்சிற்பங்களை அமைத்ததன் காரணம், காமத்தை எரித்து, தூய உள்ளத்தினனாக உள்ளே செல்லவேண்டும் என்பதற்காகவே, அந்த வகையில், பிரபு கங்காதரன் தன் காம உணர்வெழுத்தை காளி எனும் இந்திய மரபு ஒற்றைத்தளத்தில் ஏற்றி தன் காம உணர்ச்சிகளை எரிக்கிறார். இத்தொகுப்பை முடித்து வெளிவருகையில் ஒருவித வெம்மை நம்மை ஆட்கொள்ளும். அந்த வெம்மை காமத்தின் மீதான காதலின் வெம்மை, காமத்தை முற்றழிப்பதற்கான வெம்மை.

இக்கவிதை தொகுப்பு தமிழில் இதுவரை வெளிவராத ஒற்றைப் பிம்பம் நோக்கி, ஒற்றைச்சாளரத்தின் வழியே தன்னை கண்டடையும் உள்முறை. ”நாம் பற்றுவதெல்லாம், தானும் பிறிதொன்றைப் பற்றி நிற்பதைத்தான். பேருந்தில் கம்பியைப் பற்றுகிறோம், கம்பியோ பேருந்தின் தளத்தைப் பற்றியிருக்கிறது, தளமோ சட்டகத்தைப் பற்றியிருக்கிறது, சட்டகமோ அடிதாங்கியைப் பற்றியிருக்கிறது, அடிதாங்கியோ உருளியைப் பற்றியிருக்கிறது, உருளியோ தரையைப் பற்றியிருக்கிறது, தரையோ பூமியைப் பற்றியிருக்கிறது, பூமியோ பிற கோள்களுடனான இழுவிசையைப் பற்றியிருக்கிறது, இவை எல்லாவற்றையும் அடக்கிய அண்டமோ பற்ற ஏதுமில்லாமல் வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்கிறது. ஏதோ ஒரு பிடி கிட்டாப் புள்ளியைத்தான் எல்லாமே ப்றறிக் கிடக்கின்றன. நாமும் பற்றத் தலைப்பட்டுச் சிக்கெனப் பிடித்தால் பற்றற்ற அந்தப் புள்ளியின் பிடி கிட்டாமலா போகும்?” அந்தப் பற்றும் பற்றற்ற பிடியாக காமத்தைக் காளியுடன் கையாண்டு, பற்றற்றான் பற்றினை பெற வள்ளுவரின் பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு வழி  கையாள்கிறார். கவிஞர். ஆக பற்றுவதே வாழ்வு என்று வாழ்வார்க்கு ஒன்று, ஒன்றையும் பற்றாது நிற்பவனைப் பற்றுக. அவனையே பற்றிப் பற்றிப் பற்றாமல் நிற்கப் பயில்க  என்பார் கரு. ஆறுமுகத்தமிழன். கவிஞரின் இப்பற்றினை ஒவ்வொரு கவிதையிலும் காணலாம்.

இக்கவிதைக்கு கவிஞர் கையாண்டிருக்கும், குறியீடுகள், உவமை அனைத்தும் தமிழுக்கு புதுமை. இதில் எந்தக் கவிதை முக்கியம், எது முக்கியமில்லை என்று பிரித்தரியா நிலையில் அனைத்தையும் பற்றும் விதத்தில் உள்ளது. நறை, ராஜபாட்டை, யோனி, நுசும்பு, கணுக்கால் என சில தொடர் பிரயோகங்கள் பயன்படுத்தினாலும், வெவ்வேறு சொல்லமைப்பில், புதிய பொருளில் அர்த்தப்படுத்தும் விதம் புதுமை.

நமது கவிதை மரபில் கவிஞர்கள் முதல் தலைமுறையில் இருந்து தங்களது அக தேடலை படிமத்தின் துனணக்கொண்டு படைத்துவருகின்றனர். அத்தகையவர்களின் ஆன்மிக உள்அகத்தேடலின் ஆதர்ச நாயகனாக பாரதியார், பிரமிள், நம்மாழ்வார், தேவதேவன் முதலிய கவிஞர்களை குறிப்பிடலாம். அவ்வரிசையில் பிரபுகங்காதரனை பின்பற்றி சமீப காலத்தில் அம்புயாதனத்துக் காளி போன்ற படைப்புகள் வரத்தொடங்கியுள்ளன. அதில் முக்கியமான மற்றொரு படைப்பு ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் காளியின் கூத்தில் ஒளியொரு தாளம் எனும் கவிதைத் தொகுப்பு.

இத்தகைய கவிதைகளின் அடிப்படை அலகாக இருப்பது கற்பனாவாதக் காமம் ஆகும். காளியின் கூத்தில் ஒளியொரு தாளம் கவிதைத் தொகுப்பிற்கான அறிமுகத்தில் கற்பனாவாதக் காமம் பற்றிய நிறை குறைகளை எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளது இத்தகைய கவிதைகளை அணுகுவதற்கு மிகவும் உதவிபுரிபவன,

கற்பனாவாதம் காமம் சார்ந்ததாக மட்டுமே நின்றுவிடுகையில் ஒரு வகையான சலிப்பை விரைவாகவே உருவாக்கிவிடுகிறது. கற்பனாவாதம் என்பது சிறகடித்தெழல். காமத்தில் சிறகடிப்பதற்கு சாண் அளவுக்கு அகலமான வலைக்கூண்டுதான் உள்ளது. எங்கெல்லாம் காமம் சார்ந்த கற்பனாவாதம் கலையாகிறதோ அங்கெல்லாம் அது அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருப்பதைக் காணலாம்.

காமம் மானுட உறவுக்குக் குறியீடாக ஆகும். இயற்கையுடனான முயங்கலின் அடையாளமாகும். காலம் வெளியென தழுவி விரியும் பேருணர்வாகும். இறையனுபவமாக ஆகும். நாம் கொண்டாடும் மகத்தான அகத்துறைப் பாடல்கள் அனைத்துமே அவ்வகையில் காமம் என்னும் எல்லையை கடந்தவையே. இயற்கை இல்லாத சங்கப்பாடல்கள், பெருமாள் இல்லாத ஆழ்வார்களின் நாயகிபாவப் பாடல்கள் எப்படி கவிதையாகியிருக்கமுடியும்?

நவீனத்துவக் கவிதை காமத்தை மட்டுமே காண்கிறது. ஒவ்வொன்றையும் அது எதுவோ அதிலேயே நிறுத்துகிறது அதன் யதார்த்த நோக்கு. ஆனால் ஒவ்வொன்றிலிருந்தும் உச்சத்தை, முடிவிலியை நோக்கி எழுகிறது கற்பனாவாதக் கவிதை. அனைத்தையும் அங்குசெல்வதற்கான வழியாக ஆகிறது. கற்பனாவாதக் கவிஞனுக்கு வாழ்க்கையின் அனைத்துக்கூறுகளும் பறவைக்குக் கிளைநுனி போல எம்பி எழுவதற்கான தளங்கள் மட்டுமே.

நவீனத்துவத்தின் பார்வைக்குள் கற்பனாவாத அழகியலுடன் எழுதப்படும் கவிதைகளில் பல வெறுங்காமத்தையே வெளிப்படுத்துகின்றன. அவை அந்தக் கவிஞன் என்னும் தனிமனிதனின் அக அவசங்களை நோக்கி மட்டுமே நம்மைக் கொண்டுசெல்கின்றன. அவற்றுடன் நாம் நம்மை அடையாளம்கண்டுகொள்கையில் நம்மை பாதிக்கின்றன. நம் உணர்வுகளை அலைக்கழிக்கின்றன.ஆனால் அலைக்கழிக்கும் எந்த உணர்ச்சியிலிருந்தும் நாம் எளிதில் விடுபட்டுவிடுகிறோம். அதைப்போலவே நவீனத்துவக் கவிதை அளிக்கும் அந்த உணர்வூசலை மிக எளிதில் நிறுத்திக்கொள்கிறோம். என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

இக்கவிதைத் தொகுப்பில் இருந்து ஓரிரு கவிதைகள் இங்கு தரப்படுகின்றன. இவ்விரண்டு கவிதைத் தொகுப்பில் உள்ள ஒற்றுமைகள் இக்கவிதைகள் நமக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளன.

உதாணத்திற்கு,

நாள் முழுக்க

நாடி நரம்புகளெங்கும்

ஒரு புதிர்குறித்த புரிதல்வேண்டி

முத்தங்களின் கருத்தரங்கங்கள்

நடந்துகொண்டிருக்க

பகலோரமாய் நிழலில் அமர்ந்து

மணற்கிண்ணத்தில் நிரம்பியிருந்த மதுவை

நிதானமாய் அருந்திக்கொண்டிருந்தது இரவு

அப்போது அவ்வழியாய்

நொண்டியடித்தபடி கண்டும் காணாமலும்

சென்றுகொண்டிருந்தது ஒரு கனவு”

எனும் கவிதை பிரபு கங்காதரனின் நீண்ட முத்தத்திற்கு என வரும் கவிதையுடன் ஒத்துப்போவதைக் காண முடிகிறது.

காளியின் இதழ்கள் களிமண் நிலத்தின் வெடிப்புகளாயிருக்கிறது வயல் நண்டாய் ஊடுருவிப் போகிறேன்எனும் கவிதையில் உதடு வெடிப்புகளை களிமண் நிலத்தின் வெடிப்புகளுக்கு உவமைப்படுத்துகிறார். மற்றொரு கவிதையில் காளியின் உடலை வருணிக்க ஆம்பல், களிமண் வாசனை, வைகாசியில் பழுத்த புளியின் வாசனை என தொடங்கி, காமத்தின் முதன்மை தளமான ஆதிவாசியாகிறேன் உன்னை நுகர்கையில் எனும் முடிவில் காமத்தின் அடியை தொட்டுச்செல்கிறான் கவிஞன்.

அடர்வனம் நாணும். காளியின் கெண்டைக்கால் உரோமம் காண்கையில்.

மரவட்டை போல் ஊருமென் மீசை காளி, வியர்வையாய் வழிந்தோடுகிறேன்,

அளவிற் பெரிய சதுப்பு நிலத்தை பௌர்ணமியிரவில் கடப்பது போலானது காளியுடனான முயக்கம், போன்ற பல புதிய உவமைகளை பயன்படுத்தி, சொற்களுக்கான புது அர்த்தத்தை காமத்தில் தன்னைத் தேடுவது போன்று தேடுகிறார் கவிஞர். அரைஞான் கயிற்றை வெள்ளிநதிக்கு ஒப்பிடும் உவமை என நீண்ட பட்டியல் போடலாம் கவிஞனின் உவமப்புதுமையை வெளிக்கொணர

எடுத்துக்காட்டாக,

ஒரு மலைச்சரிவின்

கருத்த பாறையின் மேல்

படர்ந்திருக்கிறாள் காளி

நீ..ண்……ண்..ண்……

முத்தத்தின் முடிவில்

மலைப்பாம்பாய்

எனை விழுங்குகிறாள்

கதகதப்பான

அவள் கருப்பைத்

தேடியமர்ந்து கொள்கிறேன்

 

என்ற கவிதையில் நீண்ட முத்தத்தின் கால அளவை காட்ட, சுஜாதா பயண்படுத்தும், அவன் மாடியிலிருந்து மெதுவாக

                                                                                                           

                                                                                                                       

ங்

                                                                                                                                   

கி

போன்ற உத்தியைப் பயன்படுத்தியிருக்கும் விதம், அந்த முத்தத்தை நாமும் நீண்ட நேரம் அனுபவிக்கும் ரசனையை ஏற்படுத்துகிறது. வாசக விருந்து என்றும் கொள்ளலாம்.

 

நீர் கொண்டு போகும் நத்தைப் போலலெனை முதுகில் சுமத்தியிருக்கிறாள் எனும் வரியில், நீர் போன்று தான் மிகவும் இயல்பானவன் என்று குறிக்கிறார். இக்கவிதைகள், ஆன்மீகத்தின் ஊற்றுக்கண் என்பதற்கு இந்த ஒருக்கவிதைப் போதும்,

 

முன்னும் பின்னும்.

பின்னும் முன்னும்.

யென நாவால் தவழ்ந்துன்

திருமேனியளந்து பிறவாப்

பேறடைவேன் மாகாளி

 

எனும் கவிதையை சுட்டலாம்பக்தி இலக்கியத்தில், இறைவனை துதிக்கும் பாடல்களின் ஒருவகை, கேசாதி பாதம், பாதாதி கேசம் என்பது. அதாவது இறைவனை பாதத்தில் இருந்து தலைவரை பாடுவது பாதாதி கேசம், தலையிலிருந்து பாதம் வரை பாடுவது கேசாதி பாதம் என்பதாகும். அதுபோன்று முன்னும் பின்னும். பின்னும் முன்னும் நாவால் தவழ்ந்து துதிப்பதாக இக்கவிதையைக் கொள்ளலாம் நாம். இதுபோன்று பலக் கவிதைகளை கூறப்போனால் மொத்தக் கவிதையையும் கூறிவிடுவதாக அமைந்துவிடும் என்பதால் இனி கவிதைகளைப் படித்து இன்பம் நுகர இத்தொடு நிறுத்துகிறேன்.

 

காளியெனும் பிம்பம் நம் மரபில், கோவத்தின், தீயசக்தியின், பயத்தின் குறியீடாகத்தான் கொள்வோம். அத்தகைய பிம்பத்தை, அன்பின், காமத்தின், காதலின் குறியீடாக் கொண்ட கவிஞனின் துணிச்சல் எதிலும் அன்பைக் காணும் நோக்கை அறிவுறுத்துகிறது.

 

காமம் வழியும் முக்தியை அடையலாம் என்று நவீனத்துவ வழியில் நிரூபிக்கும் தமிழின் முக்கிய ஆவனம் அம்புயாதனத்துக் காளி.

கோம்பை –வைரவன் லெ.ரா சிறுகதை

$
0
0

மட்டி குலையை கயிறில் மாட்டும் போதே நாடாருக்கு எரிச்சல் கூடியது. மட்டி பரவாயில்லை அடுத்து ஏத்தன் குலை. ஆள் கசண்டி, கஞ்சப்பிசினாரி. கருத்த உழைத்த தேகம்.சிறிதாய் வளமாய் முன் பிறந்திருக்கும் தொப்பையின் மேலே தொப்புள் உள்மறைய கட்டியிருக்கும் சாரம். காலில் லூனார்ஸ், வாங்கி பலயுகம் ஆயிருக்க வேண்டும். தேய்ந்து தேய்ந்து மறுப்பக்கம் நோக்கினால், இப்பக்கம் மங்கலாய் காணலாம். வயதை அறிய விசாரணை தான் வேண்டும். சரியான சீரான பற்கள் வரிசை, நாடார்களுக்கு பொதுவாய் உழைப்பில் அபரிதமான ஈட்டு நம்பிக்கை. இதன் இணைக்காரணியோ இவர்க்கு கோபம் அதிகம், அசல் நாடாரை விட.

வழக்கமாய் இங்குதான் அலைவான், இன்றென்ன ஆளையே காணும். மனதிற்குள் யோசித்தபடியே வெளியே ஓடு இறங்கி மிச்சம் நீண்டிருக்கும் பனையில் கட்டிய கயிறில் மட்டியை மாட்டவும் குழையின் அடியில் மெலிந்த இரு கை தாங்கி கொண்டது.

நாடாரே, கீழ தொங்குது. தூக்கி பிடிச்சு மாட்டும்என்றான் கோம்பை.

நாடாருக்கு கோபம் பொங்கி, ஓங்கி படாரென்று அவன் முதுகில் அடித்தார். “பட்டிக்கு கொழுப்ப பாத்தியா, கட்டழிஞ்சு போவோனே. தூக்கி பிடில புலையாடி மவனேஎன்றார்.

நானும் குழையத்தான் வோய் சொன்னேன், அடிச்சிட்டீரேஎன்றான் கண்கள் கலங்கியபடி.

மொத்தமாய் எல்லா தொங்க விட்டவுடன். நாடார் பத்து ரூபாயை நீட்டினார், அவருக்கும் அவனுக்குமாய் டீ கடையை நோக்கி டூர் டூர் என்று வாயால் ஒலி எழுப்பி, அவன் மட்டுமே அறிந்த முன்னே நிற்கும் குதிரையை எழுப்பி அதன் மேல் ஏறி டீ கடைக்கு சென்றான்.

கோம்பை இதுவா பெயர், சூர்யபிரகாஷ் இதுதானே இட்ட பெயர். சாலியர் தெருவில் வீடு, அப்பா பள்ளிக்கூட வாத்தியார். கைக்குழந்தையில் என்ன குற்றம் கூற முடியும், மூன்று வயதை கடந்தவுடன் தான் சிறிது விளங்க ஆரம்பித்தது. இடது வாயின் ஓரம் வடியும் எச்சில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்த பற்கள், எப்போதும் முன்மடிந்த நாக்கு, அங்கும் இங்கும் அலைக்கழிந்து நிற்காது ஓடும் கால்கள். சிலநேரம் அசையாது எதையோ உற்றுநோக்கும் பாவம்.

அப்பனுக்கோ காரணமா வேண்டும், இது போதாது. மாலை வரை கையில் புத்தகம், பின்னிரவு வரை மதுகுப்பி. அம்மைக்கு வாய் உண்டு, உண்ண மட்டுமே. இவன் பிறந்து என்ன வருத்தமோ, ஆள் மெலிந்து விட்டாள். அப்பனின் அங்கலாய்ப்பு அடுத்த குழந்தையின் அழுகுரல் அவ்வீட்டில் இவனை அடுத்து ஒலிக்கவில்லை.

வினோதம் என்னவென்றால் இத்தெருவில் இரண்டு வீட்டுக்கு ஒருவர் சூர்யபிரகாஷ் போல, யார் வீட்டு இசக்கியின் சாபமோ. எது எப்படியோ புதிதானவரின் கண்களில் நுழையும் இத்தெருவின் காட்சி கொஞ்சம் மனதை சங்கடப்பட வைக்கும்.

குடியின் வெறியோ, மகனின் நிலை கண்ட கையறு நிலையோ, எதுவும் செய்யவியலா இயலாமையோ. எதை தீர்க்க அப்பாவின் கைகளின் உள்காய்ப்புக்கு இவன் வேண்டும். விவரம் அறியும் வயதில் பாதி நாட்களை அவன் சங்கிலியில் கழித்திருந்தான். சங்கிலிக்கு பெரிதொன்றும் தேவையில்லை. பேச்சிலோ செய்கையிலோ காணவியலா காரியம், சட்டென ஆள் எங்கோ மாயமாகும் கண்ணன். பின் சுடுகாட்டிலோ, தோப்பிலோ பிடித்து அடிமாடாய் வீட்டுக்கு அழைத்து வர வேண்டும். இதுதான் சங்கிலியின் சேதி. சிறுவயதில் சூரியனை பெரிய மின்விளக்கு என்றே அவன் அறிந்திருந்தான். நிலவு மென்மையாய் ஒளி பரப்பும் பெரிய இரவு விளக்கு அவ்வளவே.

எந்த போதி மரத்தின் அடியில் உட்காந்தோரோ, இல்லை எந்த சித்தார்த்தனை கண்டாரோ அவனை அடிப்பதை கைவிட்டார். மாறாய் என்றும் குடியை விடவில்லை. ஐந்து வயதில் காலில் மாட்டிய சங்கிலி அவன் பத்தொன்பது வயதில் தான் திறந்தது.

சில பெண்கள் சபிக்கப்பட்டவர்கள், கட்டியவனையா இல்லை பெத்தவனையா எவனுக்காக வருத்தப்பட, கண்ணீர் சிந்த. மெலிந்த தேகம் மேலும் சிறுக்கும். நேரத்திற்கு பொங்க, துணி துவைக்க, வீடு பெருக்க பாதி நேரம் அதிலே கழிந்து விடும். இவனின் பீயும் மூத்திரமும் இப்போதெல்லாம் ஒழுங்காய் அவனே வெளியேற்றி விடுகிறான். சிலநேரம் பெத்தவளின் கண் முன்னே அம்மணமாய் ஓடுவான். அம்மைக்கு எத்தனை வயதிலும் மகன் மகன் மட்டுமே.

அவிழ்ந்த சங்கிலியின் பதினான்கு வருட இறுக்கம், அதன்பின் இரவில் மட்டுமே வீட்டில் தஞ்சம் அடைவான். இருமி இருமியே நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அம்மைக்கு தினம் இரவு அவன் வீட்டிற்கு வந்தாலே ஆசுவாசம் தான். அப்பனுக்கு குடலிறங்கி குடி குறைந்து, கோவிலும் கோவிலும் என நாட்கள் நீள்கிறது. வாத்தியார் சோலி மாதம் பென்சன் கிடைக்கிறது, வீடும் சொந்தம். வாழ்வதற்கு தகும் இச்சிறிய குடும்பத்திற்கு.

கடைத்தெருவுக்கு பத்தொன்பது வயது முதல் வருகிறான். இப்போது நாற்பதை நெருங்கி இருக்கும். இன்றைக்கும் நிக்கர், மேலே வெளிறிய ஒரு சட்டையை அணிந்திருப்பான். மாதம் ஒருமுறை அப்பா ஒழுங்காய் முடி வெட்டி விடுகிறார், கூடவே சவரமும். இன்றும் வாய் ஒழுகுகிறது, ஒழுங்காய் அவனே துடைக்க பழகி கொண்டான். காலில் செருப்பு அணிவதில்லை. எப்படியோ நகங்களை சீராய் வெட்டி கொள்வான். கால்களின் இடைவெளியை சீராய் வைப்பதில் என்ன கஷ்டமோ, நிற்கும் போது வலது கால் முன்னே வளைந்துபின்னி இடது பின்னே நிற்கும். நடப்பதில் குறையில்லை, என்ன குதிகால் முதலில் நிலம் தொடும்.

கடைத்தெரு வந்த புதிதில், இதோ இதே நாடார் கடையில் வாழை பழம் வேண்டும் என அடம்பிடிக்க, நாடார் தலையில் தட்டி காசு கேட்டுள்ளார். “பழம், பழம் என கூறியதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தான். கோவக்கார நாடார் நாக்கை மடித்து தள்ளி போல எரப்பாளி, பட்டி. தொழில் நேரத்துலஎன கத்த, உடனே பக்கத்தில் இருந்த வெஞ்சன சாமான் கடையில் கை நீட்டி காசு கேட்டுள்ளான், அவர் பயந்த சுபாவம். வேண்டா வெறுப்பாய் முதலாளி காசை கொடுக்க, நாடார் பழத்தை நீட்டியுள்ளார்.

அன்றைய நாள் வெஞ்சன சாமான் கடையில் அமோக வியாபாரம். ஜோசியம், கைராசியில் நம்பிக்கை கொண்ட முதலாளி அடுத்த நாளும் அவன் கையில் காசை கொடுக்க அவன் வாங்கவில்லை. மாறாய் பக்கத்தில் இருந்த சைக்கிள் கடையில் காசு வாங்கி நாடார் கடையில் பழம் வாங்கி உள்ளான். அன்றைக்கு என ஊரில் பலர் சைக்கிள் பஞ்சர் போல, ஓரளவுக்கு லாபமே.

அப்போதில் இருந்தே இவனாய் கை நீட்டி காசு கேட்டால் யாரும் மறுப்பதில்லை, பதிலாய் எல்லாருக்கும் அதில் விருப்பமே. இருப்பினும் இவன் என்றைக்கும் வாங்குவதில்லை, சிலநேரம் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் காசு யாரிடமும் வாங்க மாட்டான்.

ஒரு நாள், நாடார் கடைத்தெரு வியாபாரிகள் கூட்டத்தில் ஆளு கோம்பையன் மாரி இருந்தாலும், கை ராசி காரனாக்கும். உத்தேசிக்கணும் இவன மாரி ஒருத்தன் மாட்ட. கிடக்கட்டும் எங்கனியும். ஆளுக்கு மாசம் கொஞ்ச காசு கொடுப்போம். முதலயா கொடுக்க போறோம்.” என்று சொல்ல. நாடாரின் பேச்சுக்கு மறுபேச்சு இன்றி எல்லாரும் ஒத்துக்கொள்ள கோம்பைக்கும் ஒரு வேலை கிடைத்தாயிச்சு. பேரும் புதிதாய் கோம்பை என சூட்டியாச்சு.

பின்னே அவன் செய்யும் வேலைக்கும் கூலிக்கும் மரமேறி பலா பறித்தவனுக்கு கொட்டை கொடுத்தது போல. லாபம் தானே அவர்களுக்கு, கோம்பைக்கு பத்து காசும் ,ஒரு பாளையம்கோட்டான் பழமும் ஒன்றுதான். கொடுப்பதை வீட்டில் கொடுத்து விடுவான். கிடைப்பதை உண்பான், சுகபோகி எதிலும் நிறைவை கண்டான். இதுதானே எங்கே பலர்க்கும் இல்லாதது.

நாடார் கடையின் ஓடு சாய்விற்கு மேலே விளம்பர பலகை ஒன்றை வைக்க விரும்பினார். பன்னாட்டு குளிர்பான நிறுவனம் இலவசமாய் கொடுத்த பெயர் தகர பெயர் பலகையை. ஆமாம் பெரிதாய் அவர்களின் முன்மொழிவும், கீழே சிறிதாய் நாடாரின் கடை பெயரும் இருந்தது அவ்வளவே. வந்தவர்கள் அரை மணிநேரத்திற்குள் மேலே கட்டி அடுத்த கடைக்கு விரைந்தனர். கடைத்தெருவில் உள்ளோரின் கண்கள் அந்த விளம்பர பலகையை நின்று ஒருநிமிடம் கவனிப்பதில் என்ன பெருமையோ, உள்ளூற மகிழ்ச்சிதான். நாடார் தினம் ஒருமுறை மேலே விளம்பர பலகையை பார்த்துக்கொள்வார். கோம்பைக்கு என்னவோ அந்த பலகையில் வெறுப்பு. வழக்கமாய் கடையின் ஓட்டு சாய்வின் அந்தப்பக்கம் எழும்பி நிற்கும் புளியமரத்தின் பின்நிழலை அதன் வழியே நோக்குவதில் இவனுக்கு விருப்பம். அக்காட்சியை மறைத்து விடுகிறது.

வருடம் முழுவதற்கும் விட்டு விட்டு மழை பொழியும் ஊர். மழையோடு ஊழிக்காற்றும் இணைந்து கொண்டு பேயாட்டம் போட்டது. கடை திறந்தாலும், சாமான் வாங்க ஆள் வருவதில்லை. பாதி கடை பூட்டி இருந்தது. கடைத்தெரு சாலை எங்கும் அங்கங்கே மழை நீர் கட்டி, ஆண்டவன் அதான் நாஞ்சிலை ஆண்டவன் நெஞ்சிலே செருகும் பட்டயமாய் கிடந்தது.

அந்நாட்களிலும் கடைத்தெருவுக்கு கோம்பை சரியாய் வருவதுண்டு. எந்த வருகைப்பேட்டில் ஒப்பிட வேண்டுமோ. நாடார் கடையை பண்டிகை நாள், வெயில், மழை என எப்போதும் பின்னிரவில் பூட்டி காலை விடியும் முன்னே திறந்திடுவார். எள்ளு போல இடம் என்று சொல்லி சொல்லியே மூன்று நான்கு ஏக்கர் வாங்கி விட்டார். காடும் நிலமும் வீடும் இருந்தும் இரண்டில் ஒரு தீபாவளிக்கு தான் சட்டை வேஷ்டி.

அன்றைய நாள் காற்றின் வேகம் மெல்ல அதிகரித்தபடியே இருந்தது. கடைத்தெருவில் பெரும்பாலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. நாடார் கடையின் மேலே மாட்டியிருந்த பலகையின் ஒருபக்கம் கயிறு அறுந்து, காற்றின் வேகத்தில் அதன் போக்கிலே இழுத்தபடி ஆடிக்கொண்டிருந்தது.

நாடார் கடையில் இருந்த நீண்ட சவுக்கு கம்பின் துணைகொண்டு அவிழ்ந்த கயிறின் ஒருபக்கத்தில் கம்பை அடைகொடுத்து வைத்தார். சொல்லிவைத்தார் போல கோம்பையும் வந்து சேர்ந்தான்.

லேய், மேலே மெல்ல ஏறி. அந்த கயிறை இறுக்கி கட்டுஎன்று அவனை மேலே ஏற்றி விட்டார். நெடுநாள் மழை ஓட்டின் மேலே பாசி பிடித்து இருந்தது. கவனமாய் கால்களை அதன் மேல் வைக்க, நாடார் அவனை கவனித்தபடி இருந்தார்.

கயிறை இறுக்க அடைகொடுத்த கம்பை நீக்கி, பலகையை வசமாய் தொடையில் வைத்துக்கொண்டான். நாடாருக்கு பயம் எங்கே கீழே விழுந்து விடுவானோ என்று. “லேய், பிள்ளே பதுக்க செய்யணும். கவனம் என்று கத்தியபடியே நின்றார்.

சட்டென்று வீறு காற்று, கடையின் பின்னிருக்கும் புளியமரத்தின் கொப்பெல்லாம் ஆயிரம்கை விரித்து ஆடியது. மாட்டிய எல்லா கயிறும் அவிழ்ந்து, அவனின் கை நவிழ, தொடையில் இருந்த ஒருமுனையின் கூர் ஆழ பதிந்து, இரத்தம் சொட்ட.கோம்பை வலியால் துடித்தான். நாடார் அவனை மெதுவாய் பிடித்து கீழிறக்கி, கடையில் இருந்த துணியை புண்ணில் சுற்றிகட்டி அவனை இழுத்துக்கொண்டு, பக்கம் இருந்த ஆசுபத்திரி அழைத்து சென்றார். கோம்பையின் கண்ணில் நீர் வழிந்தபடியே இருந்தது. புண்ணில் மருந்து வைத்து, மாத்திரைகளையும் வாங்கி வீட்டிற்கு கொண்டு விட்டார். நாடார் கோம்பையின் வீட்டிற்கு வருவது அதுவே முதல்முறை.

பெரிய வீடு, சுண்ணாம்பு கண்டு பலவருடம் ஆயிருக்க வேண்டும். “ஆள் உண்டாபலமுறை அழைத்து உள்ளே நுழைந்தார், நீண்ட வீடு, வரிசையாய் அறைகள், எல்லாம் தூசும் சிலந்தி வலையும் படிந்து. மெலிந்த கூன்கிழவி சமையல் அறையில் கஞ்சி வடித்துக்கொண்டிருந்தாள். நாடார் அவளை அழைத்தாள், கோம்பை அரைமயக்கத்தில் இருந்தான்.

பிள்ளைக்கு அடிபட்டுட்டு, ஆசுபத்திரி கூட்டிட்டு போனோம். இன்னாருக்கு மருந்துஎன கையில் இருந்த மருந்தை அம்மையிடம் நீட்டினார்.

எதுவும் பதில் கூறாது வாங்கிகொண்டாள். ஏதோ ஒரு அறையிலிருந்து வெளிவந்த அப்பனோ எதுவும் கேட்காது, அவர்களின் மீது பார்வையை சிலநொடிகள் வீசி இருமியபடியே அவர் அறைக்குள் நுழைந்தார்.

அந்த வீட்டில் இருந்து வெளிவந்த நாடார், ஏதோ பெருத்த கனத்தை வாங்கிதான் வந்தார். கோம்பையின் நினைவு அடுத்த நாளும் நாடாருக்கு இருந்தது. வியாபார சூட்டில் நாளை செல்லலாம் என நினைத்து கொண்டார்.

நேரம் விடிந்து, கடையில் தெரிந்தவனை நிறுத்தி, கோம்பையின் வீட்டிற்கு விறுவிறுவென மிதித்து சைக்கிளில் சென்றார். வீடு திறந்து கிடந்தது. அழைத்தும் யாரும் வரவில்லை. மெதுவாய் உள்நுழைந்தார், ஏதோ அறையில் துணி அலசும் சத்தம் கேட்டது. கோம்பையை தூங்க வைத்த அதே அறைக்கு சென்றார்.

கோம்பை படுத்திருந்தான் புலம்பியபடியே, அருகே உண்டும் சிந்தியும் கஞ்சி தட்டம் கிடந்தது. மெதுவாய் கையை பிடித்தான், அனலாய் கொதித்து கொண்டிருந்தது உடல். அம்மையை அழைத்தார் அவள் உடல் நடுங்கியபடி காய்ச்சல் அடிக்காஎன்றாள், நீர் ஒழிகிய கண்களோடு. அவள் ஏதோ புலம்பினாள், நாடாருக்கு விளங்கவில்லை.

எதை நினைத்தாரோ, அவனை இறுக்கி பிடித்து தோளில் தூக்கி வந்த சைக்கிளை விட்டு ஆசுபத்திரிக்கு நடந்தார். வைத்தியம் முடிந்து, அவர்க்கு ஏதோ வீட்டில் விட மனம் எழவில்லை.

கடையின் உள்ளேயே அவர் மதியம் உறங்க சிறிது இடம் உண்டு, அங்கேயே போர்வை விரித்து அவனை கிடத்தி கவனித்து கொண்டார். இரண்டு நாள் இருக்கும், கோம்பை விழிப்பான், உண்பான் பின் உறங்குவான்.

மழை விட்டு சூரியனின் மென்மஞ்சள் ஒளி வீசி கொண்டிருந்தது. விற்று தீர்ந்த ஏத்தன் குலையை நீக்கி புதிதாய் கட்டிய கயிறில் தொங்கவிட குலையை தூக்கவும், மெலிந்த கை குலையின் அடிதாங்கி கொண்டது.

நாடாரே, குலையை தூக்கி கட்டும்என்றான் கோம்பை.

எரப்பாளி, தூக்கி பிடில. இரண்டு மூணு நாளாயிட்டு பிள்ளைய இப்டி பாத்து. தூக்கி பிடிமோஎன்றார்.

புலன் –சரவணன் அபி கவிதை

$
0
0
வலது கையில்லை
வலது காலில்லை
இழுபடும் நடை
மெதுமெதுவே குறைந்து
படுக்கைவசம்
சன்னலருகே பின்னொளியில்
அசைவற்ற சித்திரம்போல்
உணர்வின்றி துவளும் கரத்தைத்
எப்போதும் தாங்கும் இடக்கை
அருகமரும்
என்தலை கோதவே
தன் பிடிதளரும்
எனைப்பிரிந்து
இத்தனை வருடம் கழிந்தும்
உடல் ஒருபுறம் இழுபட
கனிந்த முகமும்
கலங்கிய விழிகளும்
சாலையில் காணுந்தோறும்
அவளையன்றி
வேறாரும் காணேன்
வேறொன்றும் உணரேன்

பச்சைக்குளம், அம்மையப்பன் –கமலதேவி கவிதைகள்

$
0
0

பச்சைக்குளம்

ஓரமாய் ஒதுங்குகிறது
கலைகிறது
மிதந்து திசையில்லாமல் நகர்கிறது
நீர் மேல் பாசி.
அத்தனை அலைகழிப்புகளையும்
சமன் செய்து அசைத்தபடி மிதக்கிறது.
பின்னொரு அதிகாலையில்
குளத்தை தன்னடியில் ஔித்தபடி
அசைவற்று நிற்கிறது
அன்றைய முதல் தொடுதலுக்காக.

 

அம்மையப்பன்

கொல்லிமலையின் முகடுகளில்
அந்தியின்  செவ்வொளி தயங்கி நின்று பரவ
தென்மேற்கில் மென்நீலம் விரிகிறது.
அந்த அணையும் சிலநிமிசங்களில்.
நீண்டமலையின் ஒரு உச்சியில்
வானை வாள்கீறிய தடமாய் மூன்றாம்பிறை.

விளையாட்டாய் – கா.சிவா சிறுகதை

$
0
0

சென்ற வேகத்தில் சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு என் மகன் குமரனை இழுத்துக்கொண்டு அந்த சிறிய க்ளினிக்குக்குள் சென்றான் சீனி. பின்னால் சென்ற நானும் என் மனைவியும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தொடர்ந்தோம். நான்கைந்து பேர் வரிசையாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில்  அமர்ந்து வெவ்வேறு திசைகளில் வெறித்துக்கொண்டிருந்தார்கள்.   டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்த மெலிந்த உடலும்  வெளிறிய நிறமும் கொண்ட இருபது வயது மதிக்கத்தக்க பெண்ணை அணுகி “டாக்டர் இருக்கிறாராம்மா” எனக்கேட்டு அவளின் இல்லையென்ற தலையாட்டலை தொடங்கும் கணத்திலேயே கேட்டான் “எப்ப வருவார்”.

“இன்னும் ஒரு மணி நேரமாகும்”
“நீங்களே ஊசி எதுவும் போடுவீங்களா, கொஞ்சம் எமர்ஜென்சி”
“மாட்டோம், டாக்டர் சொல்றதத்தான் போடுவோம்.இப்ப என்னாச்சு?”
“இந்தப் பையன் கால்ல பாம்பு கடித்துவிட்டது”
அந்தப் பெண் அதிர்ந்து எழுந்தாள்..”அய்ய்யோ ,எப்போ”
“இப்பத்தாம்மா அரைமணி நேரமாச்சு ”
“அண்ணே, பாம்புக்கடிக்கெல்லாம்  சரியான மருந்தெதுவும் இங்கேயில்லை, உடனே அறந்தாங்கியில இருக்கிற ஜி.ஹெச்சுக்கு போங்க. அங்கதான் டெஸ்டு பண்ணிட்டு ஊசி போடுவாங்க.போங்கண்ணே” என்றாள் பதட்டத்துடன்.
“அங்கேயே போறோம். முறி மருந்து எதாவது இருந்தாக் குடும்மா”
“அது மாதிரி எதுவும் இல்லண்ணா, தாமதிக்காம சீக்கிரம் போங்க” எனப் பதறினாள்.

அவளின் பதற்றத்தையும் தனதுடன் சேர்த்தபடி வேகமாக திரும்பி எங்களையும் இப்போது எங்களை வெறித்துபடி அமர்ந்திருந்தவர்களையும்  கடந்து வெளியே சென்று வண்டியில் என் மகனை ஏற்றிக்கொண்டு கிளம்பினான். நாங்களும் தொடர்ந்தோம். இருசக்கர வண்டிகளும் சில கார்களும் எதிர்ப்பட தூசி கிளம்பி முகத்தில் படரும் சாலையில் , பத்து கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அறந்தாங்கியை நோக்கி  சென்றோம்.

வானம் பார்த்த வயல்களால் பேணப்பட்ட நாங்கள் , வயல்களை வானம் கைவிட, நாங்களும் வயல்களை ஒத்தி என்ற பெயரில் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் விட்டுவிட்டு நகரத்திற்குச் சென்று இருபது வருடங்களாகிவிட்டது. முதலில் பொங்கல், தீபாவளி, செவ்வாய், பள்ளி விடுமுறைக்கு என ஊருக்கு வந்து கொண்டிருந்தோம். இப்போது ஒவ்வொன்றாகக் குறைந்து ,  வருடம் ஒருமுறையோ அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையோ என ஆகிவிட்டது.

ஒரு மாதத்திற்கு முன் அதிகாலை விழிக்கும்போதே மழுவய்யனார் நினைவுக்கு வந்தார். ஆச்சர்யமாக இருந்தது, எப்படி இத்தனை ஆண்டுகள் நினைவிலிருந்து மறைந்திருக்க முடியும். ஊரில் இருந்தபோது வாரம் ஒரு தடவை , கண்மாயின் அலை தழுவித் தழுவி மிருதுவான மணற்துகள் மீது கால் தடம் பதிய நடந்து , சுற்றி நிற்கும் ஆறு பனைமரங்களுடனும்  மஞ்சள் மலர் சூடிய ஆவாரஞ் செடிகளுடனும் தனித்திருக்கும் மழுக்கோவிலுக்கு சென்று சாம்பிராணி காட்டி வணங்கி வருவது வழக்கம். கோவிலென எதுவும் இல்லை. கண்மாய்க் கரையின் எல்லையில் நான்கு கருங்கல் தூண்களை ஊன்றி கூம்பாக பிணைக்கப்பட்ட  பனங்கை உத்திரத்தின்மேல் பனையோலை வேய்ந்திருக்கும். எந்த அடைப்பும் இல்லை. காற்று சிறு பிள்ளைகள்போல அந்த குடிலுக்குள் நுழைந்து வெளியேறி விளையாடும். சிலையெதுவும் பதிக்காமல்  அரைமுழ உயரத்தில் முனைகள் மழுங்கிய கல் இருக்கும். அதன்மேல் கொண்டு செல்லும் பூவை போட்டுவிட்டு விழுந்து வணங்கிவிட்டு பசங்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்புவோம். உருவம் எதுவும் இல்லாததால் அவரவருக்கு  பிடித்த மாதிரி தோற்றத்தை மனதில் கற்பனை செய்து கொண்ட  சாமியானதால்  அனைவருக்குமே நெருக்கமானவராக மழுவய்யனார் இருந்தார்.  தேர்வு எழுதப் போகும்போதோ விளையாட்டில் வெல்லவேண்டுமென எண்ணும்போதோ நண்பர்களுடன்   போட்டி போடும் போதோ மனதிலுள்ள கற்பனையுரு அய்யனாரை வேண்டிக் கொள்வோம். ஆனால்,ஊரைவிட்டு வந்தபின்  இருபது வருடங்களாக அவரைப் பார்க்கவேயில்லை. ஏன், நினைவில் கூட எழவில்லை.

இப்போது மனதில் தோன்றியவுடன் ஊருக்கு செல்லவேண்டுமென்ற எண்ணம் உடனேயே எழுந்தது. எப்போதும் உள்ள, விடுப்பு எடுக்க முடியாது, பள்ளிகள் இருக்கின்றன, ரயில் கூட்டமாக இருக்குமென்ற காரணங்களை உள்ளத்தின் உந்துதலைக் கொண்டு ஒருவழியாகக் கடந்து , நேற்று மாலை கிளம்பி காலையில் ஊருக்கு வந்தோம். நாங்கள் முன்பு இருந்த வீடு சிதிலமடைந்து உடைந்துவிட்டதால்    என் அத்தை பையன் சீனுவின் வீட்டில் தங்கினோம். என் அப்பாவின் பிரியமான தங்கை என்பதால் எனக்கும் அத்தையின் மீது அலாதிப் பிரியம். அவர்களின் பையன் சீனுவின் மீதும்தான். நாம் அன்பாயிருக்கும்போது அவர்களால் அசட்டையாக இருக்கமுடியுமா. ஒரே வயதென்பதால் ஊரிலிருந்தவரை ஒன்றாகவே திரிவோம். ஒருவரை மற்றவர் பிரிவதேயில்லை. கோடை விடுமுறையில் நெஞ்சில் சிலாம்பு பாய்ந்துவிடாமல் பனைமரத்தில் ஏறி,  அதிகமாக கருத்திடாத, ரொம்பவும் வெள்ளையாகவும் இல்லாத நுங்கு குலைகளை வெட்டி , வயிறுமுட்ட குடித்துவிட்டு கண்மாய்க்கு சென்று செரிக்கும் வரை ஆட்டம் போட்டுவிட்டு,  கோவைப்பழம் போல கண்கள் சிவக்க வீட்டிற்குவந்து, திட்டும்,  சில நேரங்களில் அடியும் வாங்குவோம்.      சுற்றியுள்ள ஊர்களில் சித்திரைக் கொடை விழாவிற்கு போடப்படும் வள்ளி  திருமணமோ,  அரிச்சந்திர மயான காண்டமோ  எந்த நாடகமாயிருந்தாலும்  விடியும்வரை பார்த்துவிட்டு  யாராவதொருவர் வீட்டில் இருவரும் படுத்துக்கொள்வோம். அப்படிக் கூடவேயிருந்தவனை பிரியவே மாட்டேனென அடம்பிடித்த என்னை  ஊரிலிருந்து  அழைத்துச் செல்வதற்கு அம்மா மூன்றுநாள் பட்டினி கிடந்தார்.

சீனுவுக்கு திருமணமாகி சில வருடங்களாகிறது. இன்னும் பிள்ளையேதும் இல்லை. என் பையனைத்தான் மாப்ளே, மாப்ளே எனக் கொஞ்சியபடி இருப்பான். ஊருக்கு வரும்போதெல்லாம் என்னோடு சுற்றிய இடங்களுக்கெல்லாம் அவனை அழைத்துக் கொண்டு செல்வான். பிரியமாய் இருப்பவர்களிடம் பிள்ளைகளும் ஒட்டிக்கொள்கிறார்கள் எந்தப் புகாரும் இல்லாமல்.
இன்று மதியம் கதிரறுக்கும் வண்டிக்கு சொல்ல பக்கத்து ஊருக்குச் சென்றதால் அவனால் மழுக்கோவிலுக்கு வரமுடியவில்லை. நான் மனைவி, பையனுடன் , விளைந்த மணிகளை வரப்பில் உரசியபடி மெல்ல அசைந்து கொண்டிருந்த அடர்மஞ்சள் நெற்பயிற்கள் காலணியணியாத பாதங்களில் மெல்லிய தடம் பதிக்க,  வரப்புகள் மீது நடந்தோம். ஆங்காங்கே நண்டுகளின் வளைகள் தென்பட்டன. சில நண்டு ஓடுகள் கிடந்தன. “ஓடுகள் மீது கால் வைத்துவிடாதீர்கள்”  என அவர்களை எச்சரித்தபடி நடந்தேன். கால் வைத்தால் ஓடு நொறுங்கி காலில் ஏறிவிடும். தேள் கொட்டியதுபோலக் கடுக்கும்.

வயலைத் தாண்டியவுடன்தான் கண்மாய்.  கண்மாயின் கழிமுகத்தில்தான் கோவில். மணலில் கால் பட்டபோது மனது சில்லென்றிருந்தது. புல்லின் மேல் புதைவது போல பாதம் புதையப் புதைய நினைவுகளெல்லாம் உள்நோக்கிப் போக வேகமாக நடக்க ஆரம்பித்தேன். எந்தக் கால்தடமும் கண்ணில் படவில்லை. யாரும் இந்தப் பாதையில் நடப்பதில்லையெனத் தெரிந்தது. சீனுவிடம் கோவிலுக்கு செல்லவேண்டுமென கூறியபோது “நான் போய் ஆறு மாசமாச்சு” என்றே சொன்னான். அவசர வேலையாக இல்லாமலிருந்தால் அவனும் வந்திருப்பான். காய்ந்துபோய் தரையோடு படர்ந்திருந்த புற்களை தாண்டி கோவிலருகே சென்று பின்னால் வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன். பதினைந்தடி தொலைவில் ஒரு காலை தூக்கியபடி பையன் நிற்க பதற்றம் உடல் முழுக்க தளும்ப மனைவி என்னை கையால்  அழைத்தாள் . என்னவென்று புரியாமல் , வேகத்தில்,  மணலில் கால்புதைய  நான்கே எட்டில் அவர்களை அடைந்தேன்.
“என்னாச்சுடா”
“பாம்பு கடிச்சிடுச்சுங்க..பய கால்ல”
“உண்மையாவா,ஏய்…முள்ளு ஏதாவது குத்தியிருக்குண்டா”
“இல்லப்பா, பாம்புதான்..அதோ கெடக்குது பாருங்க” எனக் கை காட்டிய பக்கம் கடுங்கோபத்துடன் திரும்பிப் பார்த்தேன்.

வெயிலில் காய்ந்து பழுத்துப் படர்ந்திருந்த நண்டுப் புற்களையொட்டி  ஒரு முழ நீளத்திற்கு வளைவளைவான சாம்பல் நிறப்பாம்பு கிடந்தது.  அதைப் பார்த்தவுடனேயே ஏனோ  சட்டென கோபம் தணிந்தது.   ஒரு கணம் கண் இருட்டுவது போல் இருந்தது. பயம்கூடாது .. கூடாது.. மனதிற்குள் சில தடவை கூறிக்கொண்டு அவன் காலை நோக்கினேன். முட்டியிட்டு மணலில் அமர்ந்து அவன் பாதத்தை என் தொடைமேல் வைத்து லேசாக ரத்தம் கசிந்த கடிமுனையை என் இரு கட்டை விரலாலும் அழுத்தினேன்.இரு சொட்டு ரத்தம் வெளிவந்தது.நிறம் எதுவும் மாறவில்லை.  கால் லேசாக நடுங்குவதை கையில் உணரமுடிந்தது.  சுற்றிலும் பார்த்தேன்.  சிறிய வாழை நாரொன்று கிடந்தது. அதில் படிந்திருந்த மணலை உதறிவிட்டு மணிக்காலில் இறுக்கிக் கட்டினேன்.

“தம்பி ,ஒண்ணுமில்லை, பயப்படாதே. கட்டியாச்சு.மேலே ஏறாது. டவுனுக்குப் போயி ஊசி போட்டுக்கலாம் ” என அவனுக்கு கூறுவதுபோல எனக்கும் கூறிக்கொண்டேன்.
“ஏங்க, வீட்டுக்குப் போகலாங்க” என்ற மனைவியிடம் “இவ்ளோ தூரம் வந்துவிட்டோம், சாமியக் கும்பிட்டுவிட்டு போயிடுவோம்.ஒரு அஞ்சு நிமிசம்” எனக் கெஞ்சும் தொனியில் கேட்கவும் அவளால் மறுக்க முடியவில்லை. “கொஞ்சம் பொறுத்துக்கடா, தம்பி”  என மகனிடம் கூறியபோது , அவன் முகத்தில் தோன்றிய  உணர்வுகள் வலியினால்தான் என்றே நம்பினேன்.  நான் உடனே கிளம்பாததற்கு ” ஒரு காரியத்திற்கென்று செல்லும்போது என்ன தடை வந்தாலும் அதை முடிக்காமல் திரும்பக்கூடாது ”  என என் அம்மா அவ்வப்போது கூறியிருந்தது  மட்டும் காரணமல்ல ,  உருத்தெரியாமல் மாறியிருந்த அணுக்கமானவரின் இணக்கமான  விழிகளென,  மனதாழத்தின் ஓரத்தில் , பயம் தேவையில்லையென துளி  நம்பிக்கையை தக்கவைத்த  அந்தப் பாம்பின் விழிகளும்தான்.

கோயிலையடைந்து,  அவர்கள் இருவரும் தரையிலேயே நிற்க நான் மட்டும்  என் முட்டியளவிற்கு இருந்த திண்டின்மீது ஏறினேன். அந்தக்கல் காற்று மோதி மோதி இன்னும் கொஞ்சம் மழுங்கியிருப்பதாகத் தோன்றியது. கொண்டுவந்த பூவை சாமி மீது லிங்கத்தின் மீது போடுவதுபோலப் போட்டு கம்ப்யூட்டர் சாம்பிராணியை பற்ற வைக்க தீப்பெட்டியை பொருத்தினேன்.மூன்றாவது குச்சியையும் சுழன்றடித்த காற்று அணைத்தது.  இம்மாதிரியான தருணங்களில் தெய்வங்கள்மேல் தோன்றும் புகார்கள் ஏதும் மனதில் தோன்றவில்லை.  திரும்பி மனைவி முகத்தைப் பார்க்க எழுந்த எண்ணத்தை  அடக்கியபடி குனிந்து ஒடுங்கியமர்ந்து இன்னும் நான்கு குச்சிகளுக்குப் பிறகு   கற்பூரத்தை முதலில் கொளுத்தினேன். சாம்பிராணியையும் கொளுத்தி நிற்க வைத்தவுடன் தொட்டு வணங்கி , கீழே வந்து மண்ணில் முழு உடலும் படிய வணங்கினேன். மண்ணையே எடுத்து நெற்றியில் பூசிக்கொள்ள அவர்களும் அப்படியே செய்தார்கள்.வேகமாக திரும்பி நடக்கையில் அந்த இடத்தைக் கடக்கையில்  ஒருகணம் கூர்ந்து நோக்கினேன். அது அதே இடத்திலேயே கிடந்தது. ஏன் அதை அடிக்க வேண்டுமென்ற வெறி மனதில் எழவில்லை என எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. வரும்போதே தொலைபேசியில் சீனுவிடம் பேசினேன். பதற்றம் குரலிலேயே தெறித்தது. பார்க்கப் போனவரைப்  பிறகு பார்த்துக்கொள்ளலாம் என   உடனே வீட்டிற்கு வந்து பக்கத்து வீட்டிலிருந்த ஒரு வண்டியையும் வாங்கி தயாராக வைத்திருந்தான் மருத்துவரைப் பார்க்க டவுனுக்கு போவதற்காக.

சீனுவின் வண்டியை ஒட்டியபடியே பின் தொடர்ந்தேன். மனைவி, “ஏங்க, பயலோட காலு வீங்கற மாதிரி இருக்குங்க ” என்றதும் கவனித்து பார்த்தபோது சாதாரணமாக நரம்பு தெரியும் பாதத்தில் சற்று பூசினாற்போல மேடிட்டிருப்பது தெரிந்தது. குரலில் பதட்டம் தெரியாதவாறு “அதெல்லாம் ஒன்னுமில்லை” என்றேன்.

வண்டியின் பின்னால் அமர்ந்து சீனுவின்   வயிற்றை இரு  கைகளாலும் இறுக்கிக்கொண்டு , மயக்கம் கொண்டதைப்போல அவன்  முதுகில் தலையை  சாய்த்தபடி செல்லும் மகனைப் பார்த்தபோது,  சீனு என் முதுகில் சாய்ந்தபடி இதேபோல் வந்தது நினைவுக்கு வந்தது. சென்னைக்கு சென்று  ஆறு மாதத்திற்குப் பிறகு  ஒன்பதாம் வகுப்பு கோடை விடுமுறைக்கு , முதல் முறையாக  ஊருக்கு வந்தபோது என்னிடம் அவன் பேசவேயில்லை. முதல்ல   இரண்டு நாட்களுக்கு , என் கண்ணிலேயே படவில்லை. பிறகு பார்த்தபோதும் விலகி விலகியே சென்றான். அவனைப் பார்ப்பதற்காகவே இவ்வளவு தூரம் வந்தவனை தவிர்த்தபோது முதலில் கோபமும் வெறுப்பும்தான் வந்தது. பிறகுதான், அன்பால்தான் இப்படி நடந்துகொள்கிறான் என்பது புரிந்தது. நானே அவனைப் பார்ப்பதற்காக சென்றேன்.

கிணற்றுக் கொல்லையில் இருப்பதை தெரிந்துகொண்டு அங்கே போனேன். தரையோடு இருக்கும் கிணற்றுக்குள்  நாலைந்து பேர்  குதித்து குளித்துக்  கொண்டிருக்க, இருவர்,  கிணற்றின் உட்புறமாக சுற்றி கீழிறங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த  படிக்கல்லில்  அமர்ந்து சிறிய வாளியில் பசும் மஞ்சளாய் தளும்பிய  தண்ணீரை மொண்டு உடம்பில் ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.  கிணற்றின் ஓரமாக நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை , அவன் அறியாத மாதிரி அருகில் சென்று சட்டென்று கிணற்றுக்குள் தள்ளிவிட்டேன். அவனுக்கு நன்றாக நீச்சல் தெரியுமென்பதால்தான் அதை செய்தேன். ஆனால் , அதை அவன் எதிர்பார்க்காததால், குதிப்பதுபோல இல்லாமல் பக்கவாட்டில் உடலில் அடிபடுமாறு விழுந்தான். அதோடு படிக்கல்  ஒன்றின் மீதும் மோதிக்கொண்டான். ரத்தம் லேசாக வெளிவருமளவிற்கு  அவன் அடிபட்டதை பார்த்தபோது திகைத்துவிட்டேன். எதுவும் புரியாமல் அப்படியே நின்றேன். நீருக்குள் இருந்தவர்கள்தான் அவனை தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவர்களின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு உடனே டவுனில் இருக்கும் மருத்துவமனைக்கு போகுமாறு கூறினார்கள். உடல் தளர மயக்கமாக இருந்தவனை என் பின் அமரவைத்து அருகே கிடந்த பனை நாரால் எங்கள் இருவரையும் இணைத்துக்கட்டி வேகமாகப் போகச் சொன்னார்கள். முன்பக்கம் சற்று குனிந்தபடி மேடுபள்ளங்களில் மட்டும் சாய்ந்துவிடாமல் மெதுவாகவும்  மற்ற இடங்களில் வேகமாகவும் சென்று மருத்துவமனையை அடைந்தேன். அங்கிருந்தவர்களின் உதவியோடு உள்ளே கொண்டுபோய் படுக்க வைக்கப்பட்டவனை சோதித்துப்  பார்த்த மருத்துவர் “அதிர்ச்சியாலதான் மயக்கமாயிருக்காரு.  நீருக்குள் இருந்த கல் என்பதால் பெரிய காயம் உண்டாகவில்லை. கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவார்”  என்றார் ஊசி போட்டபடி.

அறந்தாங்கி ஜி.ஹெச்சின் பெரிய நுழைவு வாயிலுனுள் நுழைந்து, அருகில் நின்றுகொண்டிருந்த காவலரிடம் “எமர்ஜென்சி எங்கே ” என விசாரித்துச்  செல்ல நானும் கூடவே சென்று வண்டியை நிறுத்திவிட்டு சோர்வாக சாய்ந்திருந்த குமரனை கைதாங்கியபடி இறங்கவைத்து உள்ளே அழைத்துச் சென்றேன். சத்தம் கேட்டு நிமிர்ந்த செவிலியிடம் “பையனை பாம்பு கடித்துவிட்டது, ஒருமணி நேரமாச்சு, கொஞ்சம் வேகமா பாருங்கம்மா ” என்று கேவலாகச் சொன்னேன். பரிதவித்தபடி என் பின்னால் நின்ற சீனுவையும் மனைவியையும் ஒருமுறை நோக்கிவிட்டு, பையனை அருகில் இருந்த நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு வேகமாகச் சென்று அடுத்த அறையில் இருந்த மருத்துவரை அழைத்து வந்தார். மருத்துவர் வந்த வேகத்தை பார்த்தபோது விபரம் சொல்லியிருப்பார் எனத் தெரிந்தது.

“பாம்புதான்னு தெரியுமா”
“ஆமா, டாக்டர்”
“ஏன்னா, சிலர்  பூச்சிகள் கடிச்சதை பாம்புதான் கடிச்சிடுச்சுனு பயந்து வருவாங்க, நீங்க பாம்பை பார்த்தீங்களா, எப்படி இருந்தது ”
”  பாம்புதான், ஒரு முழ நீளத்துல சாம்பல் கலரா இருந்துச்சு, நானே பார்த்தேன் சார்” கேட்டபடியே காலை அழுத்திப் பார்த்தார்.
“சார், மணிக்கட்டை நல்லா இறுக்கமா கட்டிட்டேன், இப்ப கால் வீங்கியிருக்கிறதப் பார்த்தா பயமா இருக்கிறது”
“மொதல்ல அந்த கட்ட அவுறுங்க, இந்த கட்டுனாலதான் வீங்கியிருக்கு”  என்றார் கோபமாக.
“ஊசி ஒன்னு போடறேன், அப்பறம் இரத்தத்தை டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு என்னுன்னு பார்க்கலாம். ஏதாவது இருந்தா இரவெல்லாம் தங்கவேண்டியிருக்கும்.    பதட்டப்படாம அப்படி வெளியில உட்காருங்க ” என்று கூறியபடி செவிலியிடம் சென்று பேசினார். கட்டியிருந்த நாரை  அவிழ்த்து கோடுபோல பதிந்திருந்த தடத்தை தடவியபோது குமரன் முனகினான்.  நான் முகத்தை பார்க்கவில்லை.  செவிலி வந்து  ஊசி போட்டுவிட்டு இன்னொரு சிரஞ்ச் எடுத்துவந்து இரத்தம் எடுத்துச் சென்றார்.

சோர்ந்து அமர்ந்திருந்த என்னருகில் வந்தமர்ந்த சீனு “சாமி கும்பிடலாம்னு வந்தவங்களுக்கு இப்படி ஏண்டா நடக்குது ” என விம்மினான். நான் அவனை தோளில் சாய்த்துக் கொண்டபோது அன்றைக்கு இவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அமர்ந்திருந்தது நினைவிலாடியது. மின்னல் வெட்டியதுபோல  அந்தப் பாம்பின் முகம் மனதில் தோன்றியது. என் பையனைக் கடித்த பாம்பை அடிக்கத் தோன்றாதது ஏன் என்பது சற்று புரிவது போலிருந்தது. எதிரில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் என் முகம் தெரிந்தபோது எல்லாம் தெளிவானது. அன்றைக்கு சீனுவை கிணற்றில் தள்ளிவிட்டபோது என் முகமும் விளையாட்டாய் வினை செய்த குழந்தையையொத்த  அந்த பாம்பின் முகத்தைபோலத்தான் இருந்திருக்கும்.   “சாமி,  பாம்பின் உருவில் வந்ததென்று ” யாராவது கூறியிருந்தால் நேற்றுவரை  நான்கூட நம்பியிருக்கமாட்டேன் என்றே தோன்றியது. அதனால், வேறெதும் சொல்லாமல்    “ஒன்றும் பிரச்சனை இருக்காது ” என்று தெளிந்த முகத்துடன்,  நம்பிக்கையாய்க் கூறிய என்னை வியப்போடு பார்த்தார்கள் என் மனைவியும் நண்பனும்.

Viewing all 1152 articles
Browse latest View live